Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category

உடற்பயிற்சி கட்டாய தேவை

இன்றைய நவீன நாகரிக உலகில் வாழும் நாம் உடற்பயிற்சியின் தேவையை அத்தியாவசியமாக உணர வேண்டிய காலம் வந்துள்ளது. இன்று நம்மில் பெரும்பாலானோர் ஒரு கதிரையில் இருந்து கொண்டே பல வேலைகளை பல சாதனைகளை கணினிகள் இலத்திரனியல், மின் இயந்திர சாதனங்கள் மூலம் இலகுவாக முடிக்கின்றனர். இதனால் வேகமாக உழைப்பிற்காக சுழன்று கொண்டிருக்கிறோம். இந்த முன்னேற்றம் வேறொரு வழியில் மனிதனின் உடல் தொழிலியலைப் பாதித்துக் கொண்டிருப்பதை எம்மால் உணர முடிவதில்லை. தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்து பல மணிநேரம் […]

Posted in கட்டுரைகள், No Comments »
உயிர்களைக் கொள்ளையிடும் புகையிலை

இன்று உலக அரங்கில் வருடாந்தம் 60 லட்சம் மக்களின் உயிரைக் கொள்ளை கொண்டு பலகோடிக் கணக்கான மக்களை நோயாளிகள் ஆக்குகின்ற புகையிலையின் பிறப்பிடம் அமெரிக்கா 15ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் குளிர் பனி போன்ற விசேட காலங்களில் பாவித்துவந்தனர். இதனை புதிய உலகைக் கண்டு பிடிக்கப்புறப்பட்ட கொலம்பளம், மாலுமிகளும் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் அவதானித்ததாக வரலாறு கூறுகிறது. பின்பு அங்கிருந்து ஸ்பெயின் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்குப் பரவி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி, […]

Posted in கட்டுரைகள், No Comments »
நீர் ஓர் அருமருந்து

இயற்கை எமக்கு வழங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மா மருந்து தண்ணிர் ஆகும். இது எளிமையானது. முறை அறிந்து பயன்படுத்தினால் தவறாமல் பயன் தரும் பக்க விளைவுகள் இல்லாதவை. உடல் அனுசேபம் இயல்பாக நடைபெற போதுமான நீர் இன்றியமையாதது ஆகும். சிறுநீர் மலம் எமது உடலின் மிகப்பெரிய கழிவுகள் நீக்கியான தோலின் மூலம் வியர்வை, மூச்சு, சளி ஆகியவற்றின் வழியாக ஒவ்வொரு விநாடியும் நமது உயிராற்றல் நமது உடலை நோயற்றதாகச் செய்வதற்காக நடைபெறும் செயற்பாட்டில் […]

Posted in கட்டுரைகள், No Comments »
நீரிழிவு நோயாளர்களும் இன்சுலினும்

இன்சுலின் என்றால் என்ன? எமது உடல் உறுப்பாகிய சதையியினால் சுரக்கப்படும் ஒர் ஒமோன் ஆகும். இது உடலின் குளுக்கோசின் செறிவைப் பேணுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. இந்த இன்சுலின் ஒமோனானது ஒருவரில் சுரக்கப்படுவது குறைவாகவோ அல்லது சுரக்கப்படும் தொழிற்பாட்டில் தடை ஏற்படும்போதோ அவரில் குருதிக் குளுக்கோசின் செறிவு சீராக இருக்காது. இந்நிலையைத்தான் நீரிழிவு நோய் என அடையாளப் படுத்துகிறோம். இந்த நிலையில் ஒரு நீரிழிவு நோயாளிக்கு இன்சுலின் தொழிற்பாட்டைக் கூட்டுவதற்கு மாத்திரைகளும், இன்சுலின் ஊசி மருந்தும் சிபார்சு செய்யப்படுகிறது. […]

Posted in கட்டுரைகள், No Comments »
சூழல் மாசடைவதைத் தடுப்பது எப்படி?

சூழல் மாசடைதல் என்றால் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் சூழலில் உட்புகுவதால் அதன் சமநிலையில் ஏற்படும் குழப்பம் அல்லது ஒரு பாதிப்பு ஆகும். எமது சூழலை நீர் நிலம், வளி என வகைப்படுத்த முடியும். எனவே, சூழல் மாசடைதல் என்பதை நீர் மாசடைதல், நிலம் மாசடைதல், வளி மாசடைதல் என்ற வகையில் நோக்கலாம். வளியானது இரசாயனக் கழிவுகள் காற்றில் கலத்தல்மூலம் மாசடைகிறது. அவையாவன: Co2, So2, CFS அத்துடன் நைதரசன் ஒட்சைட்டுக்கள் (Nitrogen Oxides). இவை தொழிற்சாலைகள், வாகனங்கள்மூலம் […]

Posted in கட்டுரைகள், No Comments »
விலங்கு விசர் நோயும் அதன் கட்டுப்பாடும்

Rhabdo virus ஒருவகை வைரஸ்கிருமியால் இந்த நோய் ஏற்படுத்தப்படுகிறது. இந்த நோய்க் காவியாகப் பிரதானமாக நாய், அரிதாகப் பூனை, குரங்கு கீரி, ஓநாய், நரி காணப்படுகிறது. இந்த நோய்க் கிருமி நரம்புத் தொகுதியைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது. விலங்குவிசர் நோய் நோய்த் தொற்றுக்குள்ளான விலங்கினது உமிழ் நீரில் வைரஸ் கிருமிகள் செறிந்து காணப்படும். நோய்த் தொற்றுக்குள்ளான விலங்கு கடிக்கும்போது அல்லது மென்சவ்வுள்ள பிரதேசத்தில் நக்கும்போது அல்லது வேறு வழிகளில் உமிழ்நீர் நேரடியாகத் தொடுகையுறும்போது தொற்றை ஏற்படுத்துகிறது. நாயில் […]

Posted in கட்டுரைகள், No Comments »
உடற்பருமன்

மிகவும் சாதாரணமாக அதிகரித்துவரும் உலகளாவிய பிரச்சினை இந்த உயர் உடற்பருமன். நீங்களும் அதிற் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உடற் பருமன் உடையவரெனின். சில தசாப்தங்களின் பின்னர் உயர் உடற்பருமன் உடைய சமூகத்தைத்தான் சாதாரண சமூகமாகக் கருதப்படவேண்டிய நிலையும் ஏற்படலாம். அவ்வாறான நிலையைத் தடுக்க நீங்கள் தயாராகுங்கள். உயர் உடற் பருமன் இது உடலில் மேலதிக கொழுப்புச் சேமிப்பால் ஏற்படும் ஆரோக்கியமற்ற நிறையதிகரித்த நிலையாகும். உயர் உடற்பருமனை அடையாளப்படுத்துதல் இதற்காக BMI என்ற கணிப்பீடு வழக்கத்திலிருக்கிறது. BMI 30 […]

Posted in கட்டுரைகள், No Comments »
வயிற்றோட்டம்

ஒருநாளைக்கு மூன்று முறைக்குமேல்நீராகமலம் செல்வதையே வயிற்றோட்டம் என்கிறோம். வயிற்றோட்டம் ஏற்படும்போது ஒருவரின் உடலிலிருந்து நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன அகற்றப்படுகின்றன. இவ்வாறு அகற்றப்படுதலானது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றது. இந்த ஆபத்தைத் தடுக்க வெளியேறிய நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன மறுபடியும் உடலுக்குள் சேர்க்கப்பட வேண்டும். நோய்க்கிருமிகள் உடலினுள் செல்வது வயிற்றோட்டம் வருவதற்கு ஒரு முக்கிய காரணியாகும். கிருமிகள் உடலுக்குள் செல்லும் முறைகள் அழுக்கடைந்த கைகள் அழுக்கடைந்த தண்ணீர் அழுக்கடைந்த உணவு முறையாகவும் போதியளவும் சமைக்கப்படாத உணவுகள் வயிற்றோட்டத்தைத் […]

Posted in கட்டுரைகள், No Comments »
குழந்தைகளுக்கு ஆறு மாதத்துக்குப் பின்பு உணவு கொடுப்பது எவ்வாறு ?

உங்கள் வீட்டில் 6 மாதத்தினை.அடையும் குழந்தை உள்ளதா? அவ்வாறாயின் நீங்கள் இக்கட்டுரையைக் கவனத்துடன் வாசியுங்கள். உங்கள் குழந்தைக்கான தாய்ப்பாலுடன் கூடிய உணவூட்டலுக்குத்தயாராவதற்கு இதுதுணைபுரியும். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதம்வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதுவரை கற்கண்டு நீர், கொதித்தாறிய நீர், கொத்தமல்லி, பனங்கட்டி, குளுக்கோசு நீர் என்பன கொடுக்கத் தேவையில்லை. தாயப்பாலிலுள்ள ஊட்டச்சத்தும் நீரும் குழந்தையின் வளர்ச்சிக்கும்,அதன் பசியை ஆற்றவும் போதுமானது. ஆறுமாத முடிவில், மேலதிக ஊட்டச்சத்துக்களைப் பெறவும் குழந்தையின் வளர்ச்சிக்கும், பசியைப் போக்கவும், குழந்தை […]

Posted in கட்டுரைகள், No Comments »
சுவாச நோய்களைத் தடுப்போம்

தற்போதைய உலகில் இறப்பு வீதத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் நீண்டகாலத்திற்குரிய சுவாச நோய்கள் (வருடத்துக்கு நான்கு மில்லியன்) விளங்குகின்றன. அதிகரித்த புகையிலைப் பாவனை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சரீர உழைப்பின்மை மற்றும் அதிகரித்த மது பாவனை என்பவையே இந்த நோய்களின் தூண்டற் காரணிகளாக அமைகின்றன. பொதுவான சுவாசநோய்களாவன மூக்கிலிருந்து நீர்வடிதல் தடிமன்அல்லது ஜலதோஷம் கக்குவான் இருமல் மார்புச்சளி நோய் சுவாசக்குழாய் அழற்சி ஆஸ்துமா நியூமோனியாக்காய்ச்சல் கசம் சன்னி சுவாசப்பைப் புற்றுநோய் பொதுவாகச் சுவாசநோய்கள் கீழ்வரும் காரணிகளால் ஏற்படுகின்றன. […]

Posted in கட்டுரைகள், No Comments »
« Older Entries
Newer Entries »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com