Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



சூழல் மாசடைவதைத் தடுப்பது எப்படி?

சூழல் மாசடைதல் என்றால் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் சூழலில் உட்புகுவதால் அதன் சமநிலையில் ஏற்படும் குழப்பம் அல்லது ஒரு பாதிப்பு ஆகும். எமது சூழலை நீர் நிலம், வளி என வகைப்படுத்த முடியும். எனவே, சூழல் மாசடைதல் என்பதை நீர் மாசடைதல், நிலம் மாசடைதல், வளி மாசடைதல் என்ற வகையில் நோக்கலாம்.

வளியானது இரசாயனக் கழிவுகள் காற்றில் கலத்தல்மூலம் மாசடைகிறது. அவையாவன: Co2, So2, CFS அத்துடன் நைதரசன் ஒட்சைட்டுக்கள் (Nitrogen Oxides). இவை தொழிற்சாலைகள், வாகனங்கள்மூலம் விடப்படுகின்றன.நீரானது கழிவுப்பொருட்கள் ஆறு, குளங்கள், நிலக்கீழ் நீருடன் கலத்தல்மூலமும் மற்றும் கழிவுநீர் துயநீருடன் கலத்தல் (waste water discharge) மூலமும் மாசடைகிறது. நிலமானது தொழிற்சாலைக் கழிவுகள் விவசாயக் கிருமிநாசினிகள் போன்றவை நீரில் விடப்படுவதால் மாசடைகிறது.இக்கழிவுப்பொருட்களாவன: ஐதரோகாபன்கள், பாரஉலோகங்கள் (heavy metals
(Hg), pesticides, chlorinated hydrocarbons) என்பனவாகும்.

இதுதவிரக் கதிர்வீச்சு மாசடைதல், ஒலி மாசடைதல் போன்றவையும் தற்போதைய உலகின் ஒரு முக்கிய பிரச்சினைகளாக வளர்ந்து வருகின்றன.

கதிர்வீச்சுமூலம் மாசடைதல் (Radiation Polution) அணுத்தொழில் நுட்பம், அணு இரசாயன சக்தி உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றின்மூலம் எற்படுகின்றது. ஒலி மாசடைதல் (Noise-Pollution), Gurigaigigi Qangjadi (Roadway Noise) ada:Gang)di, தொழிற்சாலை இரைச்சல் (Industrial Noise) போன்றவற்றின்மூலம் ஏற்படுகின்றது. இது மட்டுமல்லாது ஒளி மாசடைதல் (Light Pollution, வெப்பமாசடைதல் (Thermal Pollution) என்பனவும் சூழல்மாசடைதலில்பங்கு வகிக்கின்றன.

சூழல் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புக்களைப் பார்த்தால், வளிமாசடைதல் மனிதன் உட்படப் பல உயிரினங்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. நீர்மாசடைதல் ஒரு நாளைக்கு 14, 000 உயிரிழப்புக்களுக்குக் காரணமாகின்றது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் கழிவு நீர்குடிநீருடன் கலப்பதால் இவை நிகழ்கின்றது.
இவ்வாறு ஏற்படும் சூழல் மாசடைதலையும், அதன் விளைவுகளையும் சர்வதேச ரீதியில் தடுப்பதற்கு உணவுக்கழிவுப் பொருட்கள், விவசாயக் கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுப் பொருட்கள் போன்றவற்றை கழிவுப் பொருள்களை “waste Minimization” என்ற தொழிற்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. அதாவது கழிவுப் பொருள்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதன்மூலம் கழிவின் அளவு குறைக்கப் படுகிறது. மற்றும் தூசி அகற்றும் முறைகளான (Cyclones Electrostatic Precipitator Baghouse) போன்ற கருவிகள் கையாளப்படுகின்றன. கழிவு நீர் அகற்றும் முறைகளான Oil water separator, sedimentation, Dissolved air Floatation, Bio Filters, vapor recus system பேன்ற நடைமுறைகள் கையாளப் படுகின்றன. இந்நடைமுறைகளை எமது நாட்டிலும் அமுல்படுத்து வதன்மூலமும் சூழல் மாசடைவதைத் தடுக்கமுடியும்.

மற்றும் சாதாரணமாக எமது வீடுகளிலும், எமது சுற்றப்புறங்களிலும் உள்ள சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் தனித்துவமாகச் செயற்படவேண்டும்.

இதிலே வீடுகளில் உக்கக்கூடிய குப்பைகளைக் குழிகளில் இட்டு மூடுதல், சரியான மலசலகூடங்களை அமைத்தல், தேங்கிநிற்கும் வாய்க்கால்களில் அடைப்பினை நீக்கி நீரோடும்படி செய்தல், பொலித்தீன் போன்ற உக்காத பொருட்களை எரித்துவிடுதல், சுற்றுப்புறங்களில் உள்ள பற்றைகளை வெட்டி அகற்றுதல் என்பன உள்ளடங்கும்.

இதன்மூலம் சூழல் சுத்தமாக்கப்படுவதுடன் நுளம்புகளின்மூலம் பரவும் கொடிய நோய்களையும் (டெங்கு, மலேரியா) தடுக்கமுடியும். மற்றும் புற்றரைகளை வளர்த்தல், மரங்களை நடுதல், காடழிப்புகளைத் தவிர்த்தல், மிகையான கிருமிநாசினிப் பாவனையைத் தவிர்த்தல், மீள்சுழற்சிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல் போன்றவற்றால் மண்ணரிப்பு, மண்வளம் குன்றல் என்பவற்றைத் தவிர்த்து, இதன்மூலம் ஏற்படும் சூழல் மாசடைதலைத் தடுக்கமுடியும் மற்றும் கழிவு நீர் தேங்குதல், கடலுடன் கலத்தல், குடி நீருடன் கலத்தல் என்பவற்றைத் தடுத்து “கழிவுநீர் சுத்திகரிப்பு” மூலம் அந்நீரை மீள்பாவனைக்கு உட்படுத்த முடியும். நீர், நிலம், வளி என்பவற்றாலான சூழல் மாசடைதலை மேற்காட்டிய முறைகள் மூலம் தடுப்பதால், சுகாதாரமுடையதும், சுத்தமானதுமான நோய்களற்ற வாழ்க்கைத் தரத்தைப் பெறுவோம்.

R.C.A.அருணன்,
2007/FM/06 மருத்துவபீட மாணவன்

Posted in கட்டுரைகள்
« விலங்கு விசர் நோயும் அதன் கட்டுப்பாடும்
நீரிழிவு நோயாளர்களும் இன்சுலினும் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com