You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category

பழங்களை தினமும் உண்டு வந்தால் வகை 2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. சுமார் இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான 25 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. பழங்கள் அதிலும் குறிப்பாக, திராட்சை, ஆப்பிள், புளூபெர்ரி போன்றவற்றை சாப்பிட்டு வருபவர்களுக்கு நீரிழிவு வரும் ஆபத்து 25 சதவீதத்தால் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, […]

ஹெப்பாடிடிஸ்-சி வகைகாமாலை நோய்க்கு 12 வாரத்திற்குள் நிவாரணம் கொடுக்கும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் குணமாகியுள்ளது. காமாலைக்கான சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்று கருதப்படுகிறது. தொடர்புடைய விடயங்கள் உடல்நலம் தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் பாதி நேரத்தில்தான் தான் காமாலையில் இருந்து குணமடைகிறது. மோசமான நோய் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் அல்லது உடல் நீரின் மூலம் மற்றவர்களுக்கு காமாலை பரவுகிறது. பச்சை குத்தும் […]

மூளை முதுமை நோய் அல்லது ஞாபகமறதி நோய் என்று சொல்லப்படுகின்ற Dementia நோயாளர்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் 4 கோடிகளையும் தாண்டி வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த நோயாளர்களின் பராமரிப்புக்காக மொத்தச் செலவு 7.5 பில்லியன் இலங்கை ரூபா. இது உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியின் 1 வீதம் ஆகும். இதன் தாக்கங்களை சமாளித்துக் கொள்வது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாட்டிற்கு ஒரு பாரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துவருகின்றது. டிமென்ஷியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த இருபது […]

வாழைப்பழங்கள் எல்லாக் காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு மலிவான பழமாகும். இது அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதை சிலர் செம்பழமாகவும் சிலர் அளவாகப் பழுத்த நிலையிலும் வேறு சிலர் கனிந்து பழுத்த நிலையிலும் உண்ண விருப்பப்படுவர். ஆனால் கனிந்து பழுத்த தோல் கறுத்த பழங்களை உண்ணும் போது அதில் சில மேலதிக நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நன்கு பழுத்த தோல் கறுத்த வாழைப்பழத்திலுள்ள ஒரு பதார்த்தம் குருதியிலுள்ள வெண்குருதிக்கலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க […]

நீடுழி வாழ தினமும் ½ Kg மரக்கறி, பழவகைகள் உண்ண வேண்டும். மரக்கறி பழவகைகளை தினமும் உண்பதன் மூலம் சலரோகம், உயர்குருதி அமுக்கம், அதிகரித்த கொலஸ்ரோல் என்பவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். அன்றாட உணவில் காய், கனிகளின் அளவே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ […]

உலகின் பல பகுதிகளில் பருவநிலைகளில் மாற்றம் ஏற்படப் போகிறது. முன்னைய பருவ நிலை மாற்றங்களையும், தற்போது எற்பட்டு வருகின்ற பருவநிலை மாற்றங்களையும் அவதானிக்கும் போது இவற்றுக்கிடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதை எம்மால் அவதானிக்க முடியும். எமது பிரதேசத்துப் மழைவீழ்ச்சி, சுற்றாடல் வெப்பநிலை என்பவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எமது பிரதேசத்தில் மட்டுமென்றி உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வருவதை பல நிறுவனங்கள் உறுதிசெய்து வருகின்றது. புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன […]

“புற்றுநோய் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது” மனித வளர்ச்சிக்கு சவாலாக பல புதிய புதிய நோய்கள் தோன்றி வருவதாகப் பொதுவாக பேசப்பட்டாலும், புதியன என கருதப்படும் பல நோய்கள் பல ஆயிரம் வருடங்களிற்கு முன்பே இருந்ததிற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன. தற்போதைய சுடான் பகுதியில் 3000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு இளைஞனின் எலும்புக் கூட்டில் புற்றுநோய்க்கான சான்றுகளை கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டனின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் மிக பழமையான புற்றுநோய் பாதிப்பு என்று இதுவரை நம்பப்படும் சம்பவத்தை […]

காற்று மாசடைவதே உலகின் சுகாதாரத்திற்கு ஒரே பெரிய அச்சுறுத்தல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2012 ஆண்டில் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாடால் இறந்துள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலான மரணங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள ஏழை, நடுத்தர வருமான நாடுகளில் ஏற்பட்டுள்ளன. வீடுகளின் உட்புறச் சமையல் அறைகளில் சமையல் நெருப்புடன் வேலை செய்யவேண்டியிருக்கும் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் அளவிற்கு மீறி பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பு […]

வாய்ப்புற்றுநோய்க்கு முக்கிய காரணம் பாக்கு ஆகும்.ஆசியாவின் பல பகுதிகளில் பாக்கு மெல்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இவ்வாறு செய்வதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், அதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தாய்வான் மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தாய்வானின் சுங் ஷான் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 13 பேர் மரணம் அடைவது தெரியவந்துள்ளது. தாய்வானின் […]

தற்போது உலகளாவிய ரீதியில் பெருகி வரும் புற்றுநோய் ஒரு பிரச்சினையாக உள்ளது. இதனை ஆரம்பநிலையில் கண்டறிவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் பல சிக்கலான விலை கூடிய சோதனைகள் செய்ய வேண்டிய தேவை இருந்து வருகின்றது. இந்த நிலையில் தற்பொழுது வெற்றிகரமாக நடாத்தப்பட்டு வரும் சில ஆய்வுகள் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு எளிய சிறுநீர்ப்பரிசோதனை பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது. ஒருவரின் சிறுநீரைக் கொண்டு அவருக்கு புற்றுநோய் இருக்கின்றதா என்று கண்டறிந்து சொல்லக்கூடிய எளிய பரிசோதனையை வடிவமைக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தை தாங்கள் […]