கடந்த பல வருடங்களாக, யாழ் போதனா வைத்தியசாலையில், குழந்தைகள் பராமரிப்புப் பிரிவானது, ஒரு சிறிய இடத்திலேயே, இடவசதிக் குறைவுடன் இயங்கி வந்தது. கடந்த வருடங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் பலனாக, பல்வேறு உபகரணங்கள் பெறப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக இயங்குவற்கு வாய்ப்பு உண்டாகியது. எனினும் இடவசதிப் பற்றாக்குறையினால் அதன் முழுப் பலனையும் அடைய முடியவில்லை. அண்மையில் யாழ்போதனாவைத்திய சாலையின் முன்னைய மகப்பேற்று அறுவைச் சிகிச்சை கூடப் பகுதியானது புனரமைக்கப்பட்டு 16.01.2014 அன்று Dr. முருகையா தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான நிதியுதவியை அமெரிக்காவில் வசித்து வரும் யாழ்ப்பாணத் தமிழர்களான Dr.வீரவாகு முருகையாவும் தமது காலஞ்சென்ற புதல்வி சிவரூபினி முருகையா ஞாபகார்த்தமாக வழங்கினார்கள்.
புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவுற்கான (NICU) புணரமைப்பு பணிகளை அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனமும் (IMHO – ) யாழ்ப்பாணம் பொது வைத்திய சாலை அபிவிருத்திச் சங்கமும் இணைந்து நடைமுறைப்படுத்தின.
எனவே எதிர்வரும் காலங்களில் புதிதாய் பிறந்த நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கும், குறைமாதக் குழந்தைகளுக்கும் தகுந்த அதிதீவிர சிகிச்சைகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Dr.ந.ஸ்ரீசரவணபவன்
குழந்தை வைத்திய நிபுணர்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்