யாழ் போதனாவைத்திய சாலையின் நீரிழிவு சிகிச்சைப் பரிவின் சிந்தனையில் உதித்த புதிய ஆரோக்கிய உணவு
தேவையான பொருட்கள்
கொள்ளப் பயறு – 100 கிராம்
மிளகுத் தூள் – 1தேக்கரண்டி
சீரகத் தூள் – 1தேக்கரண்டி
சுக்குப்பொடி – 1தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 1
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கொள்ளுப் பயறை முதல்நாள் நன்கு கழுவி ஊற வைக்கவும். அடுத்தநாள் அந்தத் தண்ணீருடன் சேர்த்து நன்கு மசியும் வரை அவிய விடவும். அவிந்ததும் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்ட பின் மிளகு தூள், சீரகத்தூள், சுக்குப்பொடி கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். மேலாக வடிகட்டி எலுமிச்சம்புளி சேர்த்துப் பருகலாம்.
- இதனைப் பருகுவதால் அடிக்கடி பசி ஏற்படாது
- கொழுப்புச்சத்து அற்றது.
- உடலை இலகுவாக வைத்திருக்க உதவும்.