நீரிழிவு ஓர் பேரழிவு!
- நீரிழிவானது இன்று ஒரு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
நீரிழிவானது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவருகின்றது. இதன் தாக்கத்தை வளர்ச்சியடைந்த நாடுகளில் மாத்திரமல்லாது இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலும் காணக் கூடியதாகவுள்ளது. அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஏறக் குறைய 23 சதவீதமானோர் நீரி ழிவினால் அல்லது நீரிழிவுக்கு முந்திய நிலையினால் Pre Diabetes பாதிக்கப்பட்டுள்ளனர்.
தவறான உணவுப் பழக்க வழக் கங்கள் மற்றும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை Sedentary Life Style என்பவையே இதற்குக் காரணமாகும். - நீரிழிவானது உலகளாவிய ரீதியில் பெருகுவதற்கு Panolemic தவறான வாழ்க்கைமுறைகள் பிரதான காரணமென்று குறிப்பிட்டிருந் தீர்கள். இதுபற்றி சிறிது விரிவாகக் கூறுங்கள்?
எமது வாழ்க்கை முறையானது இன்று சிறிது சிறிதாக மாறி வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. துரித (Fast Food) மற்றும் மேலைத்தேய உணவுகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியானது இன்று உலகமயமாதலின் Globalization மூலம் எமக்குக் கிட்டியுள்ளது. இயந்திரமயமான வாழ்க்கை முறை காரணமாக உடற்பயிற்சி செய்வதற்கு நேர மற்றுப் போனமையும் இதற்குக் காரணமாகும். - நீரிழிவுநோயானது எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது.
நீரிழிவுவகை 2(Type 2 Diabetes) ஆனது அதிகளவு சிறுநீர் கழித்தல், அதிக தண்ணித்தாகம், அதிகபசி மற்றும் கணிசமான உடல்நிறைக்குறைவு என்பவற்றுடனோ இவ்வாறான அறிகுறிகள் இன்றியோ வெளிக்காட்டப் பட நேரிடலாம். எமது பிராந்திய (தென்னாசிய) மக்களில் நீரிழிவு ஏற்படுவதற்கான அபாயம் Risk மிக அதிக மாகும். எனவே இளவயதிலேயே நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகின்றது. - நீரிழிவுநோயாளருக்குநீங்கள்கூறும்அறிவுரைகள் யாவை? நீரிழிவு நோயாளரொருவர் வைத்தியரிடம் கலந்தாலோசிக்கும் நேரம் உண்மையில் மிகக் குறை வாகும். எனவே நீரிழிவு நோயாளியொருவர் தனது நோய் பற்றி மிகுந்த அக்கறையுடன் செயற்பட வேண்டியது மிக அவசியமாகும்.இவ்வாறு செயற்படுவதற்கு மிகுந்த பொறுப் புணர்வும் அர்ப்பணிப்பும் அவசியமாகும். ஆரோக் கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் தின சரி உடற்பயிற்சி ன்பவற்றைக்கடைப்பிடிப்பதன்மூலம் நீரிழிவைக்கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும்.
வைத்திய ஆலோசனைக்கேற்ப மருந்துகளை கிரமமாக எடுக்கவேண்டியதும் மிக அவசியமாகும். குறித்த காலத்துக்கு ஒரு முறை வைத்திய ஆலோ சனைப்படி குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவு, கொழுப்பின் அளவு என்பவற்றைப் பரிசோதித்து அறிந்து கொள்வதும் மிக அவசியமாகும். - நீரிழிவு நோய் பற்றி எமது மக்களிடையே சில தப்பபிப்பிராயங்கள் உள்ளன. இது பற்றிச் சிறிது கூறுங்கள்?
முதலாவதாக மெற்போமின் Metformin மருந்து பற்றிய பிழையான கருத்தொன்றுள்ளது. இந்த மருந்தானது சிறு நீரகப் பாதிப்பை ஏற்படுத்து மென்ற பிழையான எண்ணக் கருவொன்று எம்மவர்களிடையே காணப்படுகின்றது. உண்மையில் இந்த மருந்தானது, உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதற்தர First line நீரிழிவு மருந்தாகும். இந்த மருந்தானது சிறுநீரகம் பாதிப்படைவதை உண்மையில் தடுக்கின்றது. எந்தவொரு நீரிழிவு நோயாளியினதும் சிறுநீரகத் தொழிற் பாடானது வைத்தியர்களினால் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பரிசோதிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு நிலைக்கு மேல் சிறுநீரகப் பாதிப்பு இருந்தால் மட்டுமே மெற்போமின் மருந்தின் அளவானது குறைக்கப்படுகிறது/ நிறுத் தப்படுகின்றது
இரண்டாவது உணவுப்பழக்கவழக்கங்கள். வாழ்க்கை நடைமுறைகள் தொடர்பிலும் பல பிழையான கருத்துக்கள் எம்மிடையே உள்ளன. உதாரணமாக சிவப்புக்குத்தரிசி நல்லது என்பதால் எவ்வளவும் உண்ணலாம் என நினைக்கிறார்கள். உண்மையில் எடுக்கும்.உணவின் அளவுப்பிரமானமும் Glycaemic load மிக முக்கியமானதாகும். - நீரிழிவினால் ஏற்படும் நீண்டகாலப்பாதிப்புக்களைப் பற்றிக் கூறுங்கள்?
நீரிழிவு நோயினால் பிரதானமாக சிறு குரு திக் குழாய்களைத் தாக்கும் பாதிப்புக்களும் Microvascular diseases பெரியகுருதிக்குழாய் களைப் பாதிக்கும் பிரச்சினைகளும் Macro Vascular diseases ஏற்படுகின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்புற்றுவதனாலும் சிறந்த முறையில் குருதி யிலுள்ள குளுக்கோஸ் அளவு குருதியமுக்கம் மற்றும் கொழுப்பின் அளவு என்பவற்றைப் பேணுவதன் மூலமும் இவ்வாறான பிரச்சினைகளை Complications தவிர்க்க/தடுக்கமுடியும். - கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு பற்றிச் சிறிது கூறுங்கள்?
எமது மக்களைப் பொறுத்த வரையில் நீரிழிவு ஏற்படும் சாத்தியமானது அதிகமென்பதால் அனைத்துக் கர்ப்பிணிப் பெண்களையும் ஆரம்பத்திலேயே நீரிழிவுப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும்.. Universal Screening கர்ப்ப காலத்தின் ஆரம்பப்பகுதியில் நீரிழிவு இருப்பதாகக் கணடறியப்பட்டால் அதனை Overt diabetes ஏற்கனவே உள்ள அறியப்படாத நீரிழிவு என அழைக்கலாம். அனைத்துக் கர்ப்பிணிப் பெண் களும் 22-24 ஆம் கர்ப்பவாரத்தில் OGTT என அழைக்கப்படும் குளுக்கோஸ் உட்கொண்டு சீனிமட்டம் பார்க்கும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படு வது அவசியமாகும். இதன்போது நீரிழிவு கண்டறியப்பட்டால் பிரசவத்தின் போதான நீரிழிவு . Gestational Diabetes என்று அழைக்கப்படும்.
கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டு இலக்குகள் வேறுபாடானவை. Metformin தவிர்ந்த எந்தவொரு குளிகையையும் பயன்படுத்த முடியாது. அநேகமானநேரங்களில் இன்சுலின் ஊசியின் பாவனையும் தேவைப்பட நேரிடுகிறது. - இறுதியாக நீரிழிவு நோயைக்கட்டுப்படுத்த எடுக்கப்படும் செயற்றிட்டங்கள் பற்றிக்கூறுங்கள்?
சுகாதார அமைச்சானது பலவகையான செயற்றிட்டங்களை இலங்கை முழுவதும் மேற்கொண்டு வருகின்றது. ஆரோக்கியமான சிறுவர்.உலகத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் வளமான எதிர்கால சந்ததியொன்றை உருவாக்கமுடியும். இலங்கை அகஞ்சுரக்கும் தொகுதியியல் நிபுணர்களின் கல்லூரியின் ஒரு பிரிவான இலங்கை நீரிழிவுப் பேரவையானது (Srilanka Diabes Federation) பலதரப்பட்ட ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை ஆரம்பித்துநடைமுறைப்படுத்திவருகின்றது.
எமது யாழ். போதனாவைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையமும், பலவகையான சமூக செயற்றிட்டங்களை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.
மருத்துவர் எம்.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல்
சிறப்பு வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை
Posted in கட்டுரைகள்