Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



முகப்பருக்களைக் குறைக்க

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பருக்களும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. இளம் வயதினரிடையே இது ஒரு முக்கிய பிரச்சினையாகவும் இருக்கிறது. சிலருக்கு மாறாத வடுக்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. பொதுவாக முகப்பருக்கள்

  • எமது தோலின் கீழ் காணப்படும் நெய்சுரப்பிகளால் சுரக்கப்படும் Sebum எனும் திரவப்பொருள் அதிகமாக சுரக்கும்போது முகப்பருக்கள் தோன்றும் வாயப்பு உண்டு. சுரக்கப்படும் அளவை பொறுத்து பருக்களின் அளவும் வேறுபடும்.
  • இலிங்க ஓமோன்கள் இளம் பருவத்தில் அதிகமாகச் சுரப்பதாலும் பருக்கள் இப்பருவத்தில் அதிகமாக தோன்றும்.
  • எமது தோலில் காணப்படும் பக்ரீரியாக்கள் தோலின்கீழ் உள்ள நெய்சுரப்பிகளில் தொற்றுக்களை ஏற்படுத்துதல்.
  • சிலருக்கு பாரம்பரிய காரணிகள் செல்வாக்கு செலுத்துதல்.
  • எமது சருமத்தை மிருதுவாக்கப் பயன்படும் அழகு சாதனப் பொருள்கள் உதாரணமாக Tars, Chlorinated Hydroc abons போன்ற பொருள்கள்
  • அதிக வெப்பம்
  • முகத்தில் அதிகளவில் எண்ணெய் இருப்பது இதனால் அழுக்குகள் படிந்து அப்படியே சருமத்தில் தங்கவைத்து விடுகின்றன. இதனால் தோலின் துளைகளில் அடைப்புகள் ஏற்பட்டு பருக்கள் ஆக மாறிவிடுகின்றன.
  • மலச்சிக்கல்
  • சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதல் போன்ற பல காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகின்றன.

எனவே முகப்பருக்களைக் குறைக்க நம் கடைப்பிடிக்க வேண்டியன சில.

  • ஒரு நாளைக்கு 5 – 6 முறை முகத்தை சுத்தமாக கழுவுதல், எண்ணெய் பசை அதிகமாக உள்ள சோப்புக்கள் பாவித்தலைத் தவிர்த்தல்.
  • அதிகளவு நீர் அருந்துதல்
  • பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைவகைகள் உணவில் அதிகமாக எடுத்தல்.
  • எமது தோலுக்கு பாதுகாப்பு அளிக்ககூடிய விற்றமின் ”ஏ” விற்றமின் ”ஈ“ நியாசின் நாகம் உள்ள உணவுப் பொருள்களை எடுத்தல்.
  • சருமம் வரண்டு போகாமல் இருப்பதற்கு கிளிசரின், olive oil பாவித்தல்.
  • உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்ககூடிய உணவுகள் பானங்கள் எடுத்தல்
  • நீராவி முகத்துக்க பிடித்தல்
  • பருக்கள் தோன்றினாலும் அவற்றைக் கிள்ளவோ, நசுக்கவோ, உடைக்கவோ கூடாது. இதனால் வடுக்கள் வருவதற்குரிய வாய்ப்புக்கள் உண்டு. வைத்தியரிடம் காட்டி ஆலோசனை பெறுதல் அவசியம்.
  • காற்றோட்டமான சூழலில் வசித்தல்
  • தீவிரமாக இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுதல்

எஸ்.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்

Posted in செய்திகள்
« குறையாத சுகத்துடன் வாழ்வோம்….
தாதியாக பயிற்சி பெற விரும்பகிறீர்களா? »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com