இலங்கையில் தாதிய பயிற்சிக் கல்லூரியில் கற்கும் சகல மாணவர்களுக்கும் தொழில் உத்தரவாதத்துடன் பயிற்சிக் காலத்தில் மாதாந்த கொடுப்பனவாக 16000 ரூபாய்க்கு மேற்பட்ட தெகை சம்பளமாகவும் கிடைக்கின்றது.
இது கா. பொ. த உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தில் ஆகக் குறைந்த அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்ததும், கா. பொ. த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், தாய்மொழி மற்றும் ஆங்கிலப் பாடத்தில் திறமைச் சித்தியும் பெற்ற மாணவர்களுக்கான சரியான தொழித் தேர்வாகும்.
ஒவ்வொரு வருடமும் தாதிய பயிற்சிக் கல்லூரிகளுக் கூடாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேறுகின்றார்கள். இலங்கையில் உள்ள தாதிய பயிற்சிக் கல்லூரிகள் பற்றிய விபரங்கள் வருமாறு:-
1. NTS-அநுராதபுரம்
2. NTS-அம்பாறை
3.NTS-பதுளை
4. NTS-மட்டக்களப்பு
5.NTS-கொழும்பு
6. NTS-காலி
7. NTS-அம்பாந்தோட்டை
8. NTS-யாழ்ப்பாணம்
9. NTS-ஸ்ரீ ஜெயவர்த்தனபுர
10. NTS- களுத்துறை
11.NTS-கந்தானை
12. NTS-கண்டி
13. NTS-குருநாகல்
14. NTS-மாத்தறை
15.NTS-முல்லேரியா
16. NTS-இரத்தினபுரி
17. NTS-வவுனியா
அரசாங்க வர்த்தகமாணியினை பார்வையிட்டு அதில் உள்ள தகவல்களின் படி தாதியப் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து கொள்ளலாம்.