Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நல்ல இனப்பூச்சிகளையும் தேனீக்களையும் பாதிக்காத பூச்சி கொல்லி

தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவது பற்றி விஞ்ஞானிகள் கவலைகொண்டுள்ள நிலையில், மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்ற தேனீ இனத்தை பாதிக்காமலேயே தாவரத்தைப் பாதுகாக்கும் விதமான பூச்சிக்கொல்லி மருந்தை தாம் கண்டுபிடித்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் ‘புனல்‘ வடிவத்தில் வலைபின்னும் சிலந்தியிலிருந்து எடுக்கப்பட்ட டாக்ஸின் சுரப்பையும், ஸ்னோடிராப் எனப்படும் சிறு தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட புரதத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்ட புதிய இரசாயன மூலக்கூற்றை இந்த பூச்சிக்கொல்லி மருந்து கொண்டிருக்கிறது.

செயற்கை இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான பாதுகாப்பான மாற்றாக இந்த இயற்கை வழி பூச்சிக்கொல்லி பயன்படக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடே உலகின் பல நாடுகளில் தேனீக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடையக் காரணம் என்று கருதப்படுகிறது.

நாம் உணவுத் தாவரங்கள் பெரும்பான்மையானவை மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களையே பெரிதும் நம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Proceedings of the Royal Society என்ற அறிவியல் சஞ்சிகையில் இது பற்றிய ஆராய்ச்சியின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Posted in செய்திகள்
« நோய்வாய்ப்பட்டவர்களின் உரிமைப்போராட்டம் பகுதி -3
சிகரட் பெட்டிகளில் எச்சரிக்கை படங்கள் 50% -60%  மேற்பரப்பில் பிரசுரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com