Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



சலரோக நோயும் உங்கள் குழந்தையும் பாகம் 11

21.2 சமூக – உளநல விடயங்கள்

சிறுவர்களின் சலரோகம் சம்பந்தமான சமூக – உளநலம் சார்பான விடயங்கள்.

நோய் பற்றிய உளத்தாக்கம் பிள்ளையிலும் குடும்ப உறுப்பினர்களிலும் முன்னரே இருக்கின்ற பிரச்சினைகளைப் பெரிதாக்கும்.

அதாவது தவறான ஆரம்ப பொருத்தப்பாடுகள், மன அழுத்தம், மன எழுச்சி, குறைந்த தன்னப்பிக்கை என்பனவே அவையாகும். இதைவிட இன்னும் சில பிரச்சினைகளும் உள்ளன.

  • அதிகம் கவனமெடுக்கும் பெற்றோர்
  • மிக இறுக்கமான சலரோகச் சிகிச்சை முறைகள்
  • நோயை இனங்கண்ட சிறிது காலத்துக்கு அதை ஏற்க மறுத்தல்
  • வேறுபட்டு இருப்பதாக உணர்தல்
  • தோழர்களால் கேலிசெய்யப்படுதலும் வேறுபடுத்தப்படலும்.

சமூக உளநலம் சார்ந்த விடயங்களுக்கான காரணங்களாவன நீண்டகால மருந்துப் பாவனை, சலரோக நோயாளிகள் மீதான சமூகத்தின் எண்ணக்கருக்கள், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படலும் மறுக்கப்படலும், நோயால் ஏற்படும் மற்றைய விளைவுகள் என்பனவாகும்.

இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முறைகள்.

  • உளவள, சமூக உதவிகளைப் பெற்று அது சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்கவும்.
  • நோயைச் சமாளிக்கும் திறமைகளைக் குழந்தைகளில் வளர்க்கவும்.
  • குடும்பத்திலும் நண்பர்களிலும் சுமுகமான தொடர்பைப் பேணவும்.
  • பிள்ளைக்குத் தேவையான போது அறிவுரை வழங்கவும்.

பெற்றோர் அல்லது குடும்பத்தவருடைய உள – சமூக செயற்பாடுகள்

சில பெற்றோர்கள் நோய் இருப்பதை ஏற்றுக் கொண்டு தகுந்த சிகிச்சையளிக்க உதவுகின்றார்கள். சிலர் அதை ஒரு பிரச்சினையாக எண்ணி, ஏற்க மறுக்கிறார்கள். சில பொதுவான பிரச்சினைகள் கீழே தரப்பட்டுள்ளன.

  • இரத்தத்தில் வெல்லம் குறைவதால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கப் பயப்படுதல்.
  • பிள்ளையின் நடத்தை, பாடசாலை, எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுதல்
  • சிகிச்சை முறையில் இரு பெற்றோரினதும் பங்களிப்புத் தொடர்பான வாக்குவாதங்கள் யாரால் நோய் காவப்பட்டது என ஒருவரை ஒருவர் பழிசுமத்துதல்.
  • துக்கம் நெருக்கீடு, கோபம், மனஅழுத்தம், என்பவற்றால் பாதிக்கப்படுதல்.
  • பண நெருக்கடி. உதாரணம் – பிரயாணங்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வேளையில் ஏற்படும் நிதி நெருக்கடிகள்

உங்களுக்கு உபயோகமான சில தகவல்கள்

  • உங்கள் பிரச்சினைகள் பற்றி வைத்தியர், சலரோகம் பற்றி அறிவுறுத்தும் தாதி, உளவியலாளர், சமூக சேகவர் ஆகியோரிடம் கலந்துரையாடுங்கள்.
  • ஒரே வகையான விடயங்களை மற்றைய பெற்றோர்கள் எவ்வாறு கையாளுகின்றார்கள் என்பது பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.
  • தினசரி அட்டவணை ஒன்றைத் தயாரியுங்கள். அடையவேண்டிய இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் குழந்தையுடன் கூட்டுமுயற்சியில் ஈடுபடுங்கள்
  • பிள்ளையைப் பராமரிக்கின்ற ஏனையவர்களுக்கும் சிகிச்சை முறையைச் சொல்லிக் கொடுங்கள். இரத்த வெல்லத்தின் அளவைக் கண்காணித்தல், இன்சுலின் கொடுத்தல், பிள்ளையின் நாளாந்தப் பராமரிப்பு என்பன பற்றிக் கற்பியுங்கள்.
  • தகுந்த அமைப்புகளிடமிருந்து சமூக, பொருளாதார உதவிகளைப் பெறுங்கள்.
  • நோயினால் குடும்பத்தில் எழும் பிளவுகளைத் தவிர்த்து ஒற்றுமையாக குழந்தையிற் கவனம் செலுத்துங்கள்.
  • இரு பெற்றோர்களும் சம அளவான பொறுப்புணர்வுடன் குடும்பத்திலுள்ள எல்லாப் பிள்ளைகளையும் கவனிக்க வேண்டும். சாயங்கால நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகாசனம், தியானம், பிரார்த்தனை என்பவற்றில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் பங்கு பெறுதல்.

 

26-3-2014 14.3.58 13

பிள்ளைகளுக்கும் சுகாதார உத்தியோகத்ததுகளுக்கும் இடையான

திறந்த உரையாடல்கள் சிறந்த கட்டுப்பாட்டுக்கு உதவுகின்றன.

Posted in சிந்தனைக்கு
« மகத்துவமான தாய்ப்பால்
பிள்ளைகளின் ஆரோக்கியம் பெற்றோரின் கவனிப்பிலேயே! »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com