Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

ஒரு கணம் சிந்தித்தால் என்ன?

யாழ். குடாநாட்டில் அதிகரித்துவரும் தற்கொலை பலரது மனதிலும் ஏதோ இனம் தெரியாத பயணத்தையும், இயலாத் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. பெறுமதிமிக்க உயிரின் தாற்பரியம் பூச்சி கொல்லிகளால் கரைந்து கொண்டு அலரிக்கொட்டைகளில் அழிந்து கொண்டும் இருக்கிறது. இத்தனை காலமும் தமிழ் மக்களின் உயிரிழப்புகள் பல வரலாறுகளை ஏற்படுத்தியிருக்க இப்படியாக அவலச் சாவுகள் மக்கள் மனதில் வெறுமையை ஏற்படுத்தியுள்ளன. ஏன் இத்தனை தற்கொலைகள்? யாரில் என்ன தவறுள்ளது? நம்மில் ஒரு தடவையேனும் தற்கொலை எண்ணம் தோன்றி மறையாதவர்கள் எத்தனை பேர்? விரல் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
போதுமம்மா கோதுமை மா!

மண் வீட்டில் வாழ்ந்தாதலும் மகிழ்வோடு வாழ்ந்திருந்தோம் – இப்போ முன்வீட்டில் சலரோகம் முடக்கில் கொலஸ்ரோலாம்! பின்வீட்டில் பிறஷர், பக்கத்தில் பக்கவாதம் என்வீட்டில் என்ன வரும் நானறியேன் கண்டதையும் தின்றுவிட்டுக் கதையளந்து திரிந்ததனால் உண்டதை உளைத்து உரமாக்க  மறந்ததனால் குண்டரெண்டுஆகிக் கூனாகிக் குறையாகிக் கிண்டலுக்கு ஆளாகும் கீழ் நிலமை வந்ததெப்போ? நாற்பதுகள் தாண்டியபின்  நாட்டுக்குள் வந்த ஒன்று (ch) சீப்பாக வந்து எம்மை சீரழித்த கோதுமை மா! மூப்புவென்ற நம் வாழ்வின் முதுகெலும்பை முடக்கியது ஆப்பாக வந்து எங்கள் […]

Posted in சிந்தனைக்கு, 1 Comment »
உணவு தெய்வீகம் (Food is god)

மனிதன் உயிர்வாழ்வதற்கும் உயர்வு பெறுவதற்கும் மனித நேயமிக்க உயர் பண்புகளுடன் வாழ்வதற்கும் தலையாய துணை போவது அவன் உட்கொள்ளும் உணவு. இதைப் பண்டைக் காலத்து ஞானிகள் தவமுனிவர்கள், அறிஞர்கள் முதல் இன்றைய நவீன விஞ்ஞானிகள் வைத்தியர்கள் வரை அறிந்துள்ளார்கள். “அன்னப் பிரம்மம்” அன்னம் என்பது உணவு பிரம்மம் என்பது இறைவன் எனவே உணவு தெய்வீகமானது. “அன்னம் ந நிந்த்யாத்” “உணவை இகழாதே’ இவை எல்லாம் தேவ வாக்குகள். எனவே இன்றும் நாங்கள் நல் வாழ்வு வாழ்வதற்கு உணவு […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
விஷமாகும் உணவு! விழித்திடுக

அன்றைக்கு நாம் வாழ்ந்த நலமான வாழ்விழந்தோம் இன்றைக்கு நாட்டிலே எங்கு திரும்பிடினும் புற்றுநோய்!, எங்கிருந்து புதிதாக முளைத்ததிது? மற்றுச் சில உணவுகளில் மரணத்தைத் தேடுகிறோம். தகரத்தில் அடைத்ததுவும் பிளாஸ்ரிக்கில் நிரப்பியதும் நிகரற்ற பொருள் என்று நீட்டி முழக்குகிறோம்! நகரத்து வாழ்க்கைக்கு நாளாந்தம் பழகியதால் நுகரும் பொருளிலெல்லாம் நோய் சேர்த்தே வாங்குகிறோம். உரம் தெளித்துப் பளபளப்பாய் மினுங்கும் மரக்கறிகள் மரத்தோடு சேர்த்து வைத்து மருந்தடித்த மாங்கனிகள் நிறத்தால் நமைக் கவரும் வாழைப்பழக் குலைகள் திறமென்று வாங்குகிறோம் தீயதெல்லாம் தேடுகிறோம். […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
விளையும் பயிர் முளையில் கருகுவதா?

குடும்பச் சுமையும் வண்டில் சுமையும் தாங்கும் நிலை இந்த பிஞ்சுக்கு எப்படி வந்தது? உடல், உள, சமூக நன் நிலைய உண்மையான சுகாதாரம் என்று வரைவிலக்கணப்படுத்தும் நாம் இதற்கு என்ன செய்யப்போகிறோம்? சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் குடும்பச்சுமைக்காக வேலையில் ஈடுபடுத்தப்படுவது உங்களுக்கு தெரியவரின் உடன் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான வழிகாட்டலை தர நாங்கள் தயாராக உள்ளோம்.

Posted in சிந்தனைக்கு, No Comments »
நான் சிகரெட் பேசுகிறேன்…

ஏய் மனிதனே…. என்னை எப்போதும் உன் உதடுகளால் அரவணைக்கும் நண்பனே…. நீ ஒரு உன்னதமான தியாகி – ஏன் தெரியுமா? நீ உன்னைப் பற்றியோ, உன் உயிரைப்பற்றியோ கவலைப்படாதவன் என்னை உருவாக்கும் முதலாளிக்கும் லாபம் கிடைப்பதற்காக உன் உயிரையே துச்சமாக மதித்து வேள்வி நடத்துகிறாய் ஆமாம், உன் வாயிலேயே வேள்வி நடத்துகிறாய் எல்லோருக்கும் இறந்த பின்புதான் கொள்ளிக்கட்டைவைப்பார்கள் ஆனால் உனக்கான கொள்ளியை நீயே வாயில் வைத்திருக்கிறாய், உயிருடன் இருக்கும்போதே…. கரி படிந்து இருக்கும் புகைக்கூடு உன் நுரையீரல் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
பஞ்சபோஷா

செய்முறை சுத்தப்படுத்திய பயறு, உழுந்து, கௌபி, சோயா அவரை, பருப்பு, என்பவற்றை வறுத்து குத்தி தோல்நீக்கிய பின் மாவாக்கி தேங்காய்ப்பூ சேர்த்து பக்கற்றில் அடைத்து வைத்து பரிமாறும் போது சுடுநீர் சேர்த்து குழைத்து பரிமாறலாம். தேவையான பொருட்கள் பயறு 100 கிராம் உழுந்து 100 கிராம் கௌபி 100 கிராம் சோயா அவரை 100 கிராம் பருப்பு 100 கிராம் தேங்காய்ப்பூ சிறிதளவு (வறுத்தது)   இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி விகிதமாலா ஜீவானந்தன்

Posted in சிந்தனைக்கு, No Comments »
மொரு மொரு

தேவையான பொருட்கள் வாழைக்காய்  – 1 பெரியது மஞ்சள் – 1 சிட்டிகை உப்பு – அளவாக செய்முறை வாழைக்காயை முழுதாக கழுவி எடுத்து பச்சைத் தோலை மட்டும் மெலிதாக சீவி எடுக்கவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு உப்பு, மஞ்சள் அளவாக கரைத்து வைக்க வேண்டும். வாழைக்காயை குறுக்காக வட்டம் வட்டமாக சீவல்களாக வெட்டி உடனேயே மஞ்சள், உப்புத் தண்ணீர் கலவையில் பிரட்டி எடுக்க வேண்டும். இந்த வாழைக்காய் சீவல்களை ஆவியில் அவித்து […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
வறோக்கா

தேவையான பொருட்கள் பயறு 500 கிராம் உழுந்து 500 கிராம் பெருஞ்சீரகம் 1 தே. க நற்சீரகம் 1 தே. க செத்தல்மிளகாய் தேவைக்கேற்ப வெள்ளைப்பூடு 10 பல்லு கறிவேப்பிலை தேவைக்கேற்ப மஞ்சள் ¼ தே. கரண்டி மிளகு தேவைக்கேற்ப உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் தேவைக்கேற்ப செய்முறை பயறு, உழுந்து, மிளகு பெருஞ்சீரகம், நற்சீரகம் என்பவற்றை அரைத்து மாவாக்கவும். செத்தல் மிளகாயையும் இடித்து எடுக்கவும். உப்பு மஞ்சள்தூள், கறிவேப்பிலை, வெள்ளைப்பூடு இடித்து, மாவுடன் சேர்த்து ஒன்றாக குழைத்து […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
தானியரம்

தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு 200 கிராம் வெங்காயம் 100 கிராம் பயறு 200 கிராம் உழுந்து 100 கிராம் கௌப்பி 100 கிராம் பால்மா 6 மேசைக்கரண்டி உப்பு சிறிதளவு பேக்கிங்பவுடர் ½ தேக்கரண்டி ஏலக்காய் சிறிதளவு நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி சுடுநீர் 1 கப் செய்முறை தானியங்களை சுத்தப்படுத்தி வறுக்கவும். வறுத்தவற்றை கிரைண்டரில் திரித்து கொள்ளவும். உருளைக்கிழங்கை அவித்து மசிக்கவும். வெங்காயத்தை கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.  இவற்றை மாவுடன் சேர்த்து ஏலக்காய், பேக்கிங்பவுடர் என்பவற்றை சேர்த்துக் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
« Older Entries
Newer Entries »
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com