தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு | 200 கிராம் |
வெங்காயம் | 100 கிராம் |
பயறு | 200 கிராம் |
உழுந்து | 100 கிராம் |
கௌப்பி | 100 கிராம் |
பால்மா | 6 மேசைக்கரண்டி |
உப்பு | சிறிதளவு |
பேக்கிங்பவுடர் | ½ தேக்கரண்டி |
ஏலக்காய் | சிறிதளவு |
நல்லெண்ணெய் | 2 மேசைக்கரண்டி |
சுடுநீர் | 1 கப் |
செய்முறை
தானியங்களை சுத்தப்படுத்தி வறுக்கவும். வறுத்தவற்றை கிரைண்டரில் திரித்து கொள்ளவும். உருளைக்கிழங்கை அவித்து மசிக்கவும். வெங்காயத்தை கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். இவற்றை மாவுடன் சேர்த்து ஏலக்காய், பேக்கிங்பவுடர் என்பவற்றை சேர்த்துக் கலக்கவும். பால்மாவை சுடுநீரில் கரைத்துக் கொள்ளவும். பாலுக்குள் மாக்கலவையை சிறிது சிறிதாக சேர்த்துக் ரொட்டி மாப்போல் குழைக்கவும். நல்லெண்ணெய் சேர்த்துக் குழைக்கலாம். குழைத்த மாவை பலகையில் வைத்து உருட்டி பிஸ்கற் அச்சினால் வெட்டி Oven இல் 160 பாகை F ல் 20 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான தானியரம் தயார்.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி கோமதி சிவதாஸ்