செய்முறை
மேலே கூறப்பட்ட எல்லா மாவகைகளையும் அரித்து கலந்து உப்புத்தூள் தேங்காய்பூ, ஏலக்காய்தூள், சேர்க்கவும். பின் பால் மாவுடன் சுவையூட்டியையும் சேர்த்து சுடுநீரில் கரைத்து கலவை மாவுடன் சேர்த்து குழைத்து உருண்டைகளாக்கிப் பரிமாறவும்.
முறைகட்டிய பயறு மா தயாரிப்பதற்கு பயறை 10 மணித்தியாலம் ஊறவிட்டு பின் 10 – 12 மணித்தியாலம் முளைக்க வைத்து ( தட்டில் பரவி மூடி வைக்கவும்) பின் தோலை நீக்கி கழுவிய பின் வெயிலில் 2 – 3 நாட்கள் காய விடவும்.
முளைகட்டிய பயறு (வறுத்தது) மா | 100 கிராம் |
வறுத்து தோல் நீக்கிய உழுத்தம்மா | 100 கிராம் |
வறுத்து தோல் நீக்கிய சோயா அவரைமா | 100 கிராம் |
வறுத்து தோல் நீக்கிய கௌபி மா | 100 கிராம் |
வறுத்து அரைத்த கொள்ளுமா | 50 கிராம் |
தேய்காய்ப்பூ | 75 கிராம் |
ஏலக்காய் தூள் | தேவையானளவு |
சுடுநீர் அல்லது பால்மா ( பசுப்பால் பாவிக்கலாம்) | தேவையானளவு |
சுவையூட்டி | தேவைக்கேற்ப |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி சறோஜினிதேவி சண்முகநாதன்