புரத பிஸ்கட்
செய்முறை
பயறு, பருப்பு என்பவற்றை வறுத்து தூளாக்கவும், பாலை நன்றாகக் காய்ச்ச வேண்டும். பின்னர் இனிப்பூட்டி இட்டுக் கொள்ள வேண்டும். மேற்கூறிய பழங்களை சிறுதுண்டுகளாக்கி பின்னர் பாலிற்கு இடவும். பால் இறுகி வந்த பின்னர் வறுத்து தூளாக்கிய பருப்பு, பயறு என்பவற்றை சேர்த்துக் குழைக்க வேண்டும். தட்டையாக தட்டி பின்னர் oven இல் அவித்துக் கொள்ளவேண்டும்.
தேவையான பொருட்கள்
பால் ( பசுப்பால்) | ½போத்தல் |
பருப்பு | 500 கிராம் |
பயறு | 500 கிராம் |
அன்னாசிப்பழம் | பாதித்துண்டு |
பப்பாசிப்பழம் | பாதித்துண்டு |
அப்பிள் | 1 |
உப்பு | தேவையானளவு |
இனிப்பூட்டி | தேவையானளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி கஜானி தேவதாஸ்
Posted in சிந்தனைக்கு