நீரிழிவு என்னும் நிலை ஏற்ப்படுவதற்கு காரணமாக அமைவது உடலில் காணப்படும் இன்சுலின் எனும் ஹோர்மோனின் உற்ப்பத்தி குறைவடைதல் அல்லது அதன் செயற்ப்பாட்டில் ஏற்படும் குறைபாட்டின் காரணத்திலாகும். குருதியில் காணப்படும் குளுக்கோஸானது உடற்கலங்களுக்குள் ஊடுறுவுவதற்கு இன்சுலின் அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இன்சுலின் இன்றி உங்குளுக்குத் தேவையான சக்தியை பெற்றுக்கொள்ள முடிவதில்லை.
உடலில் இன்சுலின் அளவு குறையும்போது உடற்கலங்களுக்குள் குளுக்கோஸ் உட்புக முடியாத நிலையில் குருதியில் குளுக்கோஸின் அளவு மிகவும் அதிகரிப்பதன் மூலம் நீரிழிவு நோய் நிலை ஏற்படுகிறது.
- இன்சுலின் ஒரு ஹோர்மோன் ஆகும். இது இரைப்பையின் சற்று கீழ் அமைந்துள்ள சதையி(கணையம்) எனும் உறுப்பினுள் சுரக்கின்றது.
- இன்சுலிழைன ஊசியேற்றுவதன் மூலம் குருதியில் உள்ள குளுக்கோஸ் உட்செல்ல இடமளிக்கிறது.
- நீரிழிவுநோய் இரண்டுவகைப்படும். இதில் முதலாம் வகையில் அவதியுறும் நோயாளிகளில் அவர்களின் கணைத்தில் இன்சுலின் சுரக்கப்படும் தன்மை அற்ற நிலையில் அதனை ஊசியேற்றுவது கட்டாயமாகும். அவர்களுக்கு முற்றிலும் தேவையான இன்சுலினை வெளியில் இருந்து பெற்றுக் கொடுத்தல் அவசியமாகும்.
- இரண்டாம் வகையில் அவதியுறும் நோயாளிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் மட்டும் மருந்துகளுக்கு பதிலாக அல்லது மருந்துகளுக்கு மேலதிகமாக இன்சுலின் பெற்றுக்கொடுக்க நேரிடும். மேலும் நோய்வாய்ப்பட்ட நிலையிலல் அல்லது கர்ப்பமுற்ற நிலையில் மருந்துகளுக்கு பதிலாக அல்லது மேலதிகமாக இன்சுலின் பெற்றுக்கொடுக்க நேரிடும். மேற்படி இன்சுலினை வைத்தியர்களின் சிபாரிசுக்கு அமைவாக சுயமாக அல்லது பிறரின் உதவியுடன் ஏற்றிக்கொள்ளலாம்.
- இன்சுலினை 2 பாகை செல்சியஸ் தொடக்கம் 8 பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் குளிரூட்டியில் வைக்கவும் இன்சுலினை ஒரு போதும் அதிகுளிரூட்டியில் வைக்க வேண்டாம். மற்றும் சூரிய ஒளிபடும் இடங்கள் மற்றும் அதிக உஷ்ணமான இடங்களில் வைப்பதினை தவிர்த்துக்கொள்ளவும்.
- குளிரூட்டி அற்ற சந்தர்ப்பங்களில் இன்சுலினை களஞ்சியப்படுத்த புதிய மண்குடம் ஒன்றினுள் அரைவாசிக்கு குளிர்ந்த சாதாரண நீரை நிரப்பவும். அதனுள் சிறிய மண்சட்டி அல்லது பிளாஸ்டிக் போத்தல் ஒன்றினை இட்டு அதற்குள் இன்சுலின் போத்தலை வைக்கவும். மண்குடத்தை குளிர்மையான இடத்தில் வைக்கவும்.
- இன்சுலின் குப்பியின் மேலுறை மற்றும் உள்ளடக்கத்தினை பரிசீலித்துக் கொள்ளவும் காலாவதியான மற்றும் உள்ளடக்கம் வெள்ளைப்படிமம் அல்லது தூளாக படிந்து காணப்படுமாயின் அல்லது கபில நிறமான இன்சுலினை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளவும்.
- இன்சுலின் குப்பியை குலுக்குவதைத் தவிர்த்துக்கெள்ளவும். இன்சுலின் மருந்தை கலக்குவதற்கு எமது ஒரு உள்ளங்கையில் வைத்து மறுகையினால் மெதுவாக உருட்டவும்.
- பெற்றுக்கொள்ளவேண்டிய இன்சுலின் அளவுக்குச் சமமான வளியை ஊசியினுள் பெற்றுக்கொள்ளலாம்
- போத்தலினுள் ஊசியின் முனையை உட்செலுத்தி ஊசியினுள் முன் பெற்றுக்கொண்டவளியை குப்பியினுள் செலுத்தவும்.
- அதன் பின்னர் போத்தலைத் தலைகீழாக பிடித்து ஏற்றப்பட வேண்டிய இன்சுலின் அளவினை ஊசியினுள் இழுத்துக்கொள்ளவும்.
- தற்போது ஊசியை இன்சுலின் குப்பியில் இருந்து வெளியில் இஐத்துக் கொள்ளவும். வளிக் குமிழிகள் காணப்படின் அவற்றை வெளியில் தள்ளவும்.
தொடரும்…..
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்
யாழ் போதனாவைத்தியசாலை