Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



எலும்பு தேய்வடையும் நோய்

எமது உடலிலுள்ள எலும்பு களின் உள்ளகக் கட்டமைப்பில் (Structural integrity) ஏற்ப்படும் பிரச்சினைகளால் என்பிழையத்தின் அளவு குறைவடைந்து ஏற்படுகின்ற ஒரு நோயாகும்.

இந்த நோயுள்ள வர்களுக்கு எலும்புஉடைந்துபோகும் தன்மை (Fracture) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும்.  இவ்வாறான நோயாளருக்கு. எலும்பில் உடைவு வெடிப்பானது இடுப்பெலும்பு முள்ளந்தண்டெலும்பு அல்லது மணிக்கட்டு எலும்பு போன்றவற்றிலே பிரதானமாக ஏற்படுகின்றது.

இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

சாதாரணமாக மாதவிடாய் வருகின்ற பெண்ணொருவருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவாகும். மாதவிடாய் நின்ற பின்னர் (Meno pause) பெண்ணொருவரின் உடலிலுள்ள (Cestrogen) எனப்படுகின்ற பெண்ஹோர்மோன் குறைவடைய நேரிடுவதால் இந்த நோய் ஏற்படு வதற்கான சாத்தியக்கூறு அதி கரிக்கின்றது. இதனைத்தவிர வேறு பல காரணங் களாலும் இந்தநோய் ஏற்படுகின்றது. குறைந்த வயதில் மாதவிடாய்தடைப் படுவோர். சனணித்தொகுதிக் குறைபாடுள்ளோர் (Hypo gonadism) தைரொயிட், நீரிழிவு போன்ற பல ஹோர்மோன் பிரச்சினையுள்ளோர் மற்றும் உணவு சமிபாட்டுத்தொகுதி. ஈரல் தொடர்பான பிரச்சினையுள் ளோர் போன்றோரிலும் இது ஏற் படுகின்றது. ஸ்ரீரொயிட்டு போன்ற பல வகையான மருந்துகளைத் தொடர்ச்சியாகப் பயன் படுத்து மொருவருக்கும் இந்த நோய் ஏற் படுவதற்கான அபாயம் அதிக மாகும்.

நோய் தடுப்பு வழி முறைகள்

சில இன மக்களுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதேபோல் குடும்ப உறுப்பின ரொருவருக்கு இருக்கும் போதிலும் இந்த நோய் வருவதற்கான சாத்தியக் கூறு அதிகமாகும். இந்நோய் வருவதற்கான அபாய முள்ளோர் குறிப்பிட்டளவில் போச ணையான உணவை உள்ளெடுப்பது மிக அவசியமாகும். குறிப்பாக கல்சியமுள்ள மற்றும் விற்றமின் D உள்ள உணவுகளைப் போதியளவில் உண்பது அவசிய மாகும். அதேபோல் பாரத்தைத் துக்கும் உடற்பயிற்சிகள் (Weight bearing exercises) மூலமும் எலும்பு உறுதியடைகிறது. புகைத்தல், அளவுக்கு மிஞ்சிய மதுப்பாவனை என்பன எலும்புதேய்வதை அதிகரிக்கின்றன.

எலும்புதேயும் நோயை உறுதிப்படுத்தல்

இந்த நோய் உள்ளவர்கள் சிறு உயரத்திலிருந்து விழுந்தாலே அவர்களுக்கு எலும்பு உடையும் சாத்தியம் அதிகமாக இருக்கின்றது. சிலருக்கு முள்ளந்தண்டு எலும்பு அமுக்கமடைந்து (Compressed tracture) உயரம் குறைவடைந்தது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. பொதுவாக ஒஸ்ரியோ பொறோஸிஸ் நோயால் எலும்புகளில் நோஏற்படுவ தில்லை. மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களுக்கு இந்த நோய் ஏற்படும் சாத்தியம் அதிகமாகும். இளவயதினருக்கு கூட இந்த நோய் ஏற்படலாம். இதற்குப் பல காரணங்கள் இருக் கின்றன. எனவே வைத்தியரொருவர் இந்த நோய் இருப்பதாகச் சந்தே கிக்குமிடத்து மேலதிக பரிசோதனை களை மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்துவது மிகவும் அவசிய மாகும்.

தேவையின் அடிப்படை குருதிப் பரிசோதனைகள் (baseline tests). எலும்புதொடர்பான குருதிப்பரிசோதனைகள் (Bone profile) போன்வற்றை வைத்தியர்கள் மேற்கொள் வார்கள். உடலிலுள்ள Vitamin D யின் அளவையும் தேவையேற்படின் பரிசோதித்துக் கொள்ளவேண்டி யிருக்கும். X a y பரி சோதனை மூலம் எலும்பு தேய்ந்திருப் பதைஅறிந்து கொள்ள முடி யும். DXA Scan எனப்படும் விசேட பரிசோதனை மூலம் ஒஸ்ரியோ பொரோஸிஸ் நோயை மிகவும் துல்லியமாகத் தரம்பிரித்து அறிந்து கொள்ள முடியும்.

ஒஸ்ரியோபொரோஸிஸ் நோய்க்குரிய சிகிச்சைமுறைமை
நோயாளியானவர் வைத்திய ஆலோசனைப்படி, போதுமான அளவு கல்சியம் விற்றமின் D உள்ள உணவுகளை உள்ளெடுத்தல் வேண்டும். பால் மற்றும் அதனோடு தொடர்பான உணவுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். வைத்தியரின் பரிந்துரையின் பேரில் தேவையான அளவில் கல்சி யம் மற்றும் விற்றமின் D மருந்துகளை உள்ளெடுத்தல் அவசிய மாகும்.

அதைவிட Alendromate  எனப்படுகின்ற குளிசையானது வாரத்துக்கு ஒரு முறை வழங்கப்படுகின்றது. இதனை உள் ளெடுக்கும்போது வெறும் வயிற்றில் ஒரு குவளை நீருடன் எடுக்க வேண்டும். அதன் பின்னர் அரைமணி நேரத்துக்கு உணவோ தேநீரோ அருந்தாமல் உட்கார்ந்த அல்லது நின்ற நிலையிலே இருத்தல் வேண்டும் இல்லாவிடில்உணவுக் கால்வாய்த் தொகுதியில் அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு. இந்த மருந்தை உள்ளெடுக்கும் முறை மற்றும் பக்க விளைவுகள் பற்றி வைத்தியர்களிட மிருந்து விவரமாக அறிந்து கொள்ள முடியும். இதேபோல வருடத்துக்கொரு முறை ஊசி மூலம் ஏற்றப்படும் Zolendronic Aud என்ற மருந்தும் எமது நாட்டில் கிடைக்கப் பெறுகின்றது.

வயிற்றுப் புண் (அல்ல) போன்ற நோயுள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ஏற்றப்படும் இந்த மருந்தை
பயன்படுத்திக் கொள்ளலாம். குளிசை மருந்துகள் பொதுவாக 5 வருடத்திற்கும் ஊசி மருந்தானது பொதுவாக 3 வருடத்துக்கும் வழங்கப்படுகின்றது. வைத்திய ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை DXA Scan பரிசோதனையை மேற்கொள்வதும் அவசியமாகும்.

சுகாதார அமைச்சின் நிதியுதவியுடன் யாழ் போதனா மருத்துவமனையில் டி.இ.எக்ஸ்.ஏ ஸ்கான் வசதி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, போதனா மருத்துவமனைகளுக்கு அடுத்ததாக இந்த வசதி யாழ் போதனா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்.M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும், தொகுதியியல் (ஹோர்மோன்), சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ்.போதனா வைத்தியசாலை.

Posted in கட்டுரைகள்
« உயர்குருதி அமுக்கம்
நீரிழிவும் சிறுநீரக நோயும் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com