நீரிழிவு என்பது குருதிக் குளுக்கோஸை உடலால் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும்போது குருதி மட்டத்தில் குளுக்கோஸ் சாதாரண அளவைவிட அதிகரித்த நிலையில் காணப்படும் நிலைமையாகும்.
உலக சுகாதார நிறுவனமானது நீரிழிவுக்கான வரையறையாக Festing Blood Sugar> 7 mmol/l (126 mg/DI) Post Prandict Blood Sugar (PPBS) (உணவு உட்கொண்ட பின் 2மணித் தியாலத்தில் குருதியில் வெல்லத்தின் அளவு) >11.1mmo1/1(200mg/dl) என குறிப்பிடுவதோடு நீரிழிவுநோய்க் கான அறிகுறிகளும் கருத்தில்கொள்ளப்படுகிறது.
நீரிழிவைக் குணப்படுத்தமுடியாது. ஆனால் கட்டுப்பாட்டில்வைத்திருக்க முடியும் கட்டுப்பாடற்ற நீரிழிவால் உடலுறுப்புக்கள் பல்வேறுபாதிப்புக்களுக்குள்ளாகின்றன.
நீரிழிவுநோயும் சிறுநீரகப்பாதிப்பும்
எமது உடலில் இரு சிறுநீரகங்கள் உண்டு இந்தச்சிறுநீரகமானது பல் வேறு தொழிற்பாடுகளை செய்கின்றது.
- குருதியில் உள்ள கழிவுகளை வெளியகற்றுகின்றது.
- நீர் சமநிலையைப் பேணுகின்றது
- அமில கார நடுநிலையைப் பேணுகின்றது.
- குருதி அழுத்தத்தைச் சீராக்கு கின்றது.
- உடற் தொழிற்பாட்டுக்குத் தேவையான ஓமோன்களைச் சுரக்கின்றது.
ஒவ்வொரு சிறுநீரகமும் பலமில்லியன் கணக்கான வடிபாகங்களைக் (Nephro)கொண்டது. இந்தஅமைப் பானது குருதியை வடிகட்டுவதன் மூலம் கழிவுகளையும் மேலதிக நீரையும் அகற்றுகின்றது. நீரிழிவு நோயாளர்களுக்கு அதிகரித்த வெல்லமட்டம் காரணமாக இந்த வடியாக அமைப்பு மெதுமெதுவாகப் பாதிப்படைந்து இறுதியில் குருதியை வடிகட்டுவதில் பாதிப்பு ஏற்பட்டு குருதியில் உள்ளபுரதமும் (albumin)சிறுநீருடன் சேர்ந்து வெளியேறுகின்றது. அதே வேளை சிறுநீரகக் கலங்கள் இறந்த கலங்களால் (Scored tissue) மாற்றீடு செய்யப்படுகின்றது.
எல்லா நீரிழிவு நோயாளர்களும்க சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாவதற்கான சாத்தியக்கூறு உண்டு இந்தச்சிறுநீரகப் பாதிப்பானது மெதுவானதும் நீண்டகாலமானதுமாகும். நீரிழிவு நோயின்வகை நீரிழிவு ஆரம்பித்த வயது குருதியில் வெல்லக்கட்டுப்பாடு உடலின் குருதி அழுத்தகட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணிகளில் சிறுநீரகப்பாதிப்புதங்கியுள்ளது.
நீரிழிவுநோயாளிகளின் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கானகாரணிகள்
- குருதியில் வெல்லமட்டம் கட்டுப் பாடற்றநிலையில் அதிகரித்துக் காணப்படல்
- அதிகளவான உயர் குருதிஅழுத்தம்
- அதிகரித்த எடை போன்றன
ஆரம்ப சிறுநீரகப்பாதிப்பில் அறிகுறிகள் வெளித்தெரிவதில்லை. ஆனால் சிறுநீரகத்தில் நீண்ட காலமாகத் தொடர்ச்சியான பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் சிறுநீரகம் படிப்படியாக செயலிழந்த நிலையில்
- களைப்பு
- உடற்சோர்வு
- குமட்டல்
- வாந்தி
- பசியின்மை
- கால்வீக்கம்
- உடற்கடி
- நித்திரையின்மை
- சுவாசிப்பதில் சிரமம்
- குறைவான சிறுநீர்வெளியேற்றம்
போன்ற அறிகுறிகளுடன் மருத்துவரை நாடுவார்கள் நீரிழிவு நோயாளர்கள் குருதிவெல்ல மட்டத்தை கட்டுப்பாட்டில்வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பின் வேகத்தைக் குறைத்துக் கொள்ளலாம். இதற்காக
- ஆரோக்கிய உணவை உண்ணல்
- சீரான உடற்பயிற்சி செய்தல்
- மருத்துவ அறிவுரைக்கு ஏற்ப மருந்துகளை உள்ளெடுத்தல்
- குருதி வெல்ல மட்டத்தை சீரான இடைவெளியில் அளந்து குறித்துக்கொள்ளல்.
- உடல் நிறையைக் கட்டுப்பு டுத்தல்
- புகைத்தலை நிறுத்துதல்
நீரிழிவு சிறுநீரகப்பாதிப்பு எவ்வாறு இனங்காணப்படுகிறது?
Urinemicroalbummine அளவு சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற பாதிப்பு காரணமாக அதிகரித்த அளவில் புரதம்(Albumin) சிறுநீருடன் வெளியேறல் நீரிழிவினால் சிறுநீகரம் பாதிப்புடைந்துள்ளமைக்கான முதலாவது அறிகுறியாகும். இது ஆரம்பத்தில் rinemicroalbumin என்கின்ற பரிசோதனைமூலம் அறியப்படும்.
eGFR (சிறுநீரகத்தால் ஒருநிமிடத்தில் எவ்வளவு இரத்தம்வழக்கப்படுகிறது என்பது) Serum Creatinine சிறுநீரகத்தால் வெளியேற்றப்படுகின்றது சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்குகையில் இதன் பெறுமானம் குருதியில் அதிகரிக்கின்றது.(Serum Creatinine) அளவு வயது பால் என்பவற்றுக்கு ஏற்ப eGFR கணிப்பிடப்படுகிறது.
இப் eGFR இன் பெறுமானம் அடிப்படையில் சிறுநீரக பாதிப்பு நிலை 1 இலிருந்து நிலை 5 (Stage 1 to Stage 5)
வரை வகைப்படுத்தப்படுகின்றது. நிலை 1 (Stage1) என்பது சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டமாகவும் நிலை5(Stage5)என்பது சிறுநீரகத்தொழிற்பாடு முற்றாக செயலிழந்ததாவும் கொள்ளப்படுகின்றது.
eGFR (m1/min/1,73m2)
Storge1 >90
Stage2 ΘΟ -89
Stage3 3O – 50
Stage4 15 – 29
Stoge5 <15
சிறுநீரகத்தால் புரதம் குறைவான அளவில் வெளியேறுகையில் சிறுநீரகப் பாதிப்பு இனங்காணப்படுமாயின் இதுவே சிறுநீரக நோயின் ஆரம்பநிலையாகும். இதனை மருத்துவச் சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். அதிகளவு புரதம் வெளியேறுகின்ற நிலையாயின் காலப்போக்கில் படிப்படியாக சிறுநீரகச் செயலிழப்புக்கு உள்ளாகும் சாத்தியக்கூறு உள்ளது. சிறுநீரகத் தொழிற்பாடு குறிப்பிட்ட மட்டத்தை குறைவடைகையில் குருதிசுத்திகரிப்பு சிறுநீரக மாற்றீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நீரிழிவுநோய் உள்ளவர்கள் நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்புதன் மூலம் நீரிழிவினால் ஏற்படுகின்ற சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்கவோ அல்லது பிற்போடவோ முடியும் அதேவேளை நீரிழிவினால் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் நீரிழிவைக்கட்டுப்பாட்டில்வைத்திருப்புதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பின் வேகத்தைக் குறைப்பதோடு சிறுநீரகம்முற்றாக செயலிழக்கின்றநிலையையும் பிற்போட முடியும்.
நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். குறைவற்ற செல்வத்தைப் பெற்றிட அளவாக உண்போம். சீனியைத் தவிர்ப்போம். தினமும் உடல்பயிற்சி செய்வோம். மனஅழுத்தமற்று வாழ்வோம்.
மருத்துவர்.M.கஜந்தினி
சிறுநீரகப்பிரிவு
யாழ்ப்போதனாவைத்தியசாலை