Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



உயர்குருதி அமுக்கம்

குருதி அமுக்கம் தொடர்பாக மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், நோய் நிலைமைகள் தொடர்பாகப் பல்வேறுபட்ட தகவல்கள் கேள்வி – பதில் வடிவில் இங்கு தரப்படுகின்றன.

குருதி அமுக்கம் என்றால் என்ன?

உங்கள் உடலிலி; குருதிக் குழாய்களில் குருதி சுற்றியோடும் போது ஏற்படும் அமுக்கமே குருதியமுக்கம் எனப்படும்.
சாதாரணமாக இது எவ்வளவு இருக்கும்?
சுருங்கள் அமுக்கம் – 120mmHg
விரிதல் அமுக்கம் – 80 mmHg
இது இளம் பராயத்தவர்களுக்கு சற்று குறைவாகவும் முதியோருக்கு சற்று அதிகமாகவும் காணப்படும்.

உயர் குருதி அமுக்கம் என்றால் என்ன?

குருதி அமுக்கம் மேற்குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக இருத்தல் உயர்குருதி அமுக்கம் எனப்படும். பொதுவாக சுருக்கல் அமுக்கம் 140 mmHg ஐ விட கூடுதலாகவும் விரிதல் அமுக்கம் 90 mmHg ஐ விட கூடுதலாகவும் இருப்பின் அது உயர் குருதி அமுக்கம் என்ற வகையறாவுக்குள் கொள்ளப்படும்.

யாருக்கு உயர் குருதி அமுக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்?

  • வயது அதிகரிக்கும் போது
  • உடல் நிறை அதிகமானவர்கள்
  • சிகரெட் பாவனையாளர்கள்
  • நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்ற வருத்தம் உள்ளவர்கள்.
  • குடும்ப அங்கத்தவரில் பலர் உயர் குருதி அமுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பின்

குருதி அமுக்கம் கட்டுப்பாட்டில் இல்லாவிடில் என்ன பிரச்சினைகள் ஏற்படும்

  • இருதய நோய்
  • சிறுநீரக செயலிழப்பு
  • பாரிசவாதநோய்
  • குருதிக்குழாய்கள் பாதிப்படைதல்

குருதி அமுக்க நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

  • சரியான உணவுப்பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
  • உடல் நிறையை அளவாக பேண வேண்டும்.
  • தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
  • வைத்தியர் தரும் மருந்து வில்லைகளை அவர் கூறிய அறிவுறைக்கேற்ப தவறாது உள்ளெடுக்க வேண்டும்.
  • உங்கள் குருதியமுக்கத்தை சரியான கால இடைவெளியில் சோதித்துப் பார்க்க வேண்டும்.

எவ்வகையான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும்?

  • உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • புகையூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகைத் தவிர்க்க வேண்டும்.
  • அதிக கொழுப்பு அடங்கிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • பழங்களையும் மரக்கறிகளையுமு; அதிகம் உள்ளெடுக்க வேண்டும்.
  • மீன் உணவுகள் உடலுக்கு நன்று

வீட்டில் எவ்வாறு குருதி அமுக்கத்தை சோதித்துப் பார்ப்பது?

  • குருதியமுக்கத்தை சோதிக்க முன் புகைப்பிடிக்க கூடாது.
  • கோப்பி, தேநீர் போன்ற பானங்களை உள்ளெடுக்கக் கூடாது.
  • 30 நிமிடங்கள் கதிரையில் இளைப்பாறிய பின்னரே அளவிட தொடங்க வேண்டும்
  • சரியான அளவுள்ள Cuff பயன்படுத்த வேண்டும்.
  • சோதிக்க முன் கதிரையில் சரியாக அமர வேண்டும். சோதிக்கும் கையை Cuff யை முழங்கைக்கு மேல் கட்ட வேண்டும்.
  • கையை ஒரு மேசையில் தளர்வாக வைக்க வேண்டும். கை உங்கள் இதயத்தின் மட்டத்தில் இருக்க வேண்டும்.
  • அளக்கும் இயந்திரம் மூலம் குருதி அமுக்கத்தை சரியாக அளந்து குறித்துக்கொள்ளவேண்டும்.

மருத்துவர். க.சுகந்தன்
பொது வைத்திய நிபுணர்

Posted in கட்டுரைகள்
« குருதிச் சோகை
எலும்பு தேய்வடையும் நோய் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com