நீரிழிவு தொடர்பான அறிவைப் பெறுதல்!
- அடிக்கடி சிறுநீர் கழித்தல், தண்ணீ ர் குடித்தல், தேகம் மெலிந்தும் சோர்ந்தும் காணப்படுதல் போன்ற அறிகுறி களைகிரேக்க மொழியில் ‘டயபிற்றீஸ்’ என அழைக்கின் றனர். அதன் தொடர்நிலையாக அனைத்து மொழிப் பயன்பாடுகளிலும் இதேவிதமாகவே நீரிழிவை பெயர் குறிப்பிடுகின்றனர்.
- சதையியில் உள்ள ‘ஐலட்கலன் (லன்கர் கான்ஸ்) இல் இருந்து இன்சுலின் என்ற ஓமோன் சுரப்பு வெளிவருகி றது.
- இவைகுருதியில் உள்ள குளுக்கோசை உடலில் உள்ள கலங்களுக்கு உட்செலுத்துவதில் உதவிபுரிகின்றன. உடல் உறுப்புக்களுக்கு சக்தியை உருவாக்க குளுக் கோஸ் அவசியமானது. இன்சுலின் இல்லாது போனால் உடல் இயக்கத்துக்கான சக்தி உருவாக்கம் தடைப்படும்.
- புரத மூலக்கூறான இன்சுலின் 51 அமினோ அமிலங்க ளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருசல்பைட்டு இணைப்பு மூலம் ஏ’ எனும் சங்கிலியை 21 அமினோ அமிலங்களும், ‘பி’ எனும் சங்கிலியை 30 அமினோ அமிலங்களும் இணைந்து வடிவமைப்பு பெற்றுள்ளன.
- கலங்களுக்கு வெளியே இருக்கும் உள்வாங்கியான பூட்டை இன்சுலின் என்ற திறவுகோலின் உதவி கொண்டு திறந்து குளுக்கோசைகலங்களுக்கு செலுத்தி சக்தியை கொடுக்கிறது.
- இன்சுலின் நாம் உண்ணும் உணவை கொழுப்பாக வும் புரதமாகவும் மாற்றுவதற்கும் உதவிபுரிகிறது.
- உடற்பயிற்சி செய்யும்போது உடற்கலங்கள் புதுப்புது உள்வாங்கிகளை ஆயிரக்கணக்கில் பெருக்கிக் கொள் கின்றன. இவை கலங்களுக்கு வெளியில் இருக்கும் இன்சுலினை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதனால் இன்சுலினின் எதிர்ப்பு குறைகின்றது. இன்சுலின்றெசிஸ் ரென்சினால் குளுக்கோஸ் உள்ளே செல்ல இன்சுலின் உதவிபுரிகிறது. இதன்மூலம் சக்தி உண்டாகி தசைநார் கள் செயற்படுகின்றன.
- BMI = Weight (Kg)/Height2 (M)
Severely Under Weight 16Kg/m2
Under Weight 16 -18.5Kg/m2
Normal 18.5 – 22.9Kg/m2
Over Weight 23 – 24.9Kg/m2
Objece 25Kg/m2 இற்கு மேல் - மனித உடலானது எவ்வளவு கலோரி சக்தியை உணவின் மூலம் பெறுகின்றதோ அவ்வளவு கலோரிகளையும் நாம் வேலை செய்து விரயம் செய்ய வேண்டும். இல்லாது போனால் அவைகொழுப்பாக மாற்றம் பெற்று உடலில் சேர்வதால் நிறை அதிகரிக்கிறது.
- மன அழுத்தம், கவலை, பயம் ஏற்படும்போது இன்சுலினை எதிர்க்கக்கூடிய பலஓமோன்கள் உடலின்வேறு பாகங்களில் இருந்து சுரக்கின்றன. உதாரணமாக அட் றினலின், கோட்டிசோல், குளுக்கோகோன் என்ப வற்றை குறிப்பிட முடியும். இவை இன்சுலினின் செயற் பாட்டை குறைத்துவிடுகின்றன. இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு உயர்வடைகிறது.
- ஆரோக்கியமான உணவை உள்ளெடுப்பதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம். ஆரோக்கியமான வாழ்வை கண்டுகொள்ளலாம்.
- முழுத்தானியமாச்சத்து உணவுகளை நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்துவது நன்று.
- கொழுப்பை போலவே உப்பையும் சிறிதளவாக உண்பது உடல் ஆரோக்கியம் தரும்.
- உண்ணும் உணவில் உங்கள் விருப்பத்துக்கு உகந்த பதார்த்தங்கள் இருக்க வேண்டும். அவை வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பொருத்தமான மட்டங்களில் குளுக்கோசின் அளவு இருக்கவேண்டும். உடல் எப்போதும் ஆரோக்கிய நிலையில் இருக்க வேண்டும்.
- சிறுநீரகத்தில் குறைபாடு உடையோர் மருத்துவ ஆலோசனைக்கு ஏற்ப புரத உணவு வகைகளை பயன்படுத்த வேண்டும்.
- உடற்பயிற்சியில் ஈடுபடாத சந்தர்ப்பங்களில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளாக உடற்பருமன், எலும்பு தேய்வடைதல் அதிக குருதி அழுத்தம், இருதய நோய்கள் என்பனமையும்.
- நீரழிவு நோயாளர்கள் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள் , வேகமாக நடத்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டம், மின் உயர்த்திக்கு பதிலாக படிகளில் நடத்தல், வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்தல், யோகாசானம் போன்ற உடற் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்,
- உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளையும் மேற் கொள்ளுதல் நன்று. உதாரணமாக பாரம் தூக்கும் செயற்பாட்டை குறிப்பிடலாம்.
- நீரிழிவினால் பாதங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளாக, ‘நிறம் மாறுதல், சிறிய புண்கள், தோற்றம் மாறு தல், கால் ஆணி, தொற்றுக்கள் ஏற்படுதல், வெட்டுக்கள், எரிவு, அதிக வேதனை, உணர்வின்மை , பஞ்சுமீது நடப்பது போன்ற உணர்வு வெளிப்பாடு’ போன்ற வற்றை குறிப்பிடலாம்.
- அதிக நிறை உடையோருக்கு நீரிழிவு நோய் மட்டுமல் லாது இதயம் சம்பந்தமான நோய்கள். உயர் குருதி அழுத்தம், குருதிக் குழாய் அடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
- இன்சுலின் இல்லாது போனால் குருதியில் உள்ள குளுக்கோஸ் சக்தியாக மாற்றமடையாது. உடலானது சக்தியின் தேவைப்பாட்டை பூர்த்தி செய்ய கொழுப்பில் இருந்து சக்தியை எடுக்கத் தொடங்கும். இதன்போது குருதியில் ‘கீற்றோன்’ என்ற ஒருவகைப் பதார்த்தம் சேர்ந்து விடுவதால் இறுதியில் நீரிழிவானது ‘கீற்றோ அசிடோசிஸ்’ என்ற நிலையை அடையும். சில சந்தர்ப் பங்களில் நினைவிழந்த நிலைக்கும் செல்ல வாய்ப்புகள் உண்டு நீரிழிவு வகை ஒன்று நோயாளருக்கு குருதி யில் குளுக்கோசின் அளவு அதிகரிக்கும் போது இந்த நிலை ஏற்படலாம்
நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புள்ளோர்
- பருமனுடன் வயிறு தொந்தி பெருத்தவர்களாக இருப்புவர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உள் ளெடுத்து தேக அப்பியாசம் இன்றி வாழ்ப்பவர்கள்
- குருதி அழுத்தம் உடையோர்
- குருதியில் கொழுப்பு உடையோர்
- நீரிழிவு நோய் உடைய குடும்ப அங்கத்தவர்கள்,
- இன்சுலின் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்.
- நீரிழிவு நோயாளி ஒருவர் புகைப்பிடிக்கும்போது புகையிலையில் இருக்கும் நிக்கொட்டின் எனும் இரசாயனப் பதார்த்தம் குருதியில் குளுக்கோசின் அளவை சீரான அளவில் பேணுவதற்கான சந்தர்ப்பங்களை குறைக் கும். அத்துடன் தோலின் கீழான குருதிச்சுற்றோட்டத்தை சீராக இயங்கவிடாது தடுக்கிறது. மேலும் இன்சுலின் உறிஞ்சுவதைக் கூட தடுத்து குருதியில் குளுக்கோசின் அளவை சீராக பேணவிடாது மாரடைப்பு, நரம்பியல்பாதிப்பு விழித்திரை பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற வற்றை ஏற்படுத்தும்.
- குருதிச் சிறுதட்டுக்கள் நீரிழிவு நோயாளாகளின் நாடிகளில் பசைபோலஒட்டிக் கொள்வதால் நரிழிவு நோயாளிகளுக்கு அஸ்பிரின் மருந்து குறைந்த அளவில் வழங்கப்படும். இந்த சந்தர்ப்பத்தில் இதயம், மூளைக்கு குருதி கொண்டு செலலும நாடிகளில் அடைப்பு ஏற்படும் இதனால மாரடைப்பு, பாரிசவாதம் போன்றவை ஏற்படும் அஸ்பிரின் மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படியே பயன்படுத்த வேண்டும். நீரிழிவு நோயாளியொருவருக்கு அஸ்பிரின் குளிசை அவசியமானதா இல்லையா என்பதை பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவர் தீர்மானிப்பார்
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்,
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
யாழ். போதனா மருத்துவமனை.
Posted in கட்டுரைகள்