Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



ஓழுங்கான நீச்சல் பயிற்சி ஆயுளை அதிகரிக்கும்

உலகில் அறியப்பட்ட உடற் பயிற்சிகளில் நீச்சலே உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது என்கிறது விஞ்ஞானம். ஒரு மணிநேர நீச்சலில் உடலில் அத்தனை தொகுதிகளும் பழுது பார்க்கப்பட்டு அவற்றின் தொழிற்பாடு சீராகி விடுகிறது. இன்று எம்மை அச்சுறுத்தும் நீரிழிவு, கொலஸ்ரோல், இதய நோய்கள், உயர் குருதியமுக்கம் என்று அத்தனைக்குமே ஒழுங்கான நீச்சல் பயிற்சி சிறந்த நிவாரணி.

நீரிழிவு நோயாளிகள் தொகை ஆசியாவில் மிகவும் அதிகம்

இன்றைய நிலையில், வெகு சீக்கிரத்தில் வீட்டுக்கு ஒரு நீரிழிவு நோயாளி என்ற நிலை இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் ஏற்படும் என்று ஆய்வுகள் அபாயமணி அடிக்கின்றன. இதற்குக் காரணம் எமது ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையும்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை . இந்தப் பழக்க வழக்கங்கள் அதிகரித்த உடற்பருமனை ஏற்படுத் துகின்றன. அதிகரித்த உடற்பருமன் எல்லா நோய்களுக்கும் நுழைவாயிலாகி, இறுதியில் சொர்க்க வாசலையே காண்பித்து விடுகிறது. இந்தப் பழக்கவழக்கங்களை மாற்ற முடியாதவர்கள் (பல வழிகளையும் கையாண்டு தோற்றுப் போனவர்கள், மாற்ற வேண்டும் என்பதை மட்டும் மாற்றமில்லாமல் சொல்பவர்கள் அதாவது எம் பில் பெரும்பான்மையானோர்). ஆகக் குறைந்தது நீச்சலையாவது ஒழுங்காகச் செய்தால் நல்லது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. நீச்சலில் கிடைக்கும் எல்லாப் பயன்களையும் தரையில் செய்யும் ஏனைய உடற்பயிற் சிகளில் முழுமையாகப் பெற முடிவதில்லை. எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில், நீச்சல் பெரியளவில் பிரபல்யமடையாததுக்கு, அதற்குரிய வளங்கள் இருக்காமையும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால், கொழும்பு போன்ற பிரதேசங்களைப் பொறுத்தவரையில் சிறுவயதிலிருந்தே நீச்சலைப் பழக்கத் தொடங்கி விடுகிறார்கள். உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் போது குறித்த ஒரு உடற்பகுதி தசைக்கு மட்டுமே குறித்த நேரத்தில் பயிற்சிக்கப்படும்.

முன்னாயத்தங்கள் மிகவும் அவசியம்

நீச்சல் பயிற்றுவிப்பாளரும் உயிர்காப்பாளரும் இல்லாது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தடாகத்தில் இறங்கக் கூடாது நீச்சல் பழகுபவர்கள் எப்போதும் தடாகத்தின் மிக ஆழம் குறைந்த பகுதியிலேயே இறங்குவதுடன் தற்பாதுகாப்பு அங்கி அல்லது உபகரணத்தை உடன் வைத்திருக்கவும். எக்காரணம் கொண்டும் மதுபோதையில் இருக்கும்போது தடாகத்தினுள் இறங்காதீர்கள். அது ஆழம் மிகக் குறைந்த பகுதியாக இருந்தால் கூட.

நீச்சலால் ஏற்படும் நன்மைகள் சில

நீச்சலின்போது எமது இதயத்தசை நார்கள் பலமடைவதுடன் குருதியைப் பம்பும் திறனும் அதிகரிக்கிறது. அமெரிக்க இருத நோய்ச் சங்கத்தின் அறிக்கையின்படி தினமும் 30 நிமிடங்கள் நீச்சலில் ஈடுபடுபவர்களில் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு 30-40 வீதத்தால் குறைந்து விடுகிறதாம்.

சாதாரண நீச்சலில் (Free Style) ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் 100 கலோரி சக்தி பயன்படுத்தப்படுவதால் உடல்நிறையைக் குறைக்க, கட்டுப்பாட்டில்வைத்திருக்க மிகவும் இலகுவான முறையாக உள்ளது. செலவிடும் சக்தியின் அளவு நீச்சல் முறைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடல்பயிற்சி செய்வதற்குப் பயம் இருக்கலாம். ஆனால் நீச்சல் அவ்வாறல்ல. நீச்சல் தடாகத்திலுள்ள ஈரலிப்பான காற்று, நீந்தும்போது ஆஸ்துமா தூண்டப்படுவதைத் தவிர்க்க உதவுகிறது. அத்துடன்நீச்சலானது நுரையீரலின் கொள்தகவை அதிகரித்து நோய் அறிகுறிகளைக் குறைகிறது.

கொழுப்பு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களில் கூடாத கொழுப்பின் அளவைக் குறைப்பதும் நல்ல வகைக் கொழுப்பின் அளவை அதிகரிப்பதும் இதயத்தின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. நீச்சல் ஒரு சிறந்த Aerobic வகைப் பயிற்சியாதலால் இவை இரண்டையும் இலகுவாகக் செய்துவிடுகிறது.

கிரமமாக நீச்சலில் ஈடுபடுபவர்களில் உடலில் மேலதிக குளுக்கோசு தொடர்ந்து பயன்படுத்துவதால் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஒவ்வொரு வாரமும் 500 கலோரியை செலவழித்தால் நீரிழிவுக்கான வாய்ப்பு 6வீதம் குறையும் என்கிறது ஓர் ஆய்வு. நீரிழிவு நோயாளர்களில் நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் இன்சுலின் ஓமோக்கான உணர்திறனை அதிகரிக்கச்செய்து நோய்க்கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக உள ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் வழங்குவதில் நீச்சலுக்கு நிகரான உடற்பயிற்சி இல்லை என்கின்றன ஆய்வுகள். எமக்கு மகிழ்ச்சி ஏற்படும்போது உடலில் சுரக்கும் ஒருவகை பாதார்த்தம் நீச்சலின்போது தானாகவே சுரக்கிறதாம். மேலும் மூளையில் Hippo campus என்ற பகுதியில் நடைபெறும். கலங்களைப் புதுப்பிக்கும் செயற்பாடு (Neruogenesis) நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளால் தூரிதப்படுகிறதாம். ஆக உற்சாகமாக வாழ நீச்சல் ஒரு சிறந்த பொழுது போக்கு.

நீங்களும் நீந்துங்கள்

அதிக நாள் வாழ யாருக்குத்தான் ஆசை இல்லை. அமெரிக்காவில் நடந்த ஆய்வில் நீச்சல் பயிற்சி செய்பவர்களின் இறப்பு வீதம் ஏனையவர்களுடன் ஒப்பிடும்போது 50வீதத்தால் குறைவாக இருந்தது. இது ஒன்றே போதும். நீச்சலின் பயன்பாட்டை வளர்க்க ஆகவே சந்தோசத்துக்காகவேணும் நீந்தப் பழகுங்கள்.

யாழ்ப்பாணத்தில் முறையாக நீச்சல் பயிற்சிக்கான வசதி வாய்ப்புகள் உருவாகிவரும் சூழ்நிலையில் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாம் உணவுக் கடைகளில் குளிர்பானங்களுக்கும் ஏனைய தேவையற்ற உணவுகளுக்கும் செலவு செய்யும் பணத்தை இவ்வாறான இடங்களில் செலவிடலாம். ஏற்கனவே சொன்னது போல பாதுகாப்பான கடற்கரை அல்லது வீட் டில் அமைக்கப்பட்ட பெரிய தடாகங்களும் நீச்சல் பயிற்சிக்கு உகந்தவையே. ஆக, மொத்தத்தில் நீச்சலை வர வேற்போம். எமது இளைய சந்ததியை பயிற்றுவிப்போம். ஆரோக்கியமான சமுதாயத்துக்கு வழி சமைப்போம்.

Posted in கட்டுரைகள்
« வளர்ந்த குழந்தைகளை வாழவைப்போம்!
பாடசாலை மாணவர்களிடையே ஏற்படும் விளையாட்டு உபாதைகளும் இயன்மருத்துவத்தின் முக்கியத்துவமும் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com