இன்சுலின் ஊசி மருந்தை பாவிப்பது எப்படி?
இன்சுலின் ஊசி மருந்தை பாவிப்பது எப்படி?
- கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் வேண்டும்.
- இன்சுலினையும் சரியான கருவியையும் தெரி செய்தல் ( இன்சுலின் சிறிஞ் 29G/100 Unit)
- இன்சுலின் குப்பியில் ஒட்டப்பட்ட தாளை சரிபார்த்தல் வேண்டும் ( இன்சுலின் வகை, காலாவதி திகதி, மருந்துதின் அளவு)
- உணவு தயாராக உள்ளது என்பதை உறுதி செய்தல் ( ஊசி ஏற்றி அரை மணித்தியாலத்துக்குள் சாப்பிடல் வேண்டும்)
- ஊசி ஏற்றுவதற்கான உடலின் பகுதியைத் தெரிவு செய்தலும் சுத்தப்படுத்தலும் ( மேல் கை, முன்புற தொடை, பின்புறம்)
- இன்சுலின் குப்பியின் மூடியை ஸ்பிறிட்டால் துடைத்தபின் சரியான அளவு மருந்தை சிறிஞ்சினுள் ஏற்றுதல் வேண்டும்)
- ஊசியை ஏற்ற சரியான நுட்பத்தைக் கையாளுதல் ( ஊசியை 450 பாகையில் வைத்து மேற்தோலினூடாக ஏற்றுதல் வேண்டும்)
- ஊசி போடும் பகுதியை ஒரு மாதத்திற்று ஒரு முறை மாற்றுதல் வேண்டும். ஆனால் ஊசி போடும் புள்ளியை ஒவ்வொரு நாளும் மாற்றுதல் சிறந்தது.
- சிறிஞ் இனுள் உள்ள மருந்து முழுவதையும் ஏற்றுதல் வேண்டும்.
- ஊசி மருந்தை குளிரூட்டியின் நடுப்பகுதியில் ( 2.80C) வைத்து பேணல் வேண்டும். ( மேல் பகுதியிலோ, கீழ் பகுதியிலோ, கதவுப் பகுதியிலோ வைத்தல் கூடாது)
- நேரடி சூரிய ஒளி படும் பகுதியில் ஊசி மருந்தை வைத்தல் கூடாது
- குளிரூட்டி இல்லாத சந்தர்ப்பத்தில் அரைவாசிக்கு நீர் நிரப்பப்பட்ட மண்பானையிலோ அல்லது பனிக் கட்டி இடப்பட்ட குடுவை ஒன்றிலோ வைத்துப் பாதுகாக்கலாம்.
இது தொடர்பில் எம்மால் முன்னர் வெளியிடப்பட்ட காணோளி
Posted in சிந்தனைக்கு