Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு – கண்ணும் நீரிழிவும்

உடலின் தசையி சுரப்பியினால் ( Pancreas B cell ) சுரக்கப்படும் ஹோர்மோன் இன்சுலின் (Insulin)  ஆகும். இது உடலின் உயிர்க் கலன்களுக்குத் தேவையான  குருதியிலுள்ள குளுக்கோசை உயிர்க்கலத்தினுள் உற்செலுத்த உதவுகின்றது. இன்சுலின் தொழிற்பாடு குறைவதனாலோ ( Insulin resistant)  அல்லது தசையி சுரப்பியினால் குறைவதாக சுரப்பதனாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலின் தரம் குறைவதனாலோ இது போன்ற காரணங்களால் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு கூடி இறுதியில் சிறுநீருடன் வெளிச் செல்வதே நீரிழிவு ஆகும்.

இதனை ( Diabetes Mellitus)  என்று மருத்துவத்தில் அழைக்கப்படும் ( Diabets)  என்றால் (Topass) அல்லது ( Flow throught Excessive urination) அத்துடன் ( Mellitus) என்றால் ( Sweet) என்று பொருள்படும்.

இந்த நோயானது சகல வயதினருக்கும் சகல வகுப்பினருக்கும் கண், மூளை, இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற சகல அங்கங்களையும் பாதிப்பதனாலும் இந்த நோய் வந்தால் மற்றைய சகல நோய்களும் ( ரோகங்கள்)  சேர்ந்து வருவதனால் இந்த நோயை சலரோகம் என்று சொல்வதிலும் பார்க்க சகலரோகம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

கண்பார்வையைப் பாதிக்கும் நீரிழிவு

  • நீரிழிவு நோய் கண், மூளை இருதயம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கும்
  • இந்த நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட பார்வைக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.
  • கண்ணில் முக்கியமாக பின்புறமுள்ள விழித்திரையின் குருதி நாளங்களைப் பாதிக்கும்.
  • விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண் மருத்துவர்களால் மட்டுமே பரிசோதித்துக் கண்டறிய முடியும். மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகங்களிலும் ஏற்படுவதால் இந்த பரிசோதனைகளால் இவற்றின் தன்மைகளையும் அறிய முடியும்.
  • நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரையின் பாதிப்பு, நோயின் தீவிரம் மற்றும் எவ்வளவு காலம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பொறுத்தது.
  • பல வருடங்கள் நோய் உள்ளவர்களின் 70 முதல் 80 சதவீதம் பேருக்கு விழித்திரைப் பாதிப்பு ஏற்படும்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு பார்வை இழக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 25 மடங்கு அதிகம் உள்ளது.
  • குறைந்த பார்வை அல்லது பார்வை இழப்பு ஏற்படும் வரை எந்தவித அறிகுறிகளும் தெரியாது.
  • விழித்திரைபாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, லேசர் சிகிச்சையளித்தால் கணிசமான அளவில் பார்வை இழப்பைத் தடுக்கலாம்.
  • இலேசர் சிகிச்சையால் இருக்கும் பார்வையை பாதுகாக்க முடியுமே தவிர இழந்த பார்வையை திரும்பப் பெற முடியாது.
  • விழித்திரைப் பாதிப்பால் ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்க நீரிழிவு நோயாளிகள் அனைவரும் 12 மாதத்துக்கு ஒரு முறையேனும் தங்கள் கண்களை கண் மருத்துவரிடம் அவசியம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். விழித்திரை பாதிக்கப்பட்டால் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண் பார்வை முற்றிலும் இழக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மருத்துவர் S.T.S.சந்திரகுமார்
கண் மருத்துவ நிபுணர்
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்

Posted in சிந்தனைக்கு
« பிறப்பு முதல் இரண்டு வயது அடையும் பிள்ளையின் விருத்திப்படிமுறையும் அவர்களுக்கான எளிய விளையாட்டுக்களும்!
இன்சுலின் ஊசி மருந்தை பாவிப்பது எப்படி? »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com