ஊசி மருந்தைப் பாவிக்கும்போது ஏற்படும் வலியைக் குறைக்கக்கூடிய வழிகள்
- ஒரே ஊசியை நீண்ட நாள்களுக்கு தொடர்ந்து பாவித்தல் கூடாது. (3 நாள்களுக்கு மேற்படல் கூடாது)
- ஊசிமருந்து குளிரூட்டியில் வைக்கப்பட்டு இருந்தால் பாவிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் அறை வெப்ப நிலையில் வைத்தல் வேண்டும் ( குளிர் வலியை அதிகமாக்கும்)
- மெல்லிய கூர் உடைய ஊசியைத் தெரிவு செய்தல் வேண்டும்.
- உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்து ஊசி மருந்தை மெதுவாக உருட்டல் வேண்டும்.
- ஊசிபோடும் உடலின் பகுதியை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை மாற்றுதல் வேண்டும்.
- சவர்க்கார நீர் கொண்டு ஊசி போடும் இடத்தை கழுவுதல் வேண்டும் ( ஸ்பிறிற் தோலை கடினமாக்கக் கூடும்)
- சிறிஞ்சினுள் வளிக்குமிழிகள் இல்லாதவாறு மருந்தை எடுத்தல் வேண்டும்.
- ஊசியை மென்மையாகவும் விரைவாகவும் ஏற்றுதல் வேண்டும்.
Posted in சிந்தனைக்கு