Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கட்டுரை, சித்திரப் போட்டி

கீழே தரப்பட்டுள்ள விளக்க முறைகளுக்கேற்ப போட்டி சம்பந்தமான சகல ஆக்கப் பிரதிகளும் சமர்ப்பிக்கப்படவேண்டும். ஆக்கப் பிரதிகளை முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இலங்கை நீரிழிவு சம்மேளனம் மே/பா இலங்கை அகஞ்சுரக்கும்நிபுணர்களின் கல்லூரி இல.6 விஜேராம ஹவுஸ் விஜேராம மாவத்தை கொழும்பு 7 என்ற முகவரிக்கு இந்த மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.

பிந்தி வந்து சேரும் ஆக்கப்பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது கிடைக்கும் ஆக்கப் பிரதிகளின் பதிப்புரிமையானது “இலங்கை நீரிழிவு சம்மேளனம் அமைப்பை சேர்வதுடன் இவற்றை பயன்படுத்தி டிஜிட்டல் மற்றும் அச்சு பதிப்புகளின் மூலம் விழிப்புணர்வை உருவாக்கும் உரிமையையும் கொண்டிருக்கும்.

இந்த ஆக்கங்களை நீரிழிவு சிகிச்சை நிலையம், யாழ்.போதனா வைத்தியசாலை என்ற முகவரிக்கும் அனுப்பிவைக்கமுடியும்.

தலைப்பு – நாளைய மாற்றத்துக்காக இன்றே செயற்படுவோம்

கட்டுரைப் போட்டி

01.வயதுப் பிரிவு வகைகள்

  • கனிஷ்ட பிரிவு
  • இடைநிலை பிரிவு
  • சிரேஷ்ட பிரிவு

02.சொற்களின் வரம்பு

  • கனிஷ்டபிரிவு 250 செற்கள்
  • இடைநிலைப் பிரிவு 1000 சொற்கள்
  • சிரேஷ்ட பிரிவு 500 சொற்கள்.

கட்டுரையானது எந்தவொரு வகையான திருட்டுமற்ற சுயமான படைப்பாக இருத்தல் அவசியம். கட்டுரை சிங்கள தமிழ் அல்லது ஆங்கில ஆகிய மொழிகளில் எழுதப்பட முடியும்.

01.அனுப்பும் முறை

கட்டுரையானது தட்டச்சு செய்யப்பட்டு முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் பதிவுத்தபால் மூலமாக அல்லது மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

பரிசுகள்

1ஆம் பரிசு 10,000 ரூபா
2 ஆம் பரிசு 7500 ரூபா
3ஆம் பரிசு 5000 ரூபா
முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சித்திரப் போட்டி

01.வயதுப் பிரிவு வகைகள் மூன்று வயதுப் பிரிவுகளும்
02.சிறப்பு விவரம் தாளின் அளவு ஏ3சித்திரத்தாள் (3art paper )
ஊடகம் எதாவது (சார்க்கோல் (Charcoal) டிஜிட்டல் Digtail), க்ரயோன்ஸ்(crayone), நீர்(water). எண்ணெய் வர்ணம் (Oil) அல்லது வேறு.

சித்திரமானது எந்தவொரு வகையான திருட்டுமற்ற சுயமான படைப்பாக இருத்தல் அவசியம்.

01.அனுப்பும் முறை சித்திரமானது முழுமைப்பட்ட விண்ணப் படிவத்துடன் பதிவுத் தபால் மூலமாக அல்லது நேரடியாக மேலே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

பரிசுகள்

1ஆம் பரிசு 10000 ரூபா
2ஆம் பரிசு 7500ரூபா
3ஆம் பரிசு 5000 ரூபா

முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவம்
முழுப் பெயர்
பிறந்த திகதி
வகுப்பு
பாடசாலை முகவரி
வீட்டு முகவரி
தொலைபேசி இல
மின்னஞ்சல் முகவரி

போட்டியில் கலந்து கொள்பவரின் உடன்பழக்கை

நான் மேலே குறிப்பிட்ட போட்டி விதிமுறைகளை நன்கு வாசித்து அறிந்ததோடு அவற்றுக்கு சகல வழிகளிலும் கட்டுப்படுவேனெவும் உறுதியளிக்கிறேன். “இலங்கை நீரிழிவு சம்மேளனம் அமைப்பானது எனது கட்டுரையையோ அல்லது சித்திரத்தையோ அச்சுப் பிரதி டிஜிட்டல் முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்முக மாக உபயோகிக் முடியுமென்பதை அறிந்து கொண்டுள்ளேன். “இலங்கை நீரிழிவு சம்மேளனம் அமைப்பின் முடிவே இறுதியானதெனவும் அறிந்து கொண்டுள்ளேன். அத்துடன் இந்தப் படைப்பானது எனது சொந்த படைப்பு என்பதையும் உறுதிப் படுத்துகிறேன்.

கையொப்பாம். …………………. திகதி:- ……………

பாடசாலை அதிபரின் உறுதிமொழி

இந்தப் படைப்பானது மேலே குறிப்பிட்ட மாணவனின் சொந்தப் படைப்பென்பதையும் முன்னர் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்துவதோடு இந்த மாணவன் அல்லது மாணவி போட்டியில் கலந்து கொள்வதற்கான சகல விதி முறைகளையும் முழுமை செய்துள்ளார் என்பதையும் உறுதி செய்கின்றேன்.

கையோப்பமும் பதவி முத்திரையும். ………… திகதி……………

Posted in செய்திகள்
« உளவியல் ரீதியான முதலுதவி – இன்று உலக உள சுகாதார தினம்
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com