Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



உளவியல் ரீதியான முதலுதவி – இன்று உலக உள சுகாதார தினம்

உலகளாவிய உள சுகாதார தினமானது வருடந்தோறும் ஏதாவதொரு தொனிப் பொருளுடன் விழிப்புணர்வு நாளாகப் பிரகடனப்படுத்தப் படுகின்றது. உள சுகாதாரப் பிரச்சினையால் ஒருமனிதனது உரிமை மற்றும் அவன் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் உளசுகாதாரப்பிரச்சினைகள் பற்றிய விழிப் புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்துவதும், உள சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவி செய்தலும் அவசியமானதாகும். அந்த வகையில் இந்த வருடத்துக்குரிய தொனிப்பொருளாக அமைவது யாதெனில் “உளவியல் ரீதியான முதலுதவியைச் செய்தல்” என்பதாகும். ஏதேனும் ஓர் உளநெருக்கீட்டால் பாதிக்கப்பட்ட ஒரு வருக்கு முதலில் அடிப்படைத் தேவையான உணவு குடிதண்ணீர் இருப்பிடம் போன்ற சில குறிப்பிடத்தக்க வசதிகள் கிடைக்கும்படி ஆவன செய்து அவர்களின் கதைகளைச் செவிமடுத்து அவர்களுக்குச் செளகரிய மானசூழலை ஏற்படுத்திஅமைதியான மனநிலையை உணரும்படி செய்து அவர்களைப் பொருத்தமான தகவல்தொடர்பாடல் முறை சேவைகள் மற்றும் சமூக ஸ்தாபகங்களிடம் பொறுப்புக்கொடுத்துமேலும்பாதிப்பு ஏற்படாமல் இருக்குமாறுசெய்துவிடலே அவர்களுக்கு நாம் வழங்கும் உளரீதியான முதலுதவி ஆகும்.

ஆகமொத்தத்தில் இந்தவகையான முதலுதவியானது மருத்துவத் துறையுடன் தொடர்புடைய ஒருவரால் அல்லது முறையாகப் பயிற்றப்பட்ட உளவளத்துணை யாளர் ஒருவரால் மட்டும்தான் செய்யப்பட வேண்டும் என்றில்லை. உதாரணத்துக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயற்கை இடரால் பாதிக்கப்பட்ட ஒருவரை அவ் விடத்திலிருந்து அப்புறப்படுத்தி அவருக்கு உணவு இருப்பிடம் போன்ற வசதிகளை வழங்கி பொருத்தமான உதவும் கரம் ஒன்றில் ஒப்படைத்துவிடல் நாம் அவருக்கு செய்யும் உளரீதியான முதலுதவி ஆகும்.

உளரீதியான முதலுதவியார் யாருக்கு தேவை? முன்னர் கூறியது போன்று இயற்கை இடரால் பாதிப்புற்றோர், போர் நடவடிக்கையால் இன்னலுற்றோர், பொருள் இழப்பை சந்தித்தோர், மீளா நோயின் தாக்கத்துக்குட்பட்டோர், வாகன விபத்துக்குள்ளானோர் மற்றும் இடப்பெயர்வுக்குட்பட்ட மனிதன் அல்லது சமுதாயமாக இருக்கலாம்.

அப்படியென்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நேரடியாக, உடனடியாக அருகில் உள்ள மற்றவருக்கு உளரீதியான முதலுதவி பற்றிய அறிவு இருக்கவேண்டும். அந்த அறிவு எமக்கும் தெரிந்திருந் தால் நன்று குடும்ப அங்கத்தவர் வீட்டு அயலவர் சமுதாய அங்கத்தவர். பாடசாலை ஆசிரியர், பொலிஸ், தீயணைப்பு உதவியாளர், தாதியர், மருத் துவர் மற்றும் ஏனைய மருத்துவ துறையினர். உளவளத் துணையாளர் போன்ற தரப்பினர் இந்த வகையான முதலுதவி செய்ய ஆயத்தமாக இருக்கவேண்டும்.

முதலுதவியானது ஏன் தேவைப்படுகிறது?

பாதிக்கப்பட்ட ஒருவர் மற்றவர்களிடமிருந்து உடல் உள மற்றும் சமூக ரீதியான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதன் மூலம் தம் பாதுகாப்பு பற்றித் திருப்தியடைந்து ஆறுதலடைவர். இவ்வகையான முதலுதவி ஆண், பெண் என இருபாலாருக்கும் தேவையானது.

அதிலும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இடர்பாட்டில் சிக்குண்டவர்களுக்கும் தம்மைத்தாமே அல்லதுதம் பிள்ளைகளால் கவனிக்க முடியாதநிலையிலுள்ளவர் மற்றும் தனிமையிலுள்ளவர்களுக்கும் மிக மிகத் தேவையானது.

அடுத்து உள ரீதியான முதலுதவி செய்ய விரும்பும் ஒருவர் எவ்வாறான விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

முதலுதவி தேவைப்படுவோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அமைய வேண்டும். அவரின் உரிமையை மதித்து அவராகத் தீர்மானம் எடுக்க உதவ வேண்டும். அவர்களுடனான உரையாடலை இரகசியமாக பேணி வைத்திருக்கவேண்டும்.

அதைவிடுத்து மனரீதியான குழப்பமற்றுக் காணப்படும் ஒருவரிடம் சென்று அவரது கதைகளை சொல்லும்படி வற்புறுத்தல், அவரின் கதைகளை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளல், தம்மை உதவியாளராகக் காட்டி பொய்யாகச் சத்திய மளித்தல் போன்றவை செய்யப்படக்கூடாதவை சிறந்த தொடர் பாடலைப் பேணுதல் மிகவும் முக்கியமானது உதவி தேவைப்படுவோரை அமைதியான இடத்துக்குக் கூட்டிச் சென்று அருகில் அமர்ந்து கதைக்கவேண்டும்.

அவர்கள் சொல்லும் விடயங்களுடன் தொடர்புபட்ட உண்மை நிலவரம் எமக்கு தெரிந்திருப்பின் அவர்களிடம் பகிரலாம். அவர்களின் உணர்வுக்கு ஒத்த உணர்வைக் காட்டுதல் (நானும் கவலை யடைகிறேன் என்று கூறுதல்) அவர்களின் தனிப்பட்ட விடயங்களை இரகசியமாகவைத்திருத்தல்போன்றவை முக்கியமானவை.

இவ்வாறாக உளரீதியான முதலுதவி செய்தல் என்பது அவதானித்தல் கிரகித்தல் மற்றும் உரியவர்களின் தொடர்பை ஏற்படுத்திவிடல் என்பதாகும். சுருக்கமாகக் கூறின் அவசியமான வெளிப்படையான அடிப்படை வசதிகளை அவதானித்து மேலதிக தேவைகளை அவர்களிடமிருந்து கிரகித்து உரிய சமூக ஒத்துழைப்பு வழங்குபவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திவிடலாம்.

இவ்வாறான முதலுதவிைையச் செய்தாலேபோதும் உள ரீதியான பாதிப்புக்குட்பட்டு உதவி தேடும் ஒருவரின் உள்ளத்தில் இடம்பிடித்து விடலாமே.

திருமதிச.சஸ்ரூபி

Posted in கட்டுரைகள்
« துரித உணவுப் பாவனை ஆஸ்துமா, எக்சிமா நோயாபத்தை அதிகரிக்கும்
அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கட்டுரை, சித்திரப் போட்டி »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com