சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான சித்திரம் மற்றும் கவிதைப் போட்டி 2016
கீழே தரப்பட்டுள்ள விளக்க முறைகளுக்கேற்ப போட்டி சம்பந்தமான சகல ஆக்கப் பிரதிகளும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
ஆக்கப்பிரதிகளை முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் நீரிழிவு சிகிச்சை நிலையம், யாழ். போதனா வைத்தியசாலை. யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு 04.11.2016 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கவும்.
பிந்தி வரும் ஆக்கப் பிரதிகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
தலைப்பு “நீரிழிவை வெற்றி கொள்வோம்”
பிரிவுகள்
கனிஷ்ட பிரிவு – தரம் 01தொடக்கம் 5 வரை
இடைநிலைப்பிரிவு – தரம் 6 தொடக்கம் 10 வரை)
சிரேஷ்ட பிரிவு- தரம் 11 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை
பரிசில்கள்
முதல் 3 இடங்களைப்பெறும் ஆக்கங்களுக்கு பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
சித்திரப் போட்டி
01. வயதுப் பிரிவு வகைகள்
கனிஷ்ட பிரிவு – தரம் 01தொடக்கம் 5 வரை
இடைநிலைப்பிரிவு – தரம் 6 தொடக்கம் 10 வரை)
சிரேஷ்ட பிரிவு- தரம் 11 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை
02. சிறப்பு விவரம்
தாளின் அளவு A3 சித்திரத்தாள்
ஊடகம் ஏதாவது (சார்க்கோல், க்ரயோன்ஸ், நீர், எண்ணெய் வர்ணம் அல்லது வேறு)
சித்திரமானது எந்தவொருவகையானதிருட்டும் மற்ற சுயமான படைப்பாக இருத்தல் அவசியம்.
03.அனுப்பும் முறை
சித்திரமானது முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் பதிவுத் தபால் மூலமாக அல்லது நேரடியாகமேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்
கவிதைப் போட்டி
01. வயதுப்பிரிவு வகைகள்
இடைநிலைப் பிரிவு மற்றும் சிரேஷ்ட பிரிவு
02. சொற்களின் வரம்பு
இடைநிலைப்பிரிவு ஆகக்குறைந்தது 100 சொற்கள்
சிரேஷ்ட பிரிவு ஆகக்குறைந்தது 100 சொற்கள்
03. மொழி தமிழ்
கவிதையானது எந்தவொருவகையானதிருட்டு மற்ற சுயமான படைப்பாக இருத்தல் அவசியம்
04அனுப்பும் முறை
கவிதையானது தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டு அல்லது தட்டச்சு செய்யப்பட்டு முழு மைப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் பதிவுத்தபால் மூலமாக அல்லது நேரடியாக மேலே குறிப்பிட்டமுகவரிக்கு அனுப்பப்படவேண்டும்