மதுவுக்கு அடிமையான ஒருவர் அதிலிருந்து விடுபட்டு மதுவை நாடாது வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில், எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டன என நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத விதமாக அவர் மறு படியும் குடிக்கத் தொடங்குவது நடக்கக்கூடிய ஒரு விடயமே.
ஆனால் இது திடீரென்று ஏற்படும் மாற்றம் அல்ல. ஒருவரில் மெல்ல மெல்ல ஏற்படும் சலனங்கள் பின்னர் அவரது எண்ணங்கள், சிந்தனைகள், நடத்தைகள் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றங்கள் மூலம் உண்டாகும் தூண்டல்களே குடியைவிட்டு மீண்டவர்களை மறுபடி யும் குடியை நோக்கிச் செல்லவைக்கும் கார ணங்களாக அமைகின்றன.
அப்படியான காரணங்கள் சிலவற்றை நாங்கள் கீழே பார்ப்போம்.
குடியற்ற வாழ்வின் வரண்ட நிலை
வாழ்க்கையானது பழைய மாதிரி இல்லாமல், “உப்புச்சப்பில்லாமல் இருக்கின்றது என்ற நினைப்புத் தோன்றலாம்.
மது பற்றிய இனிய நினைவுகள்
மதுவின் தாக்கத்திலிருந்து உடலும் மனமும் தேறிவரும் ஒருநிலையில் மதுவினால் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட சுகங்களையும், சந்தோஷமான அனுபவங்களையும் எண்ணிப் பார்க்க ஆரம்பித்தல்.
பயம் மற்றும் கவலை
இனி ஒருகாலமும் குடிக்காமல் வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பது? வாழ்க்கையின் சந்தோஷங்கள் தொலைந்து விட்டனவோ? வாழ்க்கையில் ஏற்படும் தாங்கமுடியாத பிரச் சினைகளை எப்படி அணுகுவது? போன்ற மனவுணர்வுகள் ஏற்படலாம்.
தனிமை உணர்வும் சோர்வும்
அநேகமான சந்தர்ப்பங்களில் குடிக்கும் ஒருவரைச் சுற்றி எப்போதும் சிறிய கூட்டம் ஒன்று இருக்கும். அந்தவகையான கூட்டங்கள் எவையும் குடியை விட்டிருக்கும் காலப்பகு தியில் உடனடியாக ஏற்படமாட்டா. புதிய உறவு களை ஏற்படுத்துவதும் கஷ்டமாக இருக்கும். இவ்வாறான ஒரு சூழலில் குடியைவிட்டு இருப்பவர்கள் மனதளவில் தனிமை உணர்வை அனுபவிக்கக்கூடும்.
கோபம்
சிலவேளைகளில் குடிப்பழக்கத்தில் இருந்து வெளியேறியவர் அதனைத் தனக்காக அன்றி மற்றவர்களுக்காகச் செய்தது போன்ற, தான் ஒரு தியாகம் செய்திருப்பதான உணர்வுக்குள் அகப்பட்டு விடலாம். அதனால் மற்றவர்கள், குறிப்பாகக் குடும்ப உறுப்பினர்கள் தன்னை எப்போதும் போற்றவேண்டும் எனவும், தனக் குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கும் ஒரு மனநிலை தோன்றலாம். அவ்வாறு நடக்காதபோது கோபம் வந்து நான் ஏன் குடியை விடவேண்டும்?” என்ற நினைப் பும் உருவாகலாம்.
பொறுமை இன்மை
குடிப்பதனை நிறுத்திய சிலபேர் தாம் நினை த்தவுடன் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். உண்மையில், குடிக்கும் ஒருவரது வாழ்க்கையில் அவரது குடிப்பழக்கம் காரணமாக நிறையப் பாதிப்புகள், கவிழ்ட நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கும். அவர் குடியை விட்டவுடன் திடீரென்று எல்லாமே சரியாகி விடாது. எல்லாவற்றையும் படிப்படியாகச் சரியாக்குவது அவரது முயற்சியிலேயே தங்கியுள்ளது.
இவ்வாறு குடியில்லாமல் இருக்கும் தனது புதிய வாழ்க்கையை ஒருவர் எதிர்மறையாக உணர்ந்து கொள்வார் எனின், அது அவரை மறுபடியும் குடிக்கத் தொடங்குவதற்கு தூண்டி விடலாம்.
ஆனால் வேறு பல காரணிகளும், ஒரு வரை மதுவை நோக்கி இழுத்துவிடக்கூடிய தன்மை வாய்ந்தனவாக இருக்கும். தற்கால வாழ்க்கை முறையில் குடிக்கும் எண்ணத்தைத் தூண்டும் அல்லது ஊக்குவிக்கும் காரணிகளாக இருப்பவற்றில் சிலவற்றை இனிப் பார்க்கலாம்.
வெளித்தூண்டல்கள்
குடி தொடர்பான ஞாபகங்கள்
குடிக்கும் இடங்களுக்குச் செல்லுதல், குடித்த இடங்களைக் கடந்து செல்லுதல், குடிப்பவரு டன் நேரம் செலவிடுதல் போன்றன குடியை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும்.
கையில் அதிக பணம் கிடைத்தல்
திடீரென அதிக பணம் கிடைக்கின்ற நாட்கள் ஆபத்தானவை. சம்பள நாள், வெளிநாட்டி லிருந்து அனுப்பும் பணம் கிடைக்கும் நாள், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இனாமாகக் கொடுக்கும் பணம் போன்றன. மதுவை நோக்கி மனதை இழுக்கும் வல்லமை வாய்ந்தன.
பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வேளைகள்
பணப்பற்றாக்குறை ஏற்படும் வேளைகள், கடன் சுமையைச் சமாளிக்க முடியாத நிலை மைகள், கடன்கொடுத்தவர்களின் நச்சரிப்புகள் போன்றவற்றைச் சமாளிக்க முடியாது போகும் நேரங்களில் குடித்தால் என்ன? என்ற நினைவு ஏற்படலாம்.
நட்பின் அடையாளம்
பழைய மது பாவிக்கும் நண்பர்களைத் திடீரெனக் காணும் வேளைகளில் நட்புக்காகக் குடிக்க வேண்டும் என்ற தூண்டல் ஏற்படலாம்.
மதுப் பரிசு
தற்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தமது உறவினர்களுக்கு மதுப் போத்தல்களைப் பரிசாகக் கொண்டு வந்து கொடுப்பது, அல்லது அவர்களுடன் சேர்ந்து மது அருந்துவது எனும் ஒரு வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது மதுவை விட்டு இருப்பவருடைய மன உறுதியை மிகவும் பாதிக்கும் தன்மை வாய்ந்தது.
மதுவின் அங்கீகாரம்
செத்தவீடுகள், எட்டுச் செலவுகள், பிறந்த நாள் விழாக்கள், களியாட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் மது தாராளமாகவும், அதனைப் பாவிப்பதற்கான சமூக அங்கீகாரத்துடனும் கிடைப்பதனால் அந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வேளைகள் ஆபத்தானவை.
உள்தூண்டுதல்கள்
குடியை விட்ட ஒருவர் மீண்டும் குடிக்கத் தொடங்குவதற்குப் புறத்துனன்டல்கள் மாத்திரம் காரணமாகாது. அவரிலே இன்னமும் இருக்கின்ற குழப்பமான மனநிலையும், தளர்வான உறுதிப்பாடும் கூட அவர் மீண்டும் குடியை நாடுவதற்குக் காரணமாகலாம். இவ்வாறான தனிநபர் சார்ந்த சில உட்துண்டுதல்களை இப் போது பார்க்கலாம்.
அதிகரித்த மன உளைச்சல்
அமைதியின்மை, கோபம், களைப்பு. கவலை உருவாகும் நாட்களில் குடிக்கும் எண்ணம் ஏற்படலாம்.நேரங்களில் குடித்தால் என்ன? என்ற நினைவு ஏற்படலாம்.
நட்பின் அடையாளம்
பழைய மது பாவிக்கும் நண்பர் களைத் திடீரெனக் காணும் வேளைகளில் நட்புக்காகக் குடிக்க வேண்டும் என்ற தூண்டல் ஏற்படலாம்.
மதுப் பரிசு
தற்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தமது உறவினர்களுக்கு மதுப் போத்தல்களைப் பரிசாகக் கொண்டு வந்து கொடுப்பது, அல்லது அவர்களுடன் சேர்ந்து மது அருந்துவது எனும் ஒரு வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது மதுவை விட்டு இருப்பவருடைய மன உறுதியை மிகவும் பாதிக்கும் தன்மை வாய்ந்தது.
மதுவின் அங்கீகாரம்
செத்தவீடுகள், எட்டுச் செலவுகள், பிறந்த நாள் விழாக்கள், களியாட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் மது தாராளமாகவும், அதனைப் பாவிப்பதற்கான சமூக அங்கீகாரத்துடனும் கிடைப்பதனால் அந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வேளைகள் ஆபத்தானவை.
உள்தூண்டுதல்கள்
குடியை விட்ட ஒருவர் மீண்டும் குடிக்கத் தொடங்குவதற்குப் புறத்துனன்டல்கள் மாத்திரம் காரணமாகாது. அவரிலே இன்னமும் இருக் கின்ற குழப்பமான மனநிலையும், தளர்வான உறுதிப்பாடும் கூட அவர் மீண்டும் குடியை நாடுவதற்குக் காரணமாகலாம். இவ்வாறான தனிநபர் சார்ந்த சில உட்துண்டுதல்களை இப் போது பார்க்கலாம்.
அதிகரித்த மன உளைச்சல்
அமைதியின்மை, கோபம், களைப்பு.கவலை உருவாகும் நாட்களில் குடிக்கும் எண்ணம் ஏற்படலாம்.
அலுப்புச் சலிப்பு
குடியை விட்டு இருப்பவர்கள் எந்த வேலையும் இல்லாமல் “சும்மா இருக்கும் போதும், தனிமை, சலிப்பு உண்டாகும் போதும் மீணன் டும் குடித்தால் என்ன? என்ற உணர்வு ஏற்படலாம்.
வலிநிவாரணி
உடல்நிலை சரியில்லாத வேளைகள், நோக்கள் வலிகள் உருவாகின்ற நேரங்கள். மனதில் காயங்கள் ஏற்படும் வேளைகள் யாவும் ஒருவரை மறுபடியும் குடியை நோக்கிக் கொண்டு செல்லும் தன்மை வாய்ந்தவை.
அதிக மனமகிழ்வு நிலையும் களிப்பும்
வாழ்வில் ஏற்படும் சவால்கள், தடை தாண் டல்கள் போன்றவற்றை வெற்றிகரமாகக் கடக்கும் பொழுது ஏற்படும் கிளர்ச்சியுற்ற மன நிலை ஒருவரை மீண்டும் குடியை நாடச் செய்யும். உதாரணமாக, மகளுக்குத் திருமணம் நிறைவேறிவிட்டது, மகனின் வெளிநாட்டுப் பயணம் வெற்றியடைந்து விட்டது போன்ற சந்தோஷங்களைக் குடித்துக் கொண்டாட வேண்டும் என்ற உணர்வு தோன்றலாம்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014