குடிப்பவர்கள் எல்லாம் நித்திய குடிகாரர் ஆவதில்லை. அதாவது மதுவைத் தொட்டவர்கள் எல்லாம் மதுவுக்கு அடிமையான வாழ்வை அடைவதில்லை.
ஆயினும் குடிக்கத் தொடங்கும் பலர் நாளடைவில் மதுவுக்கு அடிமையாகி, அதிலே தங்கியிருக்கும் ஒரு நிலைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக மிக இளவயதுகளில் குடிக்கத் தொடங்குபவர்களிற் பலர் விரைவாக அடிமை நிலைக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
உண்மையில் மது அடிமைநிலை என்பது ஒரு நோய் போன்றது. ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாகவே இந்த நோய் அவருக்கு ஏற்டுகின்றது. இதற்கு ஆரம்ப காலத்தில் விரும்பியோ அல்லது ஆர்வக் கோளாறு கார ணமாகவோ மதுவைப் பாவிக்கத் தொடங்கியது மட்டுமே மது அடிமை நோய்க்குட்பட்டவரது பங்களிப்பாக இருக்கின்றது.
பரம்பரை அலகுகளும், ஒருவருடைய தனிப்பட்ட உடல், உளக் காரணிகளும், ஆளுமைப் பண்புகளும் இவ்வாறு போதை தரும் பதார்த்தங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.
இதனால்தான் சிலர் மதுவுக்கு மட்டும் அடிமையாகாது வேறு பல போதை தருகின்ற பதார்த்தங்களுக்கும் அடிமையாகி இருப்பதனைக் காணமுடிகிறது.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014