மது அடிமை நிலை தொடர்பான சில தகவல்கள்
- எமது சமுதாயத்தில் மது பாவனை யின் அளவு வருடாவருடம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
- மது பாவிப்பவர்களில் கணிசமானோர் மதுவிற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
- மது பாவனையாளர்கள் முதலில் பல் வேறு காரணங்களைச் சாக்காகச் சொல்லிக் கொண்டு குடிக்கத் தொடங்குவார்கள். பின்பு அவர்கள் மெல்ல மெல்ல மதுவிற்கு அடிமை யாகிவிடுகிறார்கள்.
- ஆரம்பத்தில் சந்தோஷமானதாக, மிகவும் சாதாரணமான விடயமாகத் தோன்றும் குடிப்பழக்கமானது, பின்பு ஒரு மாறா நோயாகிக் கஷ்டங்களைக் கொடுக்கின்றது.
- இவ்வாறான ஒரு நோய் நிலையில் ஒருவருடைய உடலும் மனமும் மது இல்லாத தொரு நிலைமையில் தொழிற்படக் கஷ்டப்படுகின்றன. இன்னுமொரு வகையில் சொல்வ தானால் மது பாவனையாளர்கள் உடலளவி லும், மனதளவிலும் மதுவிற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
- குடிநோய் பேதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரர். படித்தவர், படிக்காதவர், தொழிலாளி, முதலாளி, யாருக்கு வேண்டுமா னாலும் இந்நோய் வரலாம்.
- குடிநோயானது ஒரு நாட்பட்ட தொடர்ந்து வளர்ந்து கொண்டு செல்லும் நோய் போன்றது. இதற்கு தகுந்த முறையில் சிகிச்சை அளி க்க வேண்டியது அவசியம்.
- சிகிச்சையின் பின்பு ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் குடிக்காமல் இருப்பது தான் இந்த நோயிலிருந்து விடுபடும் சிறந்த வழியாக இருக்கும்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014
Posted in கட்டுரைகள்