புரதக்கலவைப் பிட்டு
தேவையான பொருட்கள்
கொள்ளுமா | 50 கிராம் |
முளைகட்டி காயவைத்த பயறுமா ( அவித்தது) | 50 கிராம் |
வறுத்து கோது நீக்கிய உழுத்தம்மா | 100 கிராம் |
உப்பு | தேவையான அளவு |
தேங்காய்ப்பூ | சிறிதளவு |
செய்முறை
கொள்ளு, உழுந்தை வறுத்து கோது நீக்கி மாவாக்கவும். பயறை முளைக்க வைத்து வெயிலில் உலர்த்தி பின் மாவாக்கவும். மேலே கூறப்பட்ட மாவகைகளை அரித்து ஒன்றாகச் சேர்த்து உப்பையும் ருசிக்கேற்ப சேர்த்து ஆவியடங்கிய சுடுநீர் சேர்த்து குழைத்து மணி மணியாக உலர்த்தி தேங்காய்ப்பூ கலந்து ஆவியில் அவித்தெடுக்கவும்.
மரக்கறி இறால் கதம்ப உசிலி
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு | 100 கிராம் |
கௌபி | 100 கிராம் |
கரட் | 1 சிறியது |
பீற்றூட் | 1 சிறியது |
போஞ்சி | 50 கிராம் |
செத்தல் மிளகாய் | 15 |
நல்லெண்ணெய் | 1.மே.கரண்டி |
பெருஞ்சீரகம் | தேவையான அளவு |
கடுகு | தேவையான அளவு |
உழுத்தம்பருப்பு | சிறிதளவு |
கறிவேப்பிலை | தேவையான அளவு |
இறால் | 100 கிராம் |
பெருங்காயம் | 2 சிட்டிகை |
செய்முறை
2 மணித்தியாலம் முன்பு துவரம் பருப்பு, கௌபி, செத்தல் மிளகாய் வெவ்வேறாக ஊற விடவும். ஊறிய பருப்புக்களை செத்தல் மிளகாயுடன் சேர்த்து கரகப்பாக அரைத்து அரைத்த விழுதுடன் உப்புத்தூள் சேர்த்து ஆவியில் அவித்து பின் உலர்த்தி வைக்கவும். மரக்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டி தனித்தனியாக வேகவைத்தெடுக்கவும் வேகும் போது அளவாக உப்புப் போடவும். அடுப்பில் தாச்சியை வைத்து சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, உ.பருப்பு, பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும். பின் வெந்த காய்கறிகளையும் உலர்த்திய பருப்புக்களையும் அவித்த றாலையும் பெருஞ்காயத்தையும் சேர்த்துக் கிளறவும். நன்கு பொல பொல வென்று வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். இறக்குவதற்கு முன் கறிவேப்பிலையையும், புரதக்கலவைப் பிட்டையும் சேர்த்துக் கிளறவும்.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி.சறோஜினிதேவி சண்முகநாதன்