பயறு பருப்பு கொத்து
செய்முறை
பயறு பருப்பு என்பவற்றுள் சிறிது நீர் விட்டு நன்றாக அவித்துக் கொள்ளவும். இறைச்சி, மரக்கறி மற்றும் இறால் என்பவற்றைச் சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். அதற்குள் உள்ளி வெங்காயம், மிளகாய், வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம், என்பனவற்றையும் சேர்த்து அவிக்கவும். தேவையானளவு உப்பு சேர்க்கவும். பின்னர் அவித்த பயறு பருப்புடன் இக்கலவையைச் சேர்த்துக்கிளறவும்.
தேவையான பொருட்கள்
பயறு | ½Kg |
பருப்பு | ½Kg |
கோழி இறைச்சி | 1Kg |
இறால் | 250g |
கறிமிளகாய் | 50g |
பச்சை மிளகாய் | தேவையானளவு |
வெங்காயம் | 50g |
தூள் | தேவையானளவு |
உள்ளி | தேவையானளவு |
வெந்தயம் | தேவையானளவு |
கடுகு | தேவையானளவு |
மிளகு, சீரகம் | தேவையானளவு |
கத்தரிக்காய் | 50g |
லீக்ஸ் | 50g |
கோவா | 50g |
தக்காளிப்பழம் | 50g |
உப்பு | தேவையானளவு |
கறிவேப்பிலை | சிறிதளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – செல்வி.கஜானி தேவதாஸ்
Posted in சிந்தனைக்கு