யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, என 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்திலே யாழ் போதனாவைத்தியசாலை மட்டுமே உயர் மட்ட வைத்திய வசதிகளைக் கொண்ட (Tertiary) வைத்திய சாலையாக காணப்படுகின்றது. இங்கு வைத்தியத் தேவையை எதிர் நோக்கியுள்ள மொத்த சனத்தொகை 1.2 மில்லியன் எனினும் இத் தொகை மேலும் அதிகரித்துச் செல்வதையே காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்க்கான பிரதான காரணங்களாவன.
- அயல் நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தம் தாய் மண்ணிற்குத் திரும்பி வரும் நிலை தற்போது அதிகரித்து செல்கின்றமை.
- இன மொழி மற்றும் கலாசார பின்னணியின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களும், கண்டி கொழும்பு போன்ற இடங்களில் வைத்திய வசதிகளைப் பெறுவதை விட யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதையே விரும்பி வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றமை.
தற்போது இலங்கையில் மற்றைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது இருதய நோயினால் பாதிக்கப்படுவோர் வீதம் வடமாகாணத்தில் சற்று அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கான முதலாவது காரணமாக அமைவது வடபகுதியில் இருந்து இளம் சமுதாயம் வெளியேறி தற்போதைய சனத்தொகைப் பரம்பலில் வயது வந்தோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படல். இதனால் இருதய நோயாளிகளின் பராமரிப்பிற்கான தேவை, குறிப்பாக இதய சத்திரசிகிச்சை (CABG) செய்வதற்கான தேவை தற்போது அதிகரித்து வருகின்றது. இரண்டாவது குறைந்த வாழ்க்கைத்தரத்தில் உள்ள மக்களின் தொகை அதிகமாக உள்ளதால் மூட்டுவாத காய்ச்சலினால் இருதய நோய்க்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகமாயுள்ளது. இதனால் இருதய வால்வு மாற்று சத்திரசிகிச்சை செய்வோரின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சைப் பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் .
வைத்திய சாலையின் இருதய சிகிச்சைப் பரிவில் வளர்ந்தோருக்கான பிரிவில் 02 இருதய சிகிச்சை நிபுணர்களும் குழந்தைகளுக்கான பிரிவில் ஒரு இருதய சிகிச்சை நிபுணரும் நிரந்தர சேவையிலுள்ளனர். மேலும் 2011ம் ஆண்டு ஆடி மாதத்திலிருந்து இருதய சிகிச்சை ஆய்வு கூடமும் இயங்கத் தொடங்கியுள்ளது. இங்கு கடந்த இரண்டரை வருடங்களாக இருதய நோயை கண்டறியும், மற்றும் சிகிச்சை வழங்கும் செயன்முறைகளை மெற்கொண்டு வருகின்றோம். மேற்கூறிய வகையிலான செயற்பாடுகள் மொத்தமாக 2815 மெற் கொண்டுள்ளோம். அவற்றின் விபரம் வருமாறு
Year | Angiograms | PCI | PIMC | PPM | TPM | RHCC | ASDClosure | PDACoiling | BAS |
2011 | 369 | – | – | 08 | 07 | – | – | – | – |
2012 | 998 | 99 | 32 | 52 | 22 | 12 | 14 | – | – |
2013 | 983 | 114 | 09 | 40 | 34 | 05 | 15 | 01 | 01 |
Total | 2350 | 213 | 41 | 100 | 63 | 17 | 29 | 01 | 01 |
‘ Hope in the Horizon ‘
Jaffna teaching hospital is the only tertiary centre for the whole of the Northern Province which encompasses five districts namely Jaffna, Killinochchi, Mannar, Mullaitivu and Vavuniya. Therefore it caters a population of 1.2 million.
In fact this is likely to be even more as significant numbers of expatriates are expected to return to their homeland with the end of war. Further given the common ethnic and cultural backgrounds patients from the eastern province are also likely to seek treatment in Jaffna than Kandy or Colombo.
Though we lack concrete data we believe that cardiac disease burden in the northern district is slightly higher than the rest of Sri Lanka. This is for two particular reasons. Firstly the northern region is witnessing a demographic change where due to the migration of the younger generation the age distribution of the population has become skewed. Thus the need for cardiovascular care particularly the need for bypass surgery has increased. Secondly the incidence of rheumatic heart disease has not declined due to continuing poor socioeconomic status. Therefore the need for valve replacement surgery remains high
Cardiology Unit of Teaching Hospital Jaffna consists of adult and paediatric departments with three Permanent Cardiologists including two Adult Cardiologists and one Paediatric Cardiologist.
Catheter lab became operational from July 2011. We have been performing diagnostic and interventional procedures for the last two and a half years. In summary we have done 2815 procedures which includes diagnostic and interventional. Table below shows the details
Year | Angiograms | PCI | PIMC | PPM | TPM | RHCC | ASDClosure | PDACoiling | BAS |
2011 | 369 | – | – | 08 | 07 | – | – | – | – |
2012 | 998 | 99 | 32 | 52 | 22 | 12 | 14 | – | – |
2013 | 983 | 114 | 09 | 40 | 34 | 05 | 15 | 01 | 01 |
Total | 2350 | 213 | 41 | 100 | 63 | 17 | 29 | 01 | 01 |
PCI-Percutaneous Coronary Intervention ;PTMC-Percutaneous transvenous mitral commissurotomy; PPM-Permanent Pacemaker;TPM-Temporary Pacemaker; RHCC-Right Heart cardiac catheterization; BAS-Balloon Atrial Septostomy