எமது சிந்தனையில் உதித்த ஆரோக்கிய உணவு
தேவையான பொருட்கள்
முளைக்கீரை | – | 100 கிராம் |
கடலை | – | 100 கிராம் |
பயறு | – | 100 கிராம் |
போஞ்சி | – | 100 கிராம் |
கரட் | – | 100 கிராம் |
தக்காளி | – | 100 கிராம் |
வெண்டிக்காய் | – | 100 கிராம் |
அப்பிள் | – | 1 |
வெங்காயம் | – | 100 கிராம் |
உள்ளி, புளி | – | 50 கிராம் |
மிளகு,சீரகம், வெந்தயம் சிறிதளவு | ||
உழுந்துமா | – | 250 கிராம் |
ஏனையவை | – | 100 கிராம் |
நல்லெண்ணெய் | – | சிறிதளவு |
கறிவேப்பிலை, உப்பு | – | சிறிதளவு |
செய்முறை
கடலை பயறு, இரண்டினையும் முன்னதாக நன்றாக ஊறவிடவும், மிளகு சீரகம், வெந்தயம், மூன்றையும் நன்றாகப் பொடி செய்துகொள்ளவும், பின்பு போஞ்சி, கரட், தக்காளி வெண்டிக்காய், அப்பிள், உள்ளி, வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும், வெட்டிய போஞ்சி, கரட், தக்காளி, வெண்டிக்காய், அப்பிள், உள்ளி, வெங்காயம், கறிவேப்பிலை யாவற்றையும் பொட்டளி செய்து, இலேசாகக் கரைத்து வைக்கப்பட்ட உப்பு – புளி கரைசலில் தோய்த்து இட்லிச் சட்டியில் வைத்து அவிக்கவும்.
சூடாக்கப்பட்ட தோசைக் கல்லில் நல்லெண்ணை பாவித்து தோசையினை வார்த்து வைக்கவும். பின்பு பொட்டளியில் அவிக்கப்பட்ட ”இவாபம்” தோசையில் வைத்து தேவையான வடிவங்களுக்கேற்ப சதுரமாகவோ, உருண்டையாகவோ, பரிமாற வசதியாக வெட்டி எடுக்கவும்.
ஆம் சாப்பிடுங்கள் சகல ஊட்டச்சத்துக்களும் “இவாபம்” உணவில் அடங்கியுள்ளது.
இஃது ஒரு சிற்றுண்டியாகவும், காலை உணவாகவும், பயணத்திற்கேற்ற இரவுணவாகவும், மாணவர்களின் மூளை வளர்ச்சிக்கேற்ற உணவாகவும், ஒய்வூதியர்களை உற்சாகப்படுத்துவதாகவும் மொத்தத்தில் சகலருக்குமேற்ற ஒரு பரிபூரண உணவாகவும் “இவாபம்” – இலாபகரமானதாக வெல்லப்படுகின்றது. இவாபம்! ஆம் ! ஒரு சுகதேகியாக வாழ இது ஒர் புதிய உணவு.
சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள்!!
நீரிழிவு சிகிச்சை நிலையத்தால் நடாத்தப்பட்ட புதிய ஆரோக்கிய உணவைக் கண்டறியும் போட்டியில் பரிசு பெற்றது.
அறிமுகப்படுத்தியவர்.
எஸ்.சிவஞான நாராஜா