உழுந்து உப்புமா
செய்முறை
முதல் நாள் உழுத்தம் பருப்பை ஊறவைத்து சுத்தம் செய்து உப்புப் போட்டு கிரைண்டரில் அரைத்து எடுத்து இட்லி சட்டியில் அவித்து எடுக்கவும் பின்வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுகொதிக்கவிடவும். கொதித்த பின் வெங்காயம் மிளகாய் இஞ்சி கடுகு சோம்பு உழுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கரட் ஆகியவற்றை வதக்கவும் வதக்கிய பின் அவித்த உழுந்தை உலர்த்தி இதனுடன் சேர்த்துகிளறவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
உழுத்தம்பருப்பு | 1 கப் |
கடுகு | சிறிதளவு |
இஞ்சி | சிறிதளவு |
மிளகாய் | 02 |
வெங்காயம் | தேவையான அளவு |
உப்பு | சிறிதளவு |
கடலைப்பருப்பு | சிறிதளவு |
எண்ணெய் | சிறிதளவு |
துருவியகரட் | 50 கிராம் |
இரவு உணவாகவோ காலை உணவாகவோ இவ் உணவை குழந்கைளுக்கு கொடுக்கலாம்
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms கிருபனா பிறேம்குமார்
Posted in சிந்தனைக்கு