செய்முறை
ஊறவைத்த பயறை அவித்து எடுக்கவும் பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும் கொதித்த பின் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும் வதக்கிய வெங்காயத்தில் கடுகு சோம்பு போட்டு அதனுடன் துருவிய கரட் கறிவேப்பிலை பயறையும் இட்டு அவித்த உருளைகிழங்கையும் நசித்து கிளரியபின் தேங்காய்ப்பாலையும் சேர்த்து எடுக்கவும் அதனுள் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மசாலாத்தூள் சேர்த்து கிளறிய பின் சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
வேறு ஒரு பாத்திரத்தில் பயிற்றம்மாவை உப்பு போட்டு பிரட்டி எடுத்து ரோலரால் உருட்டி எடுத்து அம்மாவினுள் பயறு உருண்டைகளை வைத்து மூடி கிழங்கு ரொட்போல் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
பயிற்றம்மா | 01 கப் |
வெங்காயம் | தேவையான அளவு |
காய்ந்த மிளகாய் | 03 |
கடுகு | தேவையான அளவு |
சோம்பு | தேவையான அளவு |
கறிவேப்பிலை | தேவையான அளவு |
உப்பு | தேவையான அளவு |
எண்ணெய் | தேவையான அளவு |
தேங்காய்ப்பால் | தேவையான அளவு |
உ.கிழங்கு | 01 |
கரட் | 50கிராம் |
பாடசாலைக்கு எடுத்துச் சென்று உண்பதற்கு ஏற்ற உணவு
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் :- Ms.கிருபனா பிறேம்குமார்.