அண்மைக் காலமாக வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்களும், பாதிப்புக்களும் அதிகரித்து வருகின்றது. வீதி அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருவதாலும் பல வீதிகள் திருத்தப்பட்டுள்ளதாலும் பாதுகாப்பு முறைகளை கவனத்தில் எடுக்காது வாகனம் செலுத்துவதால் இந்நிலமை பெருமளவில் அதிகரித்து காணப்படுகிறது.
இளைஞருக்கு பெற்றோர்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ நவீன உந்துருளிகளை (motor bike) வாங்கிக் கொடுப்பதாலும், பொத்தமான பயிற்சிகள் இன்றி வேகமாக ஒடத்தலைப்படுவதாலும், விபத்துக்களுக்குள்ளாகி பாதிப்பினை இளம் சமூகம் எதிர் நோக்குகின்றது. வாகன அனுமதிப் பத்திரமின்றி வாகனம் ஓடுபவர்களினதும் எண்ணிக்கை யாழ் நகரில் அதிகமாகக் காணப்படுகின்றது.
வீதி விளக்குகள் இல்லாத காரணத்தால் இரவில் நடமாடுபவர்கள் கறுப்பு அல்லது கடும் நிற ஆடைகளை தவிர்த்து, வெள்ளை அல்லது மென் நிற ஆடைகளை அணிந்து செல்லல் பாதுகாப்பானது. நகரப் பகுதிகளில் வேகமாக வாகனங்கள் ஒட்டுவதை அனைத்து மக்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிறு தூரங்களுக்குச் செல்லும் போது வாகங்களைப் பயன்படுதுவதிலும் நடந்து செல்வது உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. வீதி சம்பந்தமான ஒழுங்கு முறைகளைப் பேனும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக மற்றவர்களுக்கும் அறிவூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவது நன்று. இவ் வாகன விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்கள், இழப்புகளைக் குறைக்க பொதுமக்களினதும், வீதி அபிவிருத்திப் பிரிவினரதும், வீதி ஒழுங்கிற்குப் பொறுப்பானவர்களினதும், வீதி அபிவிருத்திப் பிரிவினரதும், வீதி ஒழுங்கிற்குப் பொறுப்பானவர்களினதும், வைத்தியத் துறை சார்ந்தோரினதும் ஒன்று பட்ட முயற்சி தேவையாகக் காணப்படுகின்றது.