தேவையான பொருட்கள்
கோழியிறைச்சி (எழும்பு அற்றது | – | 500g |
முட்டை | – | 5 |
கரட் துருவல் | – | சிறிதளவு |
சிறு குறிஞ்சா இலை | – | சிறிதளவு |
பீற்றூட் துருவல் | – | சிறிதளவு |
நல்லெண்ணெய் / சூரியகாந்தி எண்ணெய் | – | 1 மே. கரண்டி |
மஞ்சள்தூள் | – | தேவையானளவு |
உப்புத்தூள் | – | தேவையானளவு |
மிளகுதூள் | – | தேவையானளவு |
செய்முறை :
இறைச்சியை கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்புத்தூள், மஞ்சள்தூள், மிளகுதூள் சேர்த்து வட்டமாகத் தட்டி நீராவியில் வேகவைத்து எடுக்கவும். பின்னர் தோசைத்தட்டு அல்லது சோஸ்பானை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி சூடாக்கியதும் வட்டமாக அவித்தெடுத்த இறைச்சியை அதன்மேல் வைத்து உடைத்த முட்டையை நடுவே ஊற்றி பின் கரட்துருவல், பீற்றூட்துருவல், சிறிகுறிஞ்சா இலை என்பவற்றை மேலே தூவிய பின் மூடிவேகவைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.
திருமதி நகுலேஸ்வரி இராமச்சந்திரன்