Scabies என்பது Sarcoptes scabbier என்கின்ற உண்ணியால் ஏற்படுகின்ற தோல்கடி நோயாகும். இவ்உண்ணியானது எமது தோலினை ஊடுருவி தோலின் கீழாக முட்டையினை இடுகின்றது. இதனால் நோய்த்தாக்கம் ஏற்படுகின்றது.
நோய்அறிகுறிகளாவன கடுமையான கடி(அதிகமாக இரவுப்பொழுதில்) தோழ் தடிப்படைதல் சிறுபருக்கள் புண் என்பன ஏற்படலாம். முதல் தடவையாக இவ் உண்ணியால் பாதிக்கப்படின் 4 – 6 கிழமைகளின் பின்னரே நோய் அறிகுறிகள் ஏற்படும். தோலில் ஏற்படுகின்ற தடிப்புகள் (Skin rashes) மற்றைய நோய் அறிகுறிகளுடன் ஒருமைப்பட்ட தன்மையைக் காட்டும். தோல்கடியானது சிறுபிள்ளைகளிலும் முதியவர்களிலும் மிகவும் கூடுதலாக காணப்படும் தோல்தடிப்பானது நேர்கோடு அல்லது வளைந்தகோடு வடிவமாககக் காணப்படும்.
Scabier mita பொதுவாக கைவிரல்களுக்கிடையில், மணிக்கட்டு, முழங்கை, முழங்கால் தோல் மடிப்புகள், இடுப்பைச்சுற்றிய பகுதி, மார்பகங்களிற்கு கீழான பகுதி இனப்பெருக்க உறுப்புகளை சுற்றிய பகுதி உள்ளங்கை, உள்ளங்கால், இவ் உண்ணியானது நீண்டநேர தோல்த் தொடுகை மூலமாக பரம்பலடைகின்றது. இதனால் பெரும்பாலும் பாதிப்படைபவர்கள் ஒரே குடும்பத்தில் வசிக்கும் உறுப்பினர்கள், உடல்உறவில் ஈடுபடுபவர்கள், நெருக்கமான குடிசைகளில் வசிப்பவர்கள், பராமரிப்பு நிலையங்களில் இருப்பவர்கள் என்போரைச் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
Crusted scabies என்பது மிகவும் சிக்கலான நிலைமை ஆகும். இந்நிலைமையில் 10,000 இற்கு மேற்பட்ட உண்ணியானது ஒருவனில் காணப்படும். இதனால் தோலில் சிறு சிறு கட்டிகள் தோன்றும். இதனுல் உண்ணியும் அதன் முட்டைகளும் காணப்படும். இது பொதுவாக நோய்எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள் முதியவர்கள், உடல்இயக்கம் குறைந்தவர்களில் ஏற்படும்.
இந்நோயானது முற்றாகக் குணப்படுத்த முடியும். இந்நோய்க்கு வைத்தியரினால் பரிந்துரைக்கப்படும் 25% பிபி கிறீம் (Benazyl benzoate cream) 10% சல்பர்(sulphar ointneat), 5% பேர்மித்றின் கிறீம் (pemethiran) என்பவற்றில் ஒன்றை உடம்புமழுவதும் பரிந்துரைக்கப்படும் நேரத்துக்கு பூசிக்கொண்டிருப்பதே சிகிச்சை முறையாகும். அத்துடன் நோயாளியும் அவருடன் வசிப்பவர்களும் தங்களது உடை மற்றும் பயன்படுத்துகின்ற போர்வைகளையும் தோய்த்து மூன்று நாட்கள் சூரியவெளிச்சத்தில் காயவிட வேண்டும்.
V.கஜந்தினி
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ்போதனா வைத்தியசாலை