இயந்திரமயமாக்கப்பட்ட நவீன உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வாழ்க்கைப் பயணத்தை நடத்திக்கொண்டிருக்கும் மனிதர்களின் தமக்கான உலகமாக திகழ்வதே குடும்பமாகும். ஒர் சமுதாயத்தின் அடிப்படை அலகாகவும் இருப்பது குடும்பமே. கருக்குடும்பங்களே நம் சமூதாயக்கட்டமைப்பில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வகையில் அக்குடும்பத்தினை திட்டமிட்டு அழகானதும் அளவானதுமாக அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நாம் இருவர் நமக்கு இருவர் எனும் நாகரிகம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலே மேலும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியும் ஆரோக்கியமும் படைத்தவர்கள் மேலும் குழந்தைகளைப் பெறுவதன் மூலம் அக்குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கின்றது. குழந்தைகளின் எண்ணிக்கை, இரு குழந்தைகளுக்கிடையிலான இடைவெளி மற்றும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியத்தையும் உறுதிசெய்தல் என்பனவே குடும்பத்தை திட்டமிடுதலின் பிரதான குறிக்கொள்களாகும்.
ஆரோக்கியமான குழந்தையினை பெறுவதற்கு தாயின் ஆரோக்கியமானது யௌவனப் பருவம் முதலே பேணப்படுவது அவசியமாகும். ஆரோக்கியமான உடற்திணிவுச்சுட்டி, ஈமோகுளோபின் மற்றும் கருத்தரிக்க முன்பிருந்தே போலிக்கமில குளிகைகளை உட்கொள்ளுதல் போன்றவை ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பிற்கு வழிகோலுகின்றன. மேலும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் இளம்பெண்கள் கருத்தரிக்கும் முன் தங்களது வைத்தியரிடம் கருத்தரிப்பது பற்றிய ஆலோசனையை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
தொடரும்…