Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



கைத்தொலைபேசிகளை காற்சட்டைப் பைகளில் வைப்பது பாதுகாப்பானதா?

கைத்தொலைபேசிகள் தற்போது மனிதனின் அன்றாட செயற்பாடுகளிற்கு இன்றியமையாத ஒரு சாதனமாக மாறியுள்ளது. பொதுவாக இதனை காற்சட்டைப் பைகளில் வைத்திருக்கும் பழக்கமே காணப்படுகின்றது.

மனிதர்கள் தங்களின் காற்சட்டைப்பையில் செல்லிடபேசியை வைப்பதனால் அவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பத்து வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை விரிவாக அலசி ஆராய்ந்தது. இந்த ஆய்வின் முடிவில், செல்லிடபேசிகளில் இருந்து உருவாகும் சூடும், மின்காந்த அலைகளும் கதிரியக்கமும் சேர்ந்து மனிதர்களின் விதைப்பைகளின் விந்தணு உற்பத்தியையும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் செயற்படும் தன்மையையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய மருத்துவர் பியானோ மாத்யூஸ் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் இந்த ஆய்வின் முடிவுகள் முழுமையானவை அல்ல என்று மற்ற விந்தணு ஆய்வாளர்கள் இவற்றை புறந்தள்ளியிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட ஆண்களின் மற்ற பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் உட்கொண்ட மருந்துகள் போன்றவற்றை இந்த ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாத நிலையில் செல்லிடபேசிகளை காற்சட்டைப்பையில் வைப்பதனால் மட்டுமே இவர்களின் விந்தணு உற்பத்தியும் விந்தணுக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக கூறுவதை ஏற்கமுடியாது என்கிறார் ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விந்தணு ஆய்வாளர் மருத்துவர் ஆலன் பேசி தெரிவிக்கிறார்.

தமது ஆய்வின் முடிவுகள் இறுதியானவை அல்ல என்பதை ஏற்றுக்கொள்ளும் பியானோ மாத்யூஸ், செல்லிடபேசிகளின் சூடும், மின்காந்தப்புலம் மற்றும் கதிரியக்கவீச்சு ஆகியவை விந்தணுக்களில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து மேலதிக ஆய்வுகள் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தமது ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துவதாக தெரிவிக்கிறார்.

Posted in செய்திகள்
« நோய்வாய்ப்பட்டவர்களின் உரிமைப்போராட்டம் – பகுதி 4
பாம்புக்கடிக்கு மூக்கினுள் அடிக்கும் மருந்துமூலம் சிகிச்சை »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com