Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீர்வெறுப்பு நோயிலிருந்து எம்மைப் பாதுகாப்போம்!

உலக நீர்வெறுப்பு நோய் தினம் வருடா வருடம் செப்ரெம்பர் 28 ஆம் திகதியன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. நீர்வெறுப்பு நோயானது மிருகங்களிடமிருந்து மனிதனுக்குக் கடத்தப்படுகிறது. எவ்வாறெனில், ஒரு வைரஸான Rabies Virus ஆனது தங்கி வாழ்வதற்கான சிறந்த இடமாக விலங்குகளின் உடல் காணப்படுகின்றது. இவ்வகையான வைரஸினால் பீடிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து மனிதனுக்கு கடத்தப்படுவதன் மூலம் ஏற்படும் இறப்புக்களில் 95வீதத்துக்கு மேலான இறப்பானது நாய்க்கடியினால் ஏற்படுகிறது.

இவ் வைரஸானது உடலின் மூடிய தோலினூடாக எம் உடலினுள் செல்லாது. இவ் வைரஸானது விலங்கு களிலிருந்து அவற்றின் எச்சில் மூலம் உடம்பில் ஏதேனும் காயங்கள் சொறிவதால் ஏற்பட்ட கீறல் காய மாகினும் காணப்பட்டால் அல்லது அந்த விலங்கு எம்மைக் கடித்தால் எம் உடலினுள் சென்றுவிடுகிறது. இவ்வாறு சென்ற வைரஸானது அங்கு மேலும் வளர்ச்சியடைந்து குணங்குறிகளைக்காட்டமுனைகிறது.

இவ்வகையான ஆபத்தான நீர் வெறுப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக உலகளாவிய ரீதியில் வருடந்தோறும் செப்ரெம்பர் 28 ஆம் திகதி உலக நீர்வெறுப்புதினமாகபிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. இந்தத் தினம் இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வை ஞாபகப்படுத்துகிறது. இந்த நோயிற் கெதிரான நீர்ப்பீடனத்தை வழங்கக்கூடிய தடுப்புமருந்தைக் கண்டு பிடித்த இரசாயனவியலாளரும், நுண்ணங்கிவியலாளருமான லூயிஸ் பாஸ்ரர் இறந்ததினமும் செப்ரெம்பர் 28 ஆம் திகதியேயாகும். இன்றையநாள்களில் பாதுகாப்பான, வினைத்திறனான தடுப்புமருந்தை நீர் வெறுப்புநோய்க்கெதிராகப் பாவிப்பதன் மூலம் இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்த இயலுமாகியுள்ளது.

இந்தவருடம்2016ஆம் ஆண்டுக்கானதொனிப்பொருளாக அமைவது நீர்வெறுப்புநோய்க்கெதிரானதடுப்பு மருந்து பற்றிய கல்வியை மக்களுக்கு புகட்டுவதன் மூலம் நீர்வெறுப்பு நோயை இல்லாதொழிப்போம்” என்பதாகும். இந்தத் தொனிப்பொருள் மூலம் எதிர்பார்க்கப்படும் விடயம் 2030 ஆம் ஆண்டளவில் இந்தநோயினால் ஏற்படும் மனித இறப்புக்களை இல்லாதொழித்தல் என்பதாகும்.

வைரஸ் தொற்றின் அறிகுறி

இனி இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரில் தென்படும் அறிகுறிகளைப் பார்ப்போம். உடலினுள் தொற்றுக்குள்ளான இந்த வைரஸின் வளர்ச்சிக்காலம் அல்லது அடைகாக்கும் பருவம் பொதுவாக ஒன்று தொடக்கம் மூன்றுமாத காலமாயினும், அது ஒரு வாரம் தொடக்கம் ஒருவருடம் வரைகூட நீடிக்கலாம். விசர்நாய்க் கடிக்குள்ளான ஒருவரில் ஏற்படும் குணங்குறிகளை இருபிரதான வகையினுள் உள்ளடக்கலாம்.

ஆரம்ப குணங்குறிகளாக காய்ச்சல் ஏற்படல், நாய் கடித்த இடத்தில் எரிவு காணப்படல் போன்றவை உணரப்படும். மேலும் இந்த வைரஸானது, எமது மூளைமைய நரம்புத் தொகுதியெங்கும் பரவுவதால் நாள் போக்கில் மூளை மற்றும் முள்ளந்தண்டுப்பகுதிகளை யும் பாதிக்கும். இதனால் வழக்கத்துக்கு மாறாக அதீத படபடப்பு, தன்னால் கட்டுப்படுத்த முடியாத உடல் ஆட்டங்கள் காணப்படல் மற்றும் தண்ணிரை வெறுத்தல் போன்ற செயற்பாடுகளை அவதானிக்கலாம்.

சில நாள்களின்பின்னர், இதய சுவாச அங்கங்களின்தொழிற்பாடு இல்லாமற்போனதும் இறப்பு நேரிடுகிறது. மற் றையவகையான குணங்குறிகுறைவாகவேதென்படும். அதாவது நாயின் கடிக்குள்ளான இடத்தைச் சுற்றியுள்ள தசைப்பகுதியானது சிறிது சிறிதாக உணர்ச்சி யற்றதாக, விறைப்பாக மாறும்.

பின்னர், உடல் முழுவதும்விறைப்புநிலைஏற்பட்டுஇறுதியில்இறப்நேரிடுகின்றது. ஒவ்வொரு 15 நிமிட இடைவேளையில் ஒருவர் இந்த நோயால் இறக்கின்றார் எனக்கணக்கிடப்படுகிறது.

இதிலும் 40 வீதமானோர் 15 வயதுக்குக் குறைவான சிறுவர் பராயத்தினராவர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இனி, எவ்வாறு விசர்நாய்க்கடி வியாதியை இல்லா தொழிக்கலாம் என்று பார்ப்போம்.

எமது வீட்டில் வளர்க்கும்நாய்களுக்குவிசர்நாய்த்தடுப்பூசிபோடவேண்டும். இதன்மூலம் Rabies வைரஸை நாயின் உடலி லிருந்து அழித்துவிடலாம். மேலும், மனிதர்களாகிய நாமும் முற்கூட்டியே இந்தத் தடுப்பு ஊசியைப் போட வேண்டி நேரிடலாம். எவ்வாறான சந்தர்ப்பங்களென்றால், தொலை தூரத்துக்கு பயணிக்க வேண்டியிருப் பின், அல்லது விலங்குகள் வதியும் இடத்தில் முகாம் அமைத்து தங்கியிருக் வேண்டியிருப்பின் அல்லது விலங்குகளுடன் விளையாடுபவராயின் முற்பாதுகாப்பு அவசியமானதே. அடுத்ததாக, சிறுவர்களை விசர் நாய்க் கடியிலிருந்து பாதுகாப்பது எப்படி என்று நோக்குவோம்.

பொதுவாக 5 வயது தொடக்கம் 14 வயது வரையுள்ள சிறுவர்களை கவனத்திற் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். மிகவும் சிறந்த பாதுகாப்பானமுறையாதெனில், வளர்ப்பு நாய்களுக்கு விசர்நாய்த் தடுப்பூசி போடு வதும், சிறுவர்களைநாய்கடிக்காமல் இருக்கும்படி பாதுகாத்துக் கொள்வதுமாகும்.

விசர்நாய்க் கடியிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது எப்படி?

01.நாய் தனது உணவில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது அல்லது தனது குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அல்லது தூக்கத்திலிருக்கும் போது அதைத் தொந்தரவு செய்யக்கூடாது. அதையும் மீறிதொந்தரவு செய்தால் அல்லது பயமுறுத்தினால் என்ன நடக்கும். எங்கள் செல்லப்பிராணி எங்கள் சிறுவனையே கடித்து விடுகிறது.

02.நாய் கோபத்துடன் இருக்கும்போது தனது பற்களை வெளியே காட்டிக் கொண்டிருக்கும். அத்துடன் பயத்துடன் காணப்படுகையில்தன் வாலைத்தன் இரு செவிச்சோனைகளையும் சமாந்தரமாக நிலத்தை பார்த்தபடி வைத்துக் கொள்ளும், இத் தகைய சந்தர்ப்பத்தில் சிறுவரை நாயிடமிருந்து விலகியிருக்கச் செய்ய வேண்டும்.

03நாய்உங்களைக்கடிக்கவரும்போதுஉடனடியாகவே அந்த இடத்திலேயே அசையாமல் மரம் போல் நிற்க வேண்டும். அல்லது நிலத்தில் விழுந்து விட்டால் அசையாப் பாறை போல் நடிக்க வேண்டும்.

04.வளர்ப்பு நாயாக இருப்பினும் அதனுடன் விளையாடத் தொடங்கு முன்னர், பெற்றோரின் சம்மதத் தைப் பெறவேண்டும். நாயுடன் அறிமுகமாகும் போது அதன் முதுகின் மேலாக அல்லது பக்கவாட்டின் மேலாக பொதுவாக தடவுவதன் மூலம் அதனுடைய நட்பைப் பெற்றுக் கொள்ள முயலலாம்.

05.நாயின் கடிக்கு இலக்காகியிருந்தால், காயத்தை உடனடியாக சவர்க்கார நீரினால் 15 நிமிடத்தினுள் கழுவவும். கழுவிய பின் முதலுதவி வசதியை பெற முனைய வேண்டும். அத்துடன் உங்களைக் கடித்த நாயைப் பற்றிய விவரங்களையும் (நாயின் நிறம், பருமன், எங்கே வைத்து கடித்தது. உடலின் எப்பா கத்தில் கடித்தது. இந்த நோய்க்கு விசர்நாய் தடுப் பூசி போடப்பட்டுள்ளதா? அவதானித்து வைத்தி ருக்கவேண்டும். பின்னர், வைத்தியசாலை சென்று சிகிச்சை பற்றிய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

திருமதி சஸ்ரூபி சதீஸ்

Posted in கட்டுரைகள்
« சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள்
நீரிழிவும் மன அழுத்தமும் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com