Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    October 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Sep    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவும் மன அழுத்தமும்

மன அழுத்தமானது உடலில் நோய், விபத்து, சோகம், கவலை, பயம், யோசனை, குளிர் அதிக சூடான காலம், கோபம், கடன், இழப்பு போன்ற பல காரணங்களாலோ அல்லது வெளித்தாக்கத்தினாலோ ஏற்படுகின்றது.

இவ்வாறு எல்லாவித மன அழுத்தத்தினாலும் பாதிக்கப்படுவது மூளையே ஆகும். இவ்வாறு பாதிக்கப்படும் போது எமது மூளையில் இருந்து சைகைகள் (அறிவுறுத்தல்கள்) ஓமோன்களைச் சுரக்கும் சுரப்பிகளுக்கு அனுப்பப்படுகின்றன. உதாரணமாக அதிரினலின் (Adrenaline) நோர் அதிரினலின் (Nor Adrenaline) குளுக்ககோன் (Gucagon) கோட்டிசோல் (Cortisol) வளர்ச்சி ஓமோன் (Growth hormone) இவைகள் சுரக்கப்பட்டு வெவ்வேறுவிதத்தில் செயற்பட்டு எமது ஈரலில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் கிளைக் கோஜனை (Glycogen) குளுக்கோசாக மாற்றி குருதியில் சேர்த்து விடுகின்றன.

அத்துடன் இந்த ஓமோன்கள் இன்சுலினின் எதிர்ப்பையும் தூண்டிவிடுகின்றன. இந்த நிலையில் இவ்வாறு பெருகி வரும் குருதியில் குளுக்கோசின் அளவை இன்சுலின் ஆனது முழு அளவிலும் கலங்களுக்குள் உட்புகுத்தமுடியாதநிலை ஏற்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு உயர் வடைகின்றது.

மேற்படி மன அழுத்த ஹோமோன்களாக அதிரினலின் கோட்டிசோல் குளுக்ககோன் குருதியில் அதிகரிக்கும்போது அல்லது சேர்க்கப்படும் போது இவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இன்சுலினின் தொழிற்பாட்டை பாதிக்கின்றன. இதனால் கலங்களுக்குள் இன்சுலின் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து குளுக்கோஸ் கலங்களுக்குள் உட்புக முடியாத நிலை ஏற்படும்.

இந்த நிலையில் கதையியானது அதிக இன்சுலினைச் சுரக்க வேண்டிய நிலை உருவாகும். ஆனால் நீரிழிவு நோயாளிகளில் இந்த நிலையைச்சமாளிக்க முடியாமல் போய்விடும். இதனால் இவர்களுக்கு குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரித்த நிலை ஏற்படும்.

நீரிழிவுடன் மன அழுத்தம் உள்ளவர்கள் அல்லது மன அழுத்தம் உள்ளவர்கள். தேக அப்பியாசம், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பவர்கள் அதிக உணவை அடிக்கடி உட் கொள்பவர்கள். இதனால் ஒருவருக்குக் குருதியில் குளுக் கோசின் அளவு அதிகரிக்க வாய்ப்புண்டு.

இவர்கள் இதற்கு ஏற்ப பயிற்றப்பட்ட மனோதத்துவ நிபுணர்களை அணுகிச் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறுதல் நல்லது.

இதன் மூலம் நீரிழிவு உள்ளவர்களாயின் அவர்கள் உள்ளெடுக்கும் மருந்துகள் இன்சுலின் போன்றவற்றின் அளவுகளை அதிகப்படுத்த வேண்டிய நிலை ஏற்படாது. இன்னொரு வகையினரும் எமது சமூகத்தில் காணப்படு கின்றனர்.

அவர்கள் மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்கு அல்லது மறப்பதற்கு உணவை மறந்து தொடர்ச்சியாக ஏதாவது வேலைகளைச் செய்துகொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு குருதியில் குளுக்கோசின் அளவு குறை வதற்குவாய்ப்புண்டு.

எனவே சரியான அளவுஉணவுடன் மருந்துகளையும் சீரான முறையில் எடுத்தல் நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காய்ச்சல், தலையிடி, மாதவிடாய், சளி, அஸ்மா போன்ற மாறக்கூடிய நோய் நிலைகள் ஏற்படும் போதும் உடலில் உருவாகும் மன அழுத்த ஓமோன்களின் அதிகரிப்பால் குருதியில் இருக்கும் இன்சுலின் செயற்பாடு குறைக்கப்பட்டு குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரிக்கலாம்.

சில நோய்நிலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளாலும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களாலும் உதாரணமாக நோய் எதிர்ப்பு மருந்துகளாலும் Antibiotic புற்று நோய்க்கான மருந்துகளாலும் சிலருக்கு அமைதியின்மை உடல் மாற்றம் மனஅழுத்தம் போன்றவையால் உடலில் உருவாகும் மன அழுத்த ஓமோன்களால் இன் சுலின் எதிர்ப்புநிலை உருவாகி குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பு ஏற்படலாம்.

அதே வேளை சிலருக்கு குமட்டல், வாந்தி, உணவு உட்கொள்வதில் விருப்ப மின்மை போன்றவற்றால் குருதியில் குளுக்கோசின் அளவு குறைவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே அவர்களின் நோய் நிலைகள் சிகிச்சை முறைகளுக்கு ஏற்ப வைத்திய ஆலோசனை பெறுதல் அவசியம்.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒரு சில ஆலோசனைகள்

01.தியானம் போன்ற பயிற்சிமுறைகள் எமது மூளையில் உணர்ச்சிமயமான மூளைப் பகுதியின்தூண்டலைக் குறைக்கிறது. இதனால் எமது மூளையில் அதிரினலின் மற்றும் கோட்டிசோல்போன்ற ஹோர்மோன்
களின் சுரப்பு குறைக்கப்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைய குருதியில் குளுக்கோசின் அளவும் கட்டுப்பாட்டுக்கு வருகிறது.

02.நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு என்பது பல கோணங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டமாகும். உதாரணமாக தேகப்பயிற்சி ஆலோசகர் மூலம்எடைக் குறைப்பு, தசைகளுக்கு வலிமை தசைகள்
வளைந்து கொடுக்கும் தன்மை போன்றவற்றை ஏற்படுத்துவதன் மூலம் பூர்வமானமன ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுவார். இதேபோல் அத்துறைசார் ஆலோசகர் சமூகசேவகர், கண்வைத்தியர் மனநிலை வல்லுநர், நீரிழிவு
கல்வி புகட்டுபவர், பாத வல்லுநர்,Podi atrist துறைசார் வைத்திய நிபுணர்களை அணுகுவதன் மூலம் உங்கள்
நோய் நிலைக் கட்டுப் பாடு ஏற்படுவதுடன் சிறந்த மன ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.

03. உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதன் மூலமும் மகிழ்ச்சியான வீட்டுச் சூழலை ஏற்படுத்துவதன் மூலமும் உடற்பயிற்சி, யோகாசனம், விருப்பமான இசையைக் கேட்டல், பொழுதுபோக்குக்காக ஏதாவது ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து இதற்கான ஒரு சிறுகூட்டத்தை உருவாக்கி இதனைநடைமுறைப்படுத் துவதால் மனஅழுத்தங்கள் குறையவாய்ப்பு உண்டு.

O4 உங்கள் உணர்வுகளை முழுவதுமாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உடலையும் மனதையும் தளர்த்துங்கள். மனம் தளர்ந்து இருந்தால்தான் அர்த்தமுள்ள வழிகளில் யோசிக்க முடியும் அலை பாயும் மனதுக்கு ஒருமுகமான சிந்தனை வராது.

05. ஏதாவது ஒரு பிரச்சினை உங்கள் மனதை வாட்டிக்கொண்டே இருந்தால் உங்கள் ஆத்ம நண்பரைத் தேடி அவரிடம் அதைச் சொல்லி ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

06.பிறருக்கு உதவுவதற்கு என அமைப்புகள் நண்பர்கள் கூட்டம் இருக்குமாயின் அவர்களிடம் அணுகி உங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா எனப் பாருங்கள்.

07.ஒருவரோடு ஒருவர் நெருங்கி ஒரு சிறு கூட்டமாக மனம் விட்டு உரையாடிப் பிரச்சினையை அலசி ஆராயும் கூட்டத்தைக்கொண்ட நண்பர்களை உருவாக்குங்கள்.

08. மன அழுத்தத்துக்கு வைத்திய நிபுணர்களால் வழங்கப்படும் மருந்துகளை ஒழுங்காக எடுங்கள் கிளினிக்குகளுக்கும் ஒழுங்காக வந்து ஆலோசனை பெறுங்கள்.

09.கோபப்படுவது கெடுதல் அல்ல. இது சாதாரண அனு பவம்தான் என்பதைசீக்கிரம் உணர்ந்து யதார்த்தநிலை யோடு ஒத்துப் போவது உங்கள் கோபத்தின் ஊற்று எங்கிருக்கிறது என்பதைக் காணுங்கள் கண்டு மன நிலையில் நிவாரணம் பெற முயற்சி செய்யுங்கள். அனுபவசாலியின் ஆலோசனையைப் பெறுங்கள்.

10. நாளாந்தம் நடத்தலும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவும்.

உங்கள் குருதியில் குளுக்கோசின் அளவை மாத்திரம் எப்பொழுதும் கட்டுப்பாடான நிலையில் வைத்து விட்டால்நீரிழிவுஉங்களை மேலாண்மை செய்துவிட முடியாது. இந்தக் கட்டுப்பாடானது உங்களைப் பத்திரமான நிலைக்குக் கொண்டு சென்று விடும்.

ச.சுதாகரன்
பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ்.போதனா வைத்தியசாலை.

Posted in கட்டுரைகள்
« நீர்வெறுப்பு நோயிலிருந்து எம்மைப் பாதுகாப்போம்!
என்று தணியும் இந்த சீனி மேல் மோகம்? »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com