சோயாமீற் – 100 கிராம்
கோவா – 100 கிராம்
கரட் – 100 கிராம்
போஞ்சி – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
முருங்கைக்கீரை – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
தேசிப்புளி – 4.மே கரண்டி
மிளகு – 1மே. கரண்டி
நற்சீரகம் – 1மே. கரண்டி
உள்ளி – 1மே. கரண்டி
தண்ணீர் – 4 கப்
செய்முறை
கோவா, கரட், போஞ்சி, உருளைக்கிழங்கு, தக்காளி என்பவற்றை சிறிதாக வெட்டவும், முருங்கைக் கீரையை துப்பரவு செய்யவும். மிளகு, நற்சீரகம், உள்ளி என்பவற்றை இடித்து பொட்டலமாக கட்டவும். ஒரு பானையில் மரக்கறி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும், மரக்கறி அரைப்பதமாக வெந்ததும் சோயாமீற் சேர்க்கவும், பின் கட்டிய பொட்டலத்தை இதனுள் சேர்க்கவும் அனைத்தும் நன்றாக வெந்ததும் முருங்கைக் கீரையை சேர்த்து சிறிது சேரம் கொதித்ததும் உப்புச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். அரைத்த உள்ளி, சீரகம், மிளகு சேர்த்து வாசனை வந்ததுத் இறக்கி தேசிப்புளி கலந்து பரிமாறவும்.
திருமதி ஆனந்தறூபி பெனற்விமலதாஸ்