யாழ் குடாநாட்டில் முதுமை மூளை நோய் வேகமாக அதிகரித்துவருகின்றது. அண்மைக்காலமாக யாழ் நகரில் “டிமென்சியா” (முதுமையில் ஏற்படும் ஒரு வகை மறதியுடன் கூடிய மூளை அழற்சி) எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம். மற்றைய பகுதிகளை விட யாழ் நகரில் ஒப்பீட்டளவில் முதியவர்களின் விகிதாசாரம் அதிகமாகக் காணப்படுகிறது. அடுத்து வாழும் வயதெல்லை அதிகரித்து வருவது இதற்கு ஒரு காரணம் ஆகும். உறவினர்கள், குடும்பங்கள் பிற நாட்டில் வாழ்வதாலும், ஆளுதவி இல்லாமையாலும் முதியவர்கள் பல்வேறு கஸ்ரங்களுக்கும் சிரமங்கங்களுக்கும் ஆளாகி வருகின்றனர். அதிகரித்து வரும் இந் நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு உலகளாவிய பிரச்சினையாக இருந்தபோதும் யாழிலும் இந்நிலமை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2050 ஆண்டு தற்போது உலகில் டிமென்சியாவுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை மும்மடங்கால் அதிகரிக்கும் என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். டிமென்சியா நோயாளிகளின் எண்ணிக்கை 130 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று Alzhemers disease Interanational என்ற சர்வதேச அறக்கட்டளையின் ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.
இதன் போது ஏற்படும் ஞாபக மறதியை நிவர்த்தி செய்ய மருந்துகள் கண்டறியப்படவில்லை எனினும் மருந்தைக் கண்டறியவதற்கான ஆய்வுகள் உலகலாவிய ரீதியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய தேவைகளின் முக்கிய கவனிப்பு அன்றாட பராமரிப்பு மற்றைய மருத்துவப் பிரச்சிகைகளின் பொருத்தமான கவனிப்பு போன்ற உதவிகளே தேவையாகக் காணப்படுகின்றது. இந் நோயினால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் கவனிப்பை மேம்படுத்துவதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது.