Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    May 2025
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



உயர் குருதியமுக்கமும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளும்!

உயர்குருதியமுக்கம் என்றால் என்ன?

  • சாதாரணமாக எம்மில் இரத்தக்குழாய்களினூடாகக் குருதி பாய்கையில் நாடிகளின் சுவர்களில் அமுக்கமொன்று ஏற்படுத்தப்படுகின்றது.
  • • இது இதயம் சுருங்கும் போது 120mmHg இலும் குறைவாகவும், இதயம் தளரும் போது 80mmHg இலும் குறைவாகவும் சாதாரணமானவர்களில் இருக்கும்.
  • இதனையே வைத்தியத்தில் 120/80mmHg எனக் குறிப்பர்.
  • சில சந்தர்ப்பங்களில் இந்த அமுக்கமானது 140/90mmHg இனைவிட அதிகரிக்கும் போது அதனையே உயர் குருதியமுக்கம் என்கிறோம்.

உயர் குருதியமுக்கம் ஏற்படும் போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்?

ஆரம்பத்தில் அறிகுறி எதுவும் தென்படாது. ஆனால் நீண்ட காலமாகக் கவனிக்கப்படாவிடின் பின்வரும் அறிகுறிகள் ஏற்படும்,

  • அதிகரித்த வியர்வை வெளியேற்றம்
  • தலையிடி
  • தலைச்சுற்று
  • நெஞ்சுப்படபடப்பு
  • மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்
  • களைப்பு
  • மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்
  • வாந்தி,குமட்டல்

உயர் குருதியமுக்கமானது ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள்

  • உயர் குருதியமுக்கமானது பெரும்பாலும் 55 வயதிலும் கூடிய ஆண்களிலும், 65 வயதிலும் கூடிய பெண்களிலும் ஏற்படுகின்றது.
  • கூடிய உடற்பருமன் (உடற்திணிவுச் சுட்டி 30 இலும் கூடியோர்)
  • புகைப்பழக்கம்
  • குறைவான உடற்பயிற்சி
  • ஏற்கனவே நீரிழிவு நோயைக் கொண்டிருப்பவர்கள்
  • குருதியில் அளவுக்கு மீறிய கொலஸ்ரோலின் அளவு
  • குடிப்பழக்கம்
  • அதிகளவு உணர்ச்சிவசப்படுதல்
  • கர்ப்பகாலம்
  • உயர் குருதியமுக்கமானது இரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளிடையே காணப்படுதல்.
  • சில மருந்துகளின் பாவனை (உ+ ம்: கருத்தடை மாத்திரைகள், மூக்கினுள்ளே வடப்படும் சில துளி மருந்துகள், சல்பியூட்டமோல், தியோபைலீன், பிறிட்னிசலோன், ஏர்கோரமைன், பிறிட்டோன்) மருந்துப் பாவனைக்குப் பிறகு குருதியமுக்கம் சாதாரண நிலையை அடையும்.
  • சில நோய்களின் தாக்கம் (அதரீனற் சுரப்பிகளில் ஏற்படும் கட்டி, சிறுநீரகங்களில் ஏற்படும் கட்டிகள்)

உயர் குருதியமுக்கத்தால் எப்படிப்பட்ட பாதகமான விளைவுகள் ஏற்படும்?

  • மாரடைப்பு
  • பாரிசவாதம்
  • கண்பார்வை அற்றுப்போதல்
  • சிறுநீரகம் பழுதடைதல்
  • பிரசவ காலங்களில் இது ஏற்பட்டால் தாய்க்கும் சேய்க்கும் பாதிப்பு ஏற்படலாம்.
  • இறப்பு

உயர் குருதியமுக்கத்தை எவ்வாறு தடுக்கலாம்?

  • மருத்துவ சிகிச்சை பெறல்.
  • குளோர்ரலிடோன், நிவிடிப்பின், லொசார்ரன், பைசோபிறோலோல், அஸ்பிறின் உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை நாளாந்தம் மேற்கொள்ளுதல்.
  • உதாரணமாக: 30 நிமிட நடைப்பயிற்சி, கை மற்றும் கால்களை உயர்த்தி மடித்தல், மூச்சை நன்றாக உள்ளெடுத்து வெளியே விடுதல்.
  • குடிப்பழக்கத்தைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல், அத்தோடு புகைப்பழக்கத்தையும் கைவிடுதல், உணவு முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருதல், உப்பைக் குறைத்தல் ((<6gNaCl/day)
  • கூடுதலாக மரக்கறிகளையும், பழங்களையும், நார்ச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்தல்.
  • சிறிய மீன் வகைகளை அதிகளவில் உண்ணுதல்.

‘இரத்த உறவுகளிடையே உயர் குருதியமுக்க நோய் உள்ளவர்கள் தமது குருதியமுக்கத்தை இரு வருடங்களுக்கு ஒரு முறை சோதித்துக் கொள்ளுதல் சிறந்தது’

இ.கோகுல்நாத்,
யாழ்.மருத்துவ பீட 30 ஆம் அணி மாணவன்.

Posted in கட்டுரைகள்
« மருத்துவத்துறையிலே நோயாளர் உரிமைகளும் கடமைகளும்
தாய்ப்பாலின் மகத்துவம் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com