சூரிய ஒளியின் நன்மைகளைச் சொல்லில் வடிக்க முடியாது. சூரிய ஒளி இன்றேல் மனித வாழ்வே இல்லை. பூமியின் அனைத்து சக்திகளும் இயங்குவதற்கு மூல காரணமே சூரிய ஒளிதான். இயற்கையான சூரிய ஒளி இலவசமாக எல்லா உயிரினத்துக்கும் கிடைக் கின்றது.
எனினும் தற்போதைய நகரமயமான வாழ்க்கைமுறைகள், காடுகள் மற்றும் மரங் கள் அழிப்பு, அடுக்குமாடிகள், நெருக்கமான வாழ்க்கைமுறைகள், சுற்றுசூழலின்வெப்ப அதிகரிப்பு, புவி வெப்பமயமாதல், சூரிய ஒளியின் நேரடித் தாக்கம் போன்ற பலவழிகளில் மனித குலம்வெப்பம் சம்பந்தமான நோய்களையும் பாதிப்புக்களையும் அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உதாரணமாக வெப்பமான சூழலில் வேலைசெய்யும் போது அல்லது தொடர்ச்சியாக ஓய்வின்றி அதிகவேலை செய்யும் போது உடலில் வெப்பம் அதிகமாகி வெப்பச் சோர்வு ஏற்படலாம். இதனால் பலவீனம், வாந்தி, தலையிடி, அதிக வியர்வை , தாகம் போன்ற குணங்குறிகள் காணப்படும். வேறு சிலருக்கு வேர்குரு, தோல் தடிப்புகள்,வியர்வை, கொப்பளங்கள் சிவந்ததோல் தடிப்புகள் காணப்படும்.
சூரிய ஒளி கூடுதலாக உடலில் படும்போது தோல் பகுதியில் மெலானின் அளவு அதிகரிப்பால் உடல் கறுத்து விடுகிறது. எனினும் எல்லோருக்கும் ஒரேமாதிரியான பாதிப்புகள் இருக்காது. சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் முகம் முதுகுப் பகுதியில் கருநிற திட்டுக்கள், அல்லது கருமை நிறம், தோல் வியாதிகள், வெயில் தோற்றுவிக்கும் வறட்சியம் அதனால் ஏற்படும் நீர்ப்பற் றாக்குறையும் சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கு ஒரு காரணமாகும்.
வெயிலால் ஏற்படும் நோய் அறிகுறிகள்
ஒருவருக்கு கடுமையான வெயில் பாதிப்பின் போது வியர்வை வராதிருத்தல் தோல் சிவந்து பளபள என இருத்தல். தலைவலி, மனக்குழப்பம் சுயநினைவின்றி இருத்தல், வாந்தி வரும் உணர்வு, காய்ச்சல், வேக மானநாடித்துடிப்புகள் போன்ற பல்வேறு குணங்குறிகள் காணப்படும்.
வெயில் காலத்தில் எமது உடலில் நீர்ச்சத்து வியர்வை இழக்கப்படும் போது நீருடன் உப்புக்கள், வெல்லம், அமினோ அசிட், சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும் வெளியேறுகின்றது. மேலும் நீரானது எமது உடலில் இருந்து சிறுநீர், மலம், வியர்வை , சுவாசித்தல் போன்ற வழிகளில் வெளியேறுகின்றது. நீரின் தேவையானது உடல் இயக்கம், வெப்பநிலை, ஈரப்பதன்போன்ற பல காரணிகளை பொறுத்து மாறுபடுகிறது.
பாதிப்புக்களைத் தவிர்க்க
கடுமையான வெயிலின் பாதிப்புகளைக் குறைப்பதற்கு சில ஆலோசனைகள் அவசியமானவையாகும். அவையாவன.
- கோடைகாலத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட இயற்கையான வழியே சிறந்தது. கடற்கரை, பூங்கா. நிழல் தரும் இடங்கள், மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லுதல், இயற்கையான குடிதண்ணீரை உள்ளெடுத்தல் என்பவற்றைக் கடைப்பிடிக்கலாம்.
- சூரிய ஒளியில் மனிதனின் கண்களுக்கு புலப்படாத “அலரா வயலட்” கதிர்கள் காணப்படுகின்றன. இவை எமது உடலின் விற்றமின் டி தொகுப்புக்கு தேவை எனினும் அதிகளவில் எமது தோலில் படும்போது எமது தோலில் சரும பாதிப்புக்கள் மற்றும் சாதாரண தோல் கலங்கள் அசாதாரண நிலையை அடைய வேண்டி நிலைக்கு தள்ளப்படுகிறது. இதனால் மெலானேமா போன்ற தோல் புற்றுநோய்களும் உருவாகிறது எனவே அதிக சூரியஒளி உடலில்படுவதை தவிருங்கள்.
- வெயில்காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் பொதுவாக வயிற்றுப்போக்கு, வியர்குரு போன்ற பல பாதிப்புகள் எற்படுகின்றன. எனவே குழந் தைகள் சிறுவர்களை வெளியே அழைத்துச் செல்லும் போது போதியளவு சுத்தமான தண்ணீர் எடுத்துச்செல்லுங்கள்.
- வயதானவர்கள் வெயில் காலத்தில் மிகவும்குளிர்ந்த நிலையில் உள்ள நீர்பானங்களை அருந்தும் போது தும்மல், சளி, இருமல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே பொதுவாக வயதானவர்கள் குளிர்மையான பானங்களை அருந்தும் போது ஒரே மடக்கில் தொண்டைக்குள் விழுங்காமல் சிறிதுநேரம் நாக்கில்வைத்திருந்து மிதமான குளிர்ச்சியில் அருந்துதல் சிறந்தது.
- நீர் மோர் தாகத்துக்குச் சிறந்தது. இதில் கூடுதல் சுவைக்கு கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, கறிமிளகாய் அரைத்து சேர்த்து குடிக்கலாம் அத்துடன் வெங்காயம், ஊறுகாய் போன்றனவும் சேர்த்துக் குடிக்கலாம்.
- எமது எலும்புக்கும் தசைகளுக்கும் புத்துணர்ச்சியையும் வலுவையும் கூட்டுவதுடன் பொட்டாசியம், மக்னீசி யம் போன்ற தாதுஉப்புகளுடன் வெல்லம் இதர போசனைபொருள்கள் அடங்கியது. இளநீர் மற்றும் விற்றமின் ஏ பொட்டாசியம் அதிகம் அடங்கிய வெள்ளரிப்பிஞ்சு இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் எமது தோல்பகுதியில் கருவளையம் கருமை நிறம் போக்குவதற்கு இதன் சாறு பயன்படுகிறது. மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு கனியுப்புக்கள், இரும்புச்சத்து கொண்டதர்ப்பூசணி, கொவ்வைக்காய் மிகவும் சிறந்ததும் மலிவானதும் ஆகும் சுரக்காய் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கு ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். மற்றும் தென்னைபனை மரங்களின் பதநீர், நுங்கு உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் விற்றமின் பி, சி சத்துக்களும் அடங்கியதாகும்.
- எமது உடலின் மிகப்பெரிய அவையமான தோல்பகுதியை சுத்தமாகவும் உலர்வு இன்றியும் பாதுகாத்தல் வேண்டும். வெய்யிலில் வெளியே செல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் தலைக்கும் உடலுக்கும் பாதுகாப்பு தரும்கின்ற ஆடைகளை அணிதல். பருத்தியிலான அதிக இறுக்கமில்லாத ஆடைகள் சிறந்தவை. கறுப்பு நிறத்திலான ஆடைகள்.குடைளைத் தவிர்க்கவும். ஏனெனில் கறுப்பு நிறம் வெய்யிலின் வெப்பத்தை இழுத்து உடம்பில் செலுத்தும் ஆற்றல் கொண்டது. வெண்மைக்கு வெப்பத்தைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. எனவே வெண்ணிற ஆடை அணிதல் வெப்பத்தின் பாதிப்பைக் குறைக்கும்.
- கோடைகாலத்தில் உடல் நீரின் அளவை சரியான அளவில் பேணுவதற்கு வெறும் தண்ணீரால் மட்டும் இந்தப் பணியை முழுமையாக செய்துவிடமுடியாது. நீருடன் காய்கறிகள், பழவகைகள், கீரை வகைகள் அதிகளவில் உணவில் சேர்த்தல்வேண்டும்.
- போத்தல் குளிர்பானங்களில் மது கலந்து அருந்து வதை தவிர்த்தல் வேண்டும். இதன் மூலம் உடலில் இருந்து அதிகளவு சிறுநீர் வெளியேறி உடலில் நீர்ச்சத்து குறைந்தவிடும்.
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்,
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
யாழ் போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்