யாழ் மருத்துவ பீட மாணவர்களும், யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையமும் இணைந்து சுகதேகியா வாழ்வதற்கு சிறுபராயத்திலிருந்து சுகாதார நேர்த்தியான உணவுவகைகளை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் பங்கு பற்றி சுவையாக பாதுகாப்பான உணவுவகைகளை யாழ்ப்பாண சிறார்களுக்கு அறிமுகப்படுத்த சமயற்கலை நிபுணர்களுக்கும், புதிய உணவுகளை சமைப்பதில் ஆர்வமுடையவர்களுக்கும் இதில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கண்டறியும் புதிய உணவு வகைகளை நடாத்தப்படவுள்ள மாபெரும் சமையல் போட்டியில் செய்து காண்பிக்க வேண்டும். எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் உணவானது ஆராய்ச்சி முறைகளுக்கு அமைவாகவும், சுவையானதாகவும் இருக்க வேண்டும் ஏற்பாட்டாளரின் தெரிவுக் குழுவானது வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கும் பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும். போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்படும். அத்துடன் முதல் இருபது இடங்களைப் பெறுவோரின் உணவு முறை புத்தகமாக அச்சிட்டு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான விதிமுறைகள்
சிறார்களுக்கு காண காலை உணவு அல்லது சிற்றுண்டிப் பதார்த்தங்கள் உங்களால் தயாரிக்கபட வேண்டும். சைவ, அசைவ உணவுகள் தயாரிக்கலாம்.
சேர்க்கப்படக் கூடிய உணவுப் பதார்த்தங்கள்
- பருப்பு வகை
- பயறு
- கௌபி
- கொண்டைக் கடலை
- உழுந்து வகை
- சோளம்
- மரக்கறி வகை – வெண்டிக்காய், கத்தரி, போஞ்சி, தக்காளி, வாழைக்காய், பயற்றங்காய், பூசனி, புடோல், கரட், பீற்றுட்.
- இலைவகை – வல்லாரை,பொன்னாங்காணி,அகத்தி,தவசிமுருங்கை,
- பழவகை – அப்பிள், கொய்யா, வாழைப்பழம், தோடம்பழம். விளாம்பழம்.ஜம்பு
- சோயா அவரை
- கோழியிறைச்சி
- நல்லெண்ணெய்
- மீன்,இறால்,சுறா,கருவாடு
- நிறமூட்டிகள்
- சுவையூட்டிகள்
- உள்ளி, வெங்காயம், மிளகாய்
- வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம்.
முற்றாக தவிர்க்கப்பட வேண்டியவை
- சீனி, சர்க்கரை,பழப்பாகு,ரின்பால்
- கிழங்கு வகைகள்
- எண்ணெய் வகை (நல்லெண்யெய் தவிர)
- இறைச்சி வகை (கோழியிறைச்சி தவிர)
- நண்டு, கணவாய்
- அரிசிமா, ஆட்டமா, கோதுமைமா
- பட்டர், மாஜரின், நெய்
- பாண்
- கச்சான்
- பாலப்பழம், மாம்பழம், திராட்சை
மேற்குறிப்பிட்ட சிறார்களுக்கான உணவு தயாரிக்கும் புதிய முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். விண்ணப்பத்திற்கான முடிவு திகதி 06-01-2014
கலந்து கொள்ள விரும்புவோர் தங்களின் பெயர், முகவரி, வயது, தொழில், தொலைபேசி எண் என்பவற்றுடன் தயாரிக்கவிருக்கும் உணவு வகை பற்றிய விபரங்களை
சமையல் போட்டி 2014
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனாவைத்தியசாலை
யாழ்ப்பாணம்.
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு 021-222-0179, 075-279-2272