Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவு நோயாளர்களில் ஏற்படும் வாய்க்குழி சம்பந்தமான நோய்கள்

நீரிழிவு எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு நீண்டகால நோயாகும்.அந்த வகையிலே இந்தக்கட்டுரையானது கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளர்களிடையே ஏற்படும் வாய்க்குழி சம்பந்தமான பிரச்சினைகள்(Complication) பற்றிபேசுகின்றது.

சாதாரணமானவர்களை விடவும் கட்டுப்பாடற்ற நிரிழிவு நோயாளர்களிடையே வாய்க்குழி சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன. பாதிக்கப்படும் வீதமும் அதிகரிக்கின்றது. பொதுவாக வாய்க்குழி மென்சவ்வே அதிகம் பாதிப்படைகிறது.

பற்களைத்தாங்கும் முரசு என்பு நாரிழையங்களில் ஏற்படும் அழற்சி (Periodontitis), உமிழ்நீர் சுரப்பு சுரத்தலின் பாதிப்பு (Gingivitis), உமிழ்நீர் சுரக்கும் அளவும் தன்மையும் மாறுதல்சுவையில் மாற்றம் ஏற்படுதல், பக்ரிறியா பங்கசுகளின் கிருமித் தாக்கம் என்பன பொதுவாக ஏற்படும் நோய்களாகும்.

மேலும் வாய்க்குழி மென்சவ்வில் காயங்கள் (Oralmucosall Lessions),வாய்க்குழியில் கிருமித்தொற்று (Stomatis),நாக்கின் மேற்பகுதியில் சில மாறுதல்கள் (Geogrophic tongue/Benign Migratory Glossries). நாக்கின் வெடிப்புக்கள் (Fissured tongue) வாய்க்குழி மென்சவ்வில் வெண்மையான பகுதிகள் தோன்றுதல் (Lichenplanus, lichenoid reactions),கடவாய்ப்பகுதியில் கிருமித்தாக்கம், காயங்கள் குணமடைவதில்தாமதம், மென்சவ்வின் நரம்பு உணர்ச்சிகளில் பாதிப்பு ஏற்படுத்தல் பற்சொத்தை பற்கள் இழந்து போவதற்கான வாய்ப்புக்கள் என்பனவும் நீரிழிவுநோயாளர்களில் ஏற்படுகின்றன.

பற்களை தாங்கும் இழையத்தில் ஏற்படும் கிருமித்தொற்றுக்கு பக்ரீறியாவே பிரதானமான காரணமாக விளங்குகிறது. இவை முரசு நார் இழையம், பல் என்பு என்பவற்றைப் பாதிக்கும் ஒரு நீண்டகால நோய்க் காரணிகளாக காணப்படுகின்றன. மைக்றோ பளோறா (Micro Fiore) எனப்படும் நுண் அங்கிகளால் உருவாகும் நச்சுப் பதார்த்தமானது முரசுப்பகுதியில் தாபிதம் (inflammation) ஏற்ப்படக்காரணமாக அமைந்துவிடுகின்றது.

ஆகவே நாளாந்தம் பற்களில் ஏற்படும் படிவுகளை தூரிகைகள் கொண்டு அகற்ற வேண்டும். இவை அகற்றப்படாவிடின் முரசு அழற்சி ஏற்பட்டு பற்களை தாங்கும் இழையத்துக்கும் பற்களுக்கும் இடையே இடைவெளிகள்(Pockets) ஏற்பட்டுபற்களில் இருந்து பற்தாங்கிழையம் விடுபட்டுவிலகிடவாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இந்த இடைவெளிகளுள் பக்ரீறிரியாக்களும்,வெளிவரும் நச்சுப் பதார்த்தங்களும் (oxin) தேங்கிக் காணப்படுகின்றன. இதனால் அதிகளவான கிருமித் தொற்றுகள் பற்றாங்கிழையத்தில் ஏற்படுகின்றன.

இந்த செயல்நிலைகள் நாரிழையம், பல் எலும்பு என்பனவற்றை அழித்து பற்களை இழக்க வேண்டிய நிலமைகளை ஏற்படுத்துகின்றன. நீரிழிவு நோயாளர்களில் எதிர்ப்புச் சக்தி குறைவடைவதால் நுண்ணங்கிகளின் தாக்கம் அதிகரிக்கின்றது. இதனால் புண்கள் குணமடைவதில் தாமதம் ஏற்படுவதுடன் பல்தாங்கும் இழையங்கள் கூடுதலாக அழிவடைகின்றன. நீரிழிவு நோயாளிகள் ஏனையவர்களைவிடவும் மூன்று மடங்கு முரசு நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

உமிழ்நீர்ச்சுரப்பியில் ஏற்படும் பாதிப்பு

சுகாதாரமான வாய்க்குழியைபேணுவதில் உமிழ்நீர்ச்சுரப்பி பெரும்பங்கினை வகிக்கின்றது. பிரதானமான உமிழ்நீர் சுரப்பிகளாக கன்ன உமிழ்நீர்ச்சுரப்பி, கீழ்த் தாடை உமிழ்நீர்ச்சுரப்பி, நாக்கீழ் உமிழ் நீர்ச்சுரப்பி என்பனவும், இதனை விட “மைனர் சல்வரி கிளண்டஸ்“ (Minor Solivary Glands) என்று சொல்லப்படுகின்ற சிறிய உமிழ்நீர்ச்சுரப்பிகளும் வாய்க்குழி யில் காணப்படுகின்றன.

நீரிழிவு நோயாளர்களில் குறிப்பாக வகை 2 இனை சார்ந்தவர்களில் கன்ன உமிழ்நீர்ச்சுரப்பியின் பாதிப்பால் உமிழ்நீர்ச்சுரப்புவீதம் குறைவடைந்து வாய் உலர்தல் ஏற்படுகிறது. இது அதிகமாக டயபிற்றீஸ் நியூறோபதி (Diabetes Neuropathy) உள்ள நோயாளர்களிடையே காணப்படுகிறது. வாய் உலர்தல் காரணமாக அடிக்கடி அதிக தண்ணிர் அருந்துவதனால் சிறுநீர் போக்கு என்பது அதிகமாகக் காணப்படும். தொடர்ச்சியான வாய் உலர்தலினால் வாய்க்குழி மென்சவ்வில் உராய்வுகள் ஏற்பட்டு கிருமித் தொற்றும், வலியும் ஏற்படுகிறது. வாய்குழியின் நடுநிலைத்தன்மையை இந்த செயல்நிலைகள் பாதிப்பதுடன் பற்சொத்தையை ஏற்படுத்திவிடுகின்றன. மேலும் இருபக்க கன்ன உமிழ்நீர்ச் சுரப்பி பின் விக்கம் (Sialosis) நீரிழிவுநோயாளர்களிடையே அதிகம் காணப்படுகின்றது.

சுவை மாற்றம்

அநுசேபத்திலும், அகச்சுரப்பிகளிலும், உமிழ்நீர்சுரப்பிகளிலும் ஏற்படும் மாறுதலானது சுவை உணர்ச்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. நீரிழிவு நோயாளர்க ளிடையே ரேஸ்ற் திறஸ்கோல்ட் (Taste Threshold) அதிகமாகக் காணப்படுவதால் சுவை உணர்வில் மாற்றம் ஏற்படுகின்றது. இவை உணவுக் கட்டுப்பாட்டினை சரியான முறையிலே கடைப்பிடிக்காத சந்தர்ப்பங்களிலும் ஏற்படுகின்றது.

கிருமித் தொற்று

“கன்டிடா அல்பிகன்ஸ்“ (Candida albicans) எனப்படும் பங்கசுத் தொற்று கன்னங்கள், நாக்கு முரசு, அண்ணம் என்பவற்றில் அடிக்கடி ஏற்படுகின்றது. பக்ரீறிரியாக்களின் தொற்றானது எதிர்ப்புச் சக்தி குறைவானவர்களிலேயே அதிகம் ஏற்படுகிறது. டீப்நெக்இன்பெக்சன் (Deep Neck infection), முகத்தாடை இடைவெளிகளில் கிருமித்தொற்று (Maxillo Fecial space infection of odoodntogenic origin) என்பன நீண்ட காலம் நோய் தொற்றுகளாகும். வைத்தியசாலையில் இருக்க வேண்டியநிலை ஏற்படுகின்றது.

பங்கசுத்தொற்று அல்லாத வாய்க்குழி நோய்

நீரிழிவுநோயாளர்களின்நாக்கில் ஏற்படும் வெடிப்புகள் என்பன பங்கசு தொற்றல்லாத நோய்களாகும்.

வாய்பபுண் குணமடைவதில் தாமதம்

நீரிழிவு நோயாளிகளில் புதிய குருதிக் குழாய்கள் உருவாவதில் தாமதமும், குருதி வழங்கல் செயன்முறையில் பாதிப்பும் ஏற்படுவதுடன், எதிர்ப்புச் சக்தியின் வளர்ச்சிக் காரணிகளும் அவர்களிடத்தில் குறைவடைகின்றன. இதனால் வாய்க்குழியில் ஏற்படும் புண்கள், சத்திரசிகிச்சையின் பின்காயங்கள் குணமடைதல் என்பன தாமதமடைகின்றன.

வாய்க்குழி மென்சவ்வில் ஏற்படும் நோய்கள் (Orol MUCOsol Diseases)

அடிக்கடி வாயில் புண்கள் (Recrent aphthoUS Stomatis) Lichen Plans, ‘லிச்சன் பிளன்ஸ்” (Licham Planus) என்பன பொதுவாக நீரிழிவு நோயாளர்களில் ஏற்படுகின்றன. வாய்க்குழி மென்சவ்வில் ஏற்படும் “லீச்சம் பிளபனஸ்” (Licham Planus) ஆனது தோல் சம்பந்தமான ஒரு நோயாகும். இது கூடுதலாக வகை ஒன்றிற்குரிய நீரிழிவு நோயாளர்களிடையே காணப்படுகின்றது.

வாயில் ஏற்படும்நரம்பு உணர்ச்சிபாதிப்புக்கள் (Neuro Senory oral Disorders)

பேர்னிங் மவுத் சின்றம் (Burning mouth Syndrome) எனப்படுகின்ற வாய் எரிவு நோயானது வலிமிகுந்த நோயாகும். அண்ணம், நாக்கு தொண்டை முரசு எல்லாவற்றையும் இந்த நோயானது பாதிக்கின்றது. இனோடு இணைந்து வித்தியாசமான உணர்வுகளான கூச்சம் விறைப்புத்தன்மை, வாய் உலர்தல் (Soremouth) என்பனவும் ஏற்படுகின்றன.இந்த உணர்வுகள் டயபிற்றீஸ் நியூறோபதி (Diabetes Neuropathy) உள்ள நோயாளர்களிடையே அதிகம் காணப்படுகிறது.

வாய்க்குழி சம்பந்தமான பிரச்சினைகள் கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளர்களிலேயே அதிகம் ஏற்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்யக் கீழ்வரும் நற்சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிடித்தல் சாலச்சிறந்தது.

  1. பற்சுகாதாரத்தை பேணுதல்.
  2. ஒழுங்கான வைத்திய ஆலோசனைகளையுமம், சிகிச்சை முறைகளையும் பெறல்.
  3. கட்டுப்பாடான உணவுப் பழக்க வழக்கங்களை பேணுதல்.
  4. உடற்பயிற்சி செய்தல்.
  5. மன அழுத்தமுள்ளவர்கள் உளவளத் துணை அல்லது அது சார்ந்த சிகிச்சை முறைகளைப் பெற்றுக் கொள்ளுதல்.
  6. ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத் தும் யோகாசனம், தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

மருத்துவர். குமார்லோஜினி கணேசன்
பற்சத்திரசிகிச்சைநிபுணர்
யாழ் போதனாவைத்தியசாலை

Posted in கட்டுரைகள்
« நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஒன்றிணைவோம்
உயிர் காக்கும் குருதிக் கொடை »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com