நாம் உண்ணும் உணவானது சுத்தமாகவும் பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும். நுண்ணங்கிகளின் தாக்
கத்தால் அவற்றின் தரம் பாதிப்புறும். உணவு நஞ்சாவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். பழுதடைந்த உணவின்நிறம், சுவை, உள்ளடக்கம் என்பனவும் மாற்றத்துக்குள்ளாகும். ஆனால் இவை பழுதுற்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நிகழும் எனக் கூறமுடியாது. பழுதடைந்தஉணவானது பலஅசெளகரியங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தலாம். எனவே இவற்றை இனங்காணும் ஆற்றலை வளர்த்துக்கொள்வோம்.
ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்யும்போது எப்பொழுதும் சுத்தமானதும் புதியனவானதுமான உணவு வகைகளையே தேர்வுசெய்வோம்.
பழங்கள்
வெடித்த சேதமுற்ற நிறம் மாறிய, பூஞ்சணம் பீடித்த பழு தடைந்த, மணமுடைய பழங்களைத் தவிர்ப்போம். சந்தைகளில் வெட்டி விற்கப்படும் பழங்களை வாங்கும் போது மிகமிக அவதானத்துடன் இருப்போம். பழங்கள், காய்கறி வகைகளைச் சமைப்பதற்கு முன்பாக நன்கு கழுவுவதன் மூலமோ அவற்றின் மேற்றோலை அகற்றுவதன் மூலமோ அவற்றில் படிந்துள்ள இரசாயன மருந்துச் சேர்க்கைகளை அகற்றிவிட முடியும்.
முட்டை
உடைந்த அல்லது வெடித்த முட்டைகளைப் பாவிப்பதைத் தவிர்த்தல் நன்று துர்நாற்றம் வீசும் முட்டைகளையும் அவ்வாறேதவிர்த்தல் வேண்டும். புதிய முட்டைகளை நீரில் அமிழ்த்தும் போது கூர்முனை மேல் நோக்கிய நிலையில் அமிழ்ந்திருக்கும். பழுதற்ற முட்டைகள் நீரில் மிதக்கும். உணவுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் முன்பாக அவற்றை நன்கு கழுவுதல் வேண்டும் சல்மோனல்லா (Salmonella) நோய்க்கிருமிகள் இவற்றிலிருப்பதனால் இவற்றைச்சமைக்காது பச்சையாக உண்பது உகந்ததல்ல.
இறைச்சி
புதிய இறைச்சி வகைகள் எப்போதும் பிரகாசமான சிவப்பு நிறமாக இருக்கும். கொழுப்புக் குறைவாக உள்ள இறைச் சியே உடலுக்கு நன்மையளிக்கும்.
பால் மற்றும் பால் பொருள்கள்
பைக்கற்றுக்களில் அடைக்கப்பட்டிருப்பின் வாங்க முன்பாக உற்பத்தித் திகதி காலாவதியாகும் திகதிகளைப் பார்த்து வாங்குதல் வேண்டும் பாஸ்ரறை பால் (Pasterized Milk) கிருமிநீக்கம் செய்யப்பட்ட பாலாகும். இவை குளிர் சாதனப்பெட்டிகளிலேயே வைத்திருக்கப்படல் வேண்டும். சூரிய வெளிச்சம் படும் வகையில் காட்சிப்படுத்தப்படும் பாலைவாங்குவதைதவிர்க்கவும் பைக்கற்றுக்கள் வீங்கிப் பருத்திருப்பின் அவற்றில் கிருமித்தொற்று ஏற்பட்டுவிட்டது என்பதே அர்த்தமாகும் அவற்றை வாங்கிப் பாவிக்கவேண்டாம்.
மீன்
இவற்றைத் தெரிவு செய்யும்போது அவற்றின் பூக்கள் பிரகாசமான சிவப்பு நிறமாகவும் சேதப்படாத பிரகாசமான கண்களை உடையனவான முழுமையான மீன்களைப் பார்த்து வாங்கவும் பழுதடையாத மீன்களின் தோலானது பளபளப்பானதாகவும் ஈரலிப்பானதாகவும் உறுதியான தோற்றமானதாகவும் இருக்கும். மீனின் தசையைத் தொடும்போதுமென்மை அல்லது கூழ்த்தன்மையற்றதாக இருத்தல் வேண்டும்.உறுதியானதசையை உணரமுடியும். மீனைவெட்டும்போதுமண்ணிறப்புள்ளிகள்அற்றவையாக சிவப்பு நிறத்தைக் கொண்டவையாக இருத்தல் வேண்டும். மண்ணிறப்புள்ளிகள் இருப்பின் அவை பழுதுறத்தொடங்கி விட்டன எனக் கொள்ளவும்.
குளிரூட்டப்பட்ட கடலுணவுகள் திண்மமாகவே இருத்தல் வேண்டும். அவை பகுதியாக உருகிய நிலையில் இருத்தல் கூடாது. பொதிகள் எப்போதுமே சேதப்படாதவையாக இருக்கின்றனவா? என்பதை பார்த்து வாங்கவும்.
தானியங்கள் கிழங்குகள் மற்றும் விதைகள்
கஜீ, நிலக்கடலை, சோளம், புழுக்கொடியல், ஒடியல் மற்றும்பயிர்விதைகளை அதிக ஈரலிப்பான இடங்களில் சேமிக்கும் போது அவற்றில் ஒருவித பங்கஸ் வளரும் அவை அவ்லரொக்சின் (Atlatoxin) எனும் நச்சு இரசாயனப்
பொருள்களை உருவாக்குகின்றன. இந்த அவ்லரொக்சின் உள்ள உணவுகளை உண்ணுவதால் ஈரல் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். எனவே நிறம் மாறிய விதைகளை உள்ளெடுப்பதைத் தவிர்த்தல் நன்று.
முளைத்தமற்றும் பச்சைநிறமான உருளைக்கிழங்குகளையும் தவிர்த்தல் வேண்டும். இந்தப் பச்சை நிறம் அல்க் காலொயிட்ஸ் (Alkaloids) எனும் நஞ்சு இருப்பதன் அறிகுறியாகும்.
பொதி செய்யப்பட்ட உணவுகள்
எப்பொழுதுமே காலாவதியாகும் திகதியைப் பார்த்துவாங்கவும் உடைந்த கொள்கலன்கள், வீங்கிய பைக்கற்றுக்கள் கசிவுறும் கொள்கலன்கள், உடைக்கப்பட்ட பொதிகள், சரியாக முத்திரையிடப்படாத பொதிகள் புரியாத பாசையிலுள்ள சுட்டுத் துண்டுடனான பைக்கற்றுக்கள் போன்ற வற்றிலுள்ள உணவுகளை வாங்க வேண்டாம். காலாவதியான உணவு நல்ல மணமும் சுவையும் கொண்டிருப்பினும் அவற்றைப் பயன்படுத்திடவேண்டாம். அவை நுண்ணங்கி நோய்க்கிருமித் தொற்றுதலுக்கு உள்ளாகியிருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
குளிரில் அல்லது அதீத குளிரில் வைத்திருக்க வேண்டிய உணவு வகைகள் அவ்வாறான நிலையில் பேணப்படாவிடின் அவற்றை வாங்க வேண்டாம். அஜினமோட்டோ அதிகம் சேர்க்கப்பட்ட
உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும். அஜினமோட்டோ அதிகம் சேர்க்கப்பட்ட உலர்ந்த உணவுகளை உள்ளங்கையில் கொட்டிப் பின்பு மீளவும் பைக்கற்றினுள் கொட்டிய பின் உள்ளங்கையைப் பார்போமானால் உள்ளங்கையில் பல வர்ண சிறு சிறு கண்ணாடித் துண்டுகள் மாதிரித் தென்பட்டால் அந்த உணவில் அஜினமோட்டோ அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
அஜினமோட்டோ சேர்க்கைகள் புற்றுநோயைத் தூண்டும் காரணிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பானங்கள், பழரசங்கள் வாங்கும் போது நியம நிறக் குறியீட்டையும் பார்த்துவங்கிட மறக்க வேண்டாம் பச்சை நிறக் குறியீடு உள்ளவையே ஆரோக்கியமானவை. அவற்றில் நூறு மில்லி லீற்றரில் (100 மில்லி லீற்றர்) 2கிராமுக்குக் குறைவான சீனியே சேர்க்கப்பட்டுள்ளது மஞ்சள் சிவப்பு நிறக்குறியீடுகள் பொறித்த பானங்களைத் தவிர்த்தல் நன்று.
செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள்
செயற்கையாக மருந்து விசிறிப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை இனங்காண்பது இலகு. பழக்காம்பானது முதிர்ச்சியடையாது இளமையாகக் காணப்படும் தோல் திட்டுத் திட்டாகப்பழுத்துக்காணப்படும் அவை சுவையற்றவையாக இருக்கும். ஈ எறும்பு தேனீபோன்றவை இந்தப்பழங்களை நோக்கி கவரப்படா நீண்ட காலம் அழுகலடையாது காணப்படும்.
பழங்களை வெட்டும் போது அவற்றின் விதைகளும் இலகுவில் வெட்டப்படக்கூடியதாக இருக்கும். இயற்கையாகப்பழுக்கும் செயன்முறையானது அடிப்பகுதியிலிருந்து நுனியை நோக்கியதாகவும் விதைப் பகுதியிலிருந்து தோலைநோக்கியதாகவும் இருக்கும். ஆனால் செயற்கையாகப்பழுக்கவைக்கப்பட்டவற்றில் தோலிருந்து விதை நோக்கியதாக இந்தச் செயன்முறை காணப்படும். பழங்களை வெட்டிப் பார்ப்பதன் மூலமே இதனை அறிந்து கொள்ள முடியும்.
நாங்கள் பழங்கள் வாங்கும் வியாபாரி செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டடு மருந்து விசிறி பழங்களை விற்பதனை உணர்ந்து கொண்டால் அதனை அவருக்குத் தெரியப் படுத்துங்கள். நான் இனிமேல் உங்களிடம் பழங்கள் வாங்கப்போவதில்லை. ஏனெனில் நீங்கள் என்னை ஏமாற்றுகின்றீர்கள் என்று நாம் ஒவ்வொருவரும் கூறுவோமெனில் வியாபாரி தன்செயன்முறையை கொள்வனவு முறையை மாற்றமுயல்வார்.
எங்கள்விடுகளுக்கு அண்மையாகவுள்ள நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து மட்டுமே பழங்களை வாங்கி வருவோமானாலும் இயற்கையாகப் பழுத்த பழங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எமது ஆரோக்கிய நிலையை மேம்படுத்த பழுதடைந்த உணவுகளை இனங்காணும் எம் ஆற்றலை வளர்த்துக் கொள்வோம்.
மருத்துவர்.பொ.ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி,
மாநகரசபை,
யாழ்ப்பாணம்.