சுறுசுறுப்பாகவும் நோயற்றும் இருப்பதற்கு சமபல போசணையான உணவும் உடற்பயிற்சியும் தகுந்த ஓய்வும்
போதியளவு தூக்கமும் அவசியமாகும். திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தீர்வு கண்டு முன்னேறுதல் நல்ல மன ரீதியான சந்தோசத்தை வழங்கும். மன நிலை நல்ல நிலையில் இருப்பின் எங்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கிட முடியும். சமுதாயத்துடனான நல்ல தொடர்புகள் எம்மை களைப்பின்றி உற்சாகமாக கடமைகளை ஆற்றிட உதவும்.
உடலிலுள்ள அனைத்துதசைகளுக்கும் சீரான செயற்பாட்டை வழங்கும் படியாக எமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டால் முதுமையை பிற்போட்டுக் கொள்ளலாம். நம்முடைய வேலைகளை உபகரணங்களின் உதவியின்றி செய்து வருவோமானால், தசைகள் வலு வடைந்து மூச்சு சீராகி சுவாசப்பைகளின் அனைத்து சிற்றறைகளுக்கும் நல்ல காற்று கிடைத்து சுறுசுறுப்புத்தன்மை ஏற்பட்டு ஆயுள் கூடும்.
இதற்கு மாறாக உபகரணங்களின் உதவியுடனான வாழ்வை தொடர்ந்தால் (உதாரணமாக படிகளை பாவிக்காது மின் உயர்த்தியை பாவித்தல், சிறு தூரங்களைக் கூடநடந்துசெல்லாது மோட்டார் வண்டிகளை பாவித்தல் போன் றன)ஆரோக்கியம்பாதிக்கப்பட்டுநோய்வாய்ப்பட நேரிடும். நாம் தினசரி குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். இவ்வாறு உடற்பயிற்சி செய்யவேண்டிய நேரத்தின் அளவானது நபருக்கு நபர் அவரது வயது, நோய் நிலைமைகள் மற்றும் உடற்பருமன் என்பவற்றுக்கேற்ப வேறுபடும். உண்ணு உணவு எரிக்கப்படல் வேண்டும் சக்தி செலவழிக்கப்படல் வேண்டும். இதற்கு உடற்பயிற்சியும் உபகரணங்களின் உதவியின்றி செய்யும்
வேலைகளும் நமக்கு உதவுகின்றன. மாறா சக்தி சேகரிக்கப்படுமாயின் உடல் நிறை அதிகரிக்கும். நீரிழிவு உயர்குருதியமுக்கம் இதய அடைப்பு புற்றுநோய் அதிக கொலஸ்ரோல் பக்க வாதம் போன்ற தொற்றா நோய்கள் குடி கொள்ளும் இடமாக உடல் மாறிவிடும்
சுக வாழ்வுக்கு தகுந்த ஓய்வும்போதியளவு தூக்கமும் மிக அவசியமாகும் உடலின் நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கவும் எலும்புதசை நரம்புபோன்றவற்றின் மீளுருவாக்கத்துக்கும். வளர்ச்சிக்கும் இவை தேவையாகும். எமக்கு தினமும் 7 தொடக்கம் 8 மணித்தியால தூக்கம் மிகவும் அவசியமாகும் நல்லதூக்கமும் ஓய்வும் உடல்வலி, அசதி மனப்பரம் அமைதியற்ற மனநிலை அதிக கோபம்பதற்றம் என்பவற்றை அறவே அகற்றி உற்சாகத்தையும் புதுத் தெம்பையும் வழங்கும். மனதை இலேசாக்கி முகத்தில் வசீகரத்தையும் வார்த்தைகளில் கணிவையும் ஏற்படுத்தும் இது வீட்டிலும் சமூகத்திலும் அன்பையும் சுமுகமான உறவையும் வளர்த்து வாழ்க்கையை அர்த்தம்நிறைந்ததாக மாற்றும்.
மருத்துவர்.பொ.ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி
மாநகரசபையாழ்ப்பாணம்